கூடங்குளம் - சில விளக்கங்கள்
சில தினம் முன் ராகுல் சித்தார்த்தன் என்ற விஞ்ஞானி எழுதிய கூடங்குளம் அணு உலை குறித்த The real questions from Kudankulam என்ற நாளிதழ் கட்டுரையை ட்விட்டரில் பகிர்ந்திருந்தேன். இரு தினம் முன் ரகுபதி ராஜா இது குறித்த சில கேள்விகளை முன்வைத்து ஒரு விரிவான ட்விட்லாங்கர் போட்டிருந்தார். அதற்கான பதில்களை இங்கே தருகிறேன்: ******* நீங்கள் கொடுத்த இந்த கட்டுரை படித்தேன். நன்றி, ரகு. முதலில் ட்விட்டரில் இருக்கும் உங்கள் விளையாட்டுத்தனமான பிம்பத்தை உடைப்பது போல் இவ்வளவு விரிவாய்க் கேள்விகள் கேட்டதற்கு kudos. இதைப் பற்றி எழுத எனக்கு சந்தர்ப்பம் அமைத்துத் தந்தமைக்கு வந்தனம். மிக நுண்ணியமாக நடுநிலை பேசுவதுபோல் பாசாங்கும் கட்டுரை இது. இந்தக் கட்டுரை நடுநிலை பேசவில்லை. அப்படிப் பேசுவதாக claim செய்யவுமில்லை. விஞ்ஞானம் ஏற்படுத்தியிருக்கும் ஒரு சமூக பிரச்சனை பற்றி ஒரு விஞ்ஞானி தன் கருத்துக்களைப் பதிவு செய்திருக்கிறார். அவ்வளவே. இரு தரப்புக்கும் பாயிண்ட்ஸ் சொல்கிறார் என்று நாமாக நடுநிலைமை என்று முத்திரை குத்தலாகாது. வேண்டும், வேண்டாம் என்று இரு தரப்புகள் இருப்பது போல் சில விஷயங்களை ஒழுக்கமாகச