Posts
Showing posts from August, 2010
சகா : சில குறிப்புகள் - 13
- Get link
- Other Apps
தீபிகா படுகோன் தோன்றும் சோனி டிஜிட்டல் கேமெரா விளம்பரம் பார்த்து விட்டு சகா சொன்னது - " கைகளில் CyberShot-ஐயும் கண்களில் SniperShot-ஐயும் வைத்திருக்கிறாள்! ". ******* Yet another தீபிகா tit-bit. தன்னைப் போலவே இருக்கிறாள் என்ற ஒரே காரணத்திற்காகவே ஒரு பெண்ணை டேட் செய்த ஆசாமியை தனது மறக்க முடியாத ரசிகர் என்று மே 19, 2010 தேதியிட்ட ஃபெமினா இதழில் தீபிகா படுகோன் சொல்லியிருந்ததைக் குறிப்பிட்டு, " என் கதை அப்படியே உல்டா. நான் டேட் செய்து கொண்டிருக்க்கும் பெண்ணைப் போலவே இருக்கிறாள் என்ற ஒரே காரணத்திற்காகவே தீபிகாவிற்கு ரசிகனாக இருக்கிறேன் " என்றான் சகா. Corollary! எனக்கென்னவோ தீபிகா குறிப்பிட்ட ஆளே சகா தானோ என்றொரு சந்தேகமிருக்கிறது. ******* கேம்பஸ் இண்டர்வ்யூக்கள் களை கட்டிக் கொண்டிருந்த எஞ்சினியரிங் இறுதியாண்டுத் தொடக்கத்தில் முக்கி முக்கி ஒரு பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தின் எழுத்துத்தேர்வு தேறி நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தான் சகா. இதில் HR ரவுண்டில் Stress Test என்ற பெயரில் மனதின் அழுத்தம் தாங்கும் சக்தியை சோதிப்பார்கள். பாட்டு பாடுவாயா, சைட்
எந்திரன் இசை - ஒரு பார்வை
- Get link
- Other Apps
' எந்திரன் ' இசை பற்றி எழுதவில்லையெனில் 'பெருசுகள்' லிஸ்டில் சேர்த்து விடுகிறார்கள் என்ற சுரேஷ்கண்ணன் எச்சரிக்கையை முன்னிட்டு இவ்விடுகை! ******* 1. புதிய மனிதா: ரஹ்மான், எஸ்பிபி, வைரமுத்து சேர்ந்து ராஜ்ஜியம் ஆள்கிறார்கள் இப்பாடலில். வழக்கமான ரஜினி இஸ்ட்ரொடக்ஷன் ப்ளேஸ் ஹோல்டர் என்றாலும் இது கொஞ்சம் வித்தியாசமானது தான். " புதிய மனிதா பூமிக்கு வா " என்று ரஹ்மான் குரலில் வருவதில் ' வா 'விற்குப் பின் உடனடியாய் வரும் இசை Lakshya படத்தில் வரும் " Main Aisa Kyun Hoon " பாடலில் (ஹிரித்திக் ரோஷன் வளைந்து நெளிந்து ஆடுவாரே, அதே பாடல் தான். இப்பாட்டிற்கு நடனம் அமைத்ததற்காக பிரபுதேவாவிற்கு தேசிய விருது கிடைத்தது. இசை : ஷங்கர் - ஈஷான் - லாய்) இடையில் வரும் ஓர் இசைத்துணுக்கை நினைவு படுத்துகிறது. கதீஜாவின் (ரஹ்மான் மகள்!) குரலில் வரும் " மாற்றம் கொண்டு வா " ஓர் அழகான கச்சித காலர் ட்யூன். மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். Magical! ஆல்பத்தி ன் மிகச்சிறந்த பாடல் இது தான், சந்தேகமேயின்றி. 2. காதல் அணுக்கள்: இளையராஜாவின் எளிமையுடன் தொடங்