இரு பாடல்கள்
2014 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் புதியவரும் இளைஞருமான பிஎஸ் அர்ஜுன் இயக்க முயன்றிருந்த படத்திற்கு இரண்டு பாடல்கள் எழுதிக் கொடுத்தேன். (1) (Situation: தம் 6 வயது மகள் குறித்து தந்தையும் தாயும் பாடும் ஜனனத்தையும் மரணத்தையும் முன்வைத்த பாடல். 90களில் நடக்கும் கதை.) பல்லவி: (அப்பா) பன்னிரு பாட்டியல்* சொல்லும் இவள் பேதை என்னிரு கண்கள் சொல்லும் இவள் தேவதை தேநீர் கோப்பையின் இறுதித்துளி இனிப்பாய் ஒரு புன்னகையில் சிறுசுவர்க்கம் பரிசளிப்பாள். (அம்மா) வெண்துகில்* பொம்மைகள் இவளைக் கொஞ்சும் விண்மிதக்கும் பறவைகள் இவளைக் கெஞ்சும் முகில்கள் உடைந்து மழையாய் முகிழ்த்தலாய் முலைகள் இன்னும் சுரந்திடும் இவளுக்காய். அனுபல்லவி: (இருவரும்) ஜனனத்தின் ஸ்பரிசத்தை ஆன்மாவில் தூவி மரணத்தின் வாசனையை துரத்துவாள் தூர இவள் குழந்தை இவள் எஜமானி இவள் குரு இவள் அன்னை இவள் தெய்வம் இவள் ஊழ். சரணம் 1: (அம்மா) அதிகாலைத் துயிலெழுந்து குறும்புகள் செய்கிறாள் சேவலையும் சூரியனையும் குழப்பத்தில் மீட்டுகிறாள் பல் துலக்க, குளிப்பாட்ட தந்தையைத் தேடுகிறாள் சொல்லூட்டி சோறூட்ட அம்மையிடம் ஓடுகிறாள். (அப்பா) இடக்கான கேள்விகளில் ஆசிரிய