Posts

Showing posts from November, 2011

மற்றுமொரு டிசம்பர் 6

Image
என் ப்ரியத்துக்குரிய எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் புதிய நாவலான எக்ஸைல் (ஆங்கிலப்பெயரா? இதற்கெல்லாம் வரிவிலக்குச் சலுகை இல்லையா?) வரும் டிசம்பர் 6 அன்று காமராஜர் அரங்கில் மாலை ஆறு மணியளவில் நடக்கும் விழாவில் வெளியிடப்படுகிறது. சூழ்நிலை சாத்தியப்படும் ரசிக‌ அன்பர்கள், வாசக‌ ந‌ண்பர்கள் கலந்து கொள்ளுங்கள். தள்ளுபடி விலையில் எக்ஸைல் நாவலை முன்பதிவு செய்து கொள்ள‌: https://www.nhm.in/shop/978-81-8493-204-1.html இந்த‌ நாவலுக்கு சினிமா போல் ப்ரோமோ வீடியோ எல்லாம் செய்து எதிர்பார்ப்பு மீட்டரை எகிறச் செய்திருக்கிறார்கள். அலுவல்கள் கழுத்தை இறுக்கி நெருக்குவதால் 99% நான் கலந்து கொள்ளவியலாது என்றே தெரிகிறது. பார்க்கலாம்.

அணுசக்தியும் எதிர்காலமும்

கூடங்குளம் அணு உலை விவகாரம் உச்சகட்டத்தை எட்டியிருப்பதை ஒட்டி மக்களுக்கு அது குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு முன்னாள் ஜனாதிபதியும் ஒரு கட்டத்தில் இந்திய அணுகுண்டு பரிசோதனைகளைத் தலைமை தாங்கியவருமான ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் இரு கட்டுரைகளை சமீபத்தில் (நவம்பர் 6, 7 தேதிகள்) எழுதி வெளியிட்டார். ஒன்று ஸ்ரீஜன் பால் சிங் என்பவருடன் இணைந்து எழுதிய இந்தியாவின் எதிர்காலத்திற்கு அணுசக்தியின் அவசியம் பற்றிப் பேசும் விரிவான தி இந்து நாளிதழ் கட்டுரை . மற்ற‌து வெ. பொன்ராஜ் என்பவருடன் எழுதிய கூடங்குளம் அணு உலையின் பாதுகாப்பு மற்றும் முக்கியத்துவம் பற்றிய 40 பக்க ஆய்வறிக்கை. இந்த இரண்டாவது கட்டுரையின் தமிழ் வடிவம் ஏற்கனவே அப்துல் கலாமின் வலைதள‌த்திலும் , விகடன், தினமலர் செய்தித்தளங்களிலும் கிடைக்கிறது. முதலாவது கட்டுரையை நான் மொழிபெயர்த்து இன்றைய தமிழ் பேப்பரில் மூன்று பகுதிகளாக‌ வெளியாகி உள்ளது. அணுசக்தியும் எதிர்காலமும் – அப்துல் கலாம் : 1 http://www.tamilpaper.net/?p=4793 அணுசக்தியும் எதிர்காலமும் – அப்துல் கலாம் : 2 http://www.tamilpaper.net/?p=4840 அணுசக்தியும் எதிர்காலமும் – அ

மெல்லினம் இதழில்

ஆஸ்திரேலியாவிலிருந்து கடந்த இரு மாதங்களாக வெளியாகும் புதிய மாத இதழ்; ஆனந்த விகடன் சைஸில் அதே டெம்ப்ளேட்டில் 64 தளதள பளபள பக்கங்க‌ள்; இரா.முருகன், கல்யாண்ஜி, பாவண்ணன், பத்ரி சேஷாத்ரி ஆகியோரின் படைப்புகள்; ஓரிதழின் விலை 2 ஆஸ்திரேலிய டாலர்கள் (இந்திய மதிப்பில் கிட்டதட்ட ரூ.100). இது தான் மெல்லினம் . வெகுஜன இதழ்களில் திரைவிமர்சனம் என்பது முற்றிலும் வேறு ஜாதி - சுருக்கமாக எழுத வேண்டும்; சுவாரஸ்யமாக எழுத வேண்டும்; நடுநிலைமையாக எழுத வேண்டும். மெல்லினம் பத்திரிக்கையின் நவம்பர் 2011 இதழில் 7ஆம் அறிவு திரைப்படத்திற்கு நான் எழுதிய விமர்சனத்தின் எடிட் செய்யப்பட்ட வடிவம் ஒரு பக்க அளவில் வெளியாகி இருக்கிறது. வாய்ப்பும் விருப்பமும் இருப்பவர்கள் வாங்கி வாசிக்கலாம். விமர்சனம் எழுத சந்தர்ப்பமளித்த நண்பருக்கு நன்றிக‌ள்.

கையறு நிலை

* இல்லை என்கிற‌ தொல்லை முடிந்து இருக்கிறது என்ற‌ தொல்லை இப்போது. * மறுப்பதற்கும் வெறுப்பதற்கும் ஏதுமற்ற நிலை கையறு நிலை. * வாய்ப்பற்ற‌ வறட்சியில் ராமர்களாக சீதைகளாக‌ வாழ்ந்து முடிக்கிறோம். * சொல்ல முடியாமல் அழுகிற குழந்தைகள்; சொல்ல முடியாமல் அழவும் முடியாமல் பெரியவர்கள். * நாற்பது வயதாகிறது - வாய்க்கு ருசியாய்த் தின்னக் கேட்பது நாய்க்குணமா? *

ஜெர்ஸிப்பசுவும் பால்காரனும்

Image
ஒரு புதிய‌ மாத இதழுக்காக எழுதப்பட்டு சில காரணங்களால் வெளியாகாமல் போன எனது திரை விமர்சனக் குறிப்பு இது : ******* 7ஆம் அறிவு படத்துக்கு அதன் தயாரிப்பார் பெருஞ்செலவு செய்து ஊடகங்களில் விளம்பரம் செய்து கொண்டிருந்தார் என்றால், அதற்கு நேர்மாறாக செலவேயின்றி டிவிட்டர், ஃபேஸ்புக் முதலான சமூக வலைதளங்களில் வேலாயுதம் படத்துக்கு பொதுமக்களே விளம்பரம் செய்து கொண்டிருந்தார்கள் - ஆனால் எதிர்மறையாக, கிண்டலாக, நக்கலாக (உதாரணம் : " ஒருவரை மட்டும் கொன்றால் அது ஆயுதம்; தியேட்டருக்கு வரும் அத்தனை பேரையும் கொன்றால் அது தான் வேலாயுதம்! "). இந்தியப் புயலான ரா.ஒன் , தமிழ்ச் சூறாவளியான 7ஆம் அறிவு ரிலீஸ் ஆவதன் காரணமாக(வும்) தமிழகத்தின் எந்த ஊரிலுமே பெரிய தியேட்டர்கள் கிடைக்காது ரெண்டாந்தர திரையரங்குகளில் மட்டும் தீபாவளிக்கு வெளியாகிய வேலாயுதம் அத்தனை அனுமானங்களையும் அவமானங்களையும் உடைத்தெறிந்திருக்கிறது. குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா என்று தொடர் தோல்விகளில் உழன்ற விஜய்க்கு காவலன் ஆறுதல் பரிசு என்றால் வேலாயுதம் பம்பர் லாட்டரி. கில்லி, சிவகாசி, போக்கிரி வரிசையில் விஜய்க்கு இன்னொரு

அம்ருதா - நவம்பர் 2011 இதழில்

Image
அம்ருதா நவம்பர் 2011 இதழில் இவ்வருட‌ இயற்பியல் நொபேல் குறித்த எனது விரிவான 5 பக்க கட்டுரை ' பெருங்கூத்து ' (இது பிரமிள் கவிதையின் தலைப்பு!) வெளியாகியுள்ளது. கட்டுரைக்கு நான் வைத்த தலைப்பு ' அசையாச் சிவத்தினிலே '. காலச்சுவடு, உயிர்மை போல் தமிழில் ஒரு முக்கியச் சிற்றேடு அம்ருதா . திலகவதி ஐபிஎஸ் இதன் சிறப்பாசிரியர். தவிர, ஜெயமோகன் வாக்குப்படி தமிழில் தொடர்ந்து வெளிவரும் நான்கு ந‌டுத்தர இலக்கியச் சிற்றிதழ்களுள் ஒன்று அம்ருதா . அதெல்லாம் இருக்கட்டும், அம்ருதா இதழ் ஈரோடு மாநகரில் எங்கே கிடைக்கிறது? தெரிந்தவர்கள் தெரியப்படுத்தவும்.

பரத்தை கூற்று : தமிழ்பேப்பர்.நெட்

தமிழ்பேப்பர்.நெட் இன்றைய இதழில் பரத்தை கூற்று கவிதைத்தொகுதி பற்றிய பதிவர் R.கோபி அவர்களின் விரிவான விமர்சனக் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. அகநாழிகை, புதுப்புனல், அம்ருதா எனப் பல சிற்றிதழ்களில் முயற்சித்து கடைசியாக தற்போது தமிழ் பேப்பரில் வெளியாகிறது. வெளியிட்ட ஹரன் ப்ரசன்னாவிற்கும், மருதனுக்கும் நன்றிகள். பரத்தை கூற்று: கவிதைகளும் சில கேள்விகளும் - http://www.tamilpaper.net/?p=4685 *******