Posts

Showing posts from May, 2009

படித்தது / பிடித்தது - 46

வலி புரியும்.. அதிகாலையில், அல்லது நள்ளிரவில் மணிக்கணக்கில் க்யூவில் நின்று அட்மிஷன் பாரத்திற்காக நின்ற ஒவ்வொரு தகப்பனின் வலியும் புரிந்திருக்கும் அவருக்கு.. யாருக்கு ? - Keerthivasan Rajamani நன்றி : avyukta

உலகின் சிறந்த தந்தை

இரண்டாம் மனைவியின் முதலாம் மகன் : மத்திய கேபினெட் அமைச்சர் இரண்டாம் மனைவியின் இரண்டாம் மகன் : மாநில துணை முதல்வர் மூன்றாம் மனைவியின் முதல் & ஒரே மகள் : பாராளுமன்ற உறுப்பினர் இளைய சகோதரியின் மகன் வழிப்பேரன் : மத்திய கேபினெட் அமைச்சர் நீதி : தந்தை மகற் காற்றும் நன்றி அவையத்து முந்தி யிருப்பச் செயல்.

ஹாஸ்யத்துக்கு குறைவில்லை

" கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி " என்று பாரதி சொன்னதாக படித்தேன். கவிதை எழுதுவதையே நிறுத்தி விடலாமா என ஒரு கணம் தோன்றியது. ஆனால் தமிழர் நலனை முன்னிட்டு... எப்போதும் ஹாஸ்யத்துக்கு குறைவில்லை. மத்திய கேபினெட் அமைச்சரவையில் அ.ராசாவுக்கு இடம் கிடைத்து கனிமொழிக்கு இடம் கிடைக்காமல் போனதற்கு என் மனைவி சொன்ன காரணத்தை நான் இங்கே எழுதினால் நாளை காலையே என் வீட்டுக்கு சில பல அஸ்திரங்கள் ஆயுதங்கள் சகிதம் ஆட்டோ வரும். எப்போதும் ஹாஸ்யத்துக்கு குறைவில்லை. முன்னிரவில் பெங்களூர் டோமளூர் மேம்பாலத்தில் நின்று எந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தாலும் தொன்னூறு தீபிகா படுகோனேக்கள் தெரிகிறார்கள். பி.எஸ்.என்.எல். உபயத்தில் மின்னொளியூட்டப்பட்ட பாலி வினைல் விளம்பரப் பலகைகள். வியாபாரம் தான் இல்லையென்கிறார்கள். எப்போதும் ஹாஸ்யத்துக்கு குறைவில்லை. நேற்றிரவு உறக்கத்தில் " நர்மதா நர்மதா " என்று நான் உளறிக் கொண்டிருந்ததாக என் மனைவி புலம்பினாள். உண்மையில் நர்மதா என்பது என் அலுவலகத்தில் இருக்கும் டெஸ்டிங்கிற்கு பயன்படும் எங்கள் சொந்தத் தய

படித்தது / பிடித்தது - 45

ஐ.நாவும் இலங்கை இனப்படுகொலையும் - மருதன் நன்றி : marudhang.blogspot.com

கடிதம்: Thamizhagame

அயலகத் தமிழ்ச் சகோதரர்களுக்கு! ஐயன்மீர்! ஈழத்திலுள்ள உங்கள் சகோதரத் தமிழர்களுக்காக நீங்கள் துடிக்கும் துடிப்பும், வெறும் இனஅபிமானத்தால் குறுகியிராத உங்கள் இதயம் மானுட அவலம் கண்டே விம்மிக் கண்ணீர் உகுப்பதைக் காட்ட உங்களுக்குள் நடக்கும் போட்டா போட்டியும் கண்டு நெகிழ்கிறேன். நான் குறிப்பிடுவது அரசியல்வாதிகளை அல்ல. கவிதை எழுதியும், கட்டுரைகளில் இனவுணர்வாய்க் கரைந்துருகியும், களச்செயற்பாட்டின் தேவையுணர்ந்து ஒன்றுகூடிப் பொங்கியும் கவலையை வெளியிட்டுக் கொண்டிருக்கும் கலைஞர்கள், இலக்கியவாதிகள், பத்திரிகையாளர்களைச் சொல்கிறேன். இந்த நாட்டில் தமிழ்மக்கள் மீண்டும் ஒரு பேரழிவுக்குச் சென்றுவிடாதிருக்க நீங்களும்தான் எங்கள் நம்பிக்கை. போரில் வெல்வதை விட போரைத் தவிர்ப்பதே மானுட அவலத்தை நிறுத்தும் வழி என்பதை உங்களுக்கு யாரும் சொல்லிக்காட்ட வேண்டியதில்லை. உங்கள் சகோதரத் தமிழர்கள் படும் கஷ்டங்கள் குறித்து நீங்கள் பரிதவிப்பதும், துயரின் எல்லையில் எதிரிகளைப் பஸ்மமாக்கிவிட முடியாதா என்று ஆவேசமுறுவதும், வரலாற்றின் தொடர் குரூரம் குறித்து வருந்துவதும், ஈழச் சகோதரர்களுக்கு ஏதாவது செய்யமுடியாதா என்று ஏங்குவதும், த

ப‌டித்தது / பிடித்தது - 44

ஒன்பது மணி அலுவலக வாகனத்தில் திணிக்கப்பட்ட ஆண் வாடையில் ஐந்தாவதாய் ஒட்டிக்கொள்ள நான். இந்த அரைமணியில் இருண்ட பனிகாற்றை சுவாசித்தபடி பயணிக்கலாம் பிடித்த பாடலொன்றை முணுமுணுக்கலாம் கிழித்தபடி பின்னகரும் கடைதெருவுக்காய் மிர‌ளலாம் யாரோ பேசும் செல்போனின் ம‌றுமுனை குரலை உற்று கேட்க‌லாம் முடிந்துவிட்ட‌ காத‌ல்க‌ளை வெறுமே அசைபோட‌லாம் இருந்தும் உண‌ர்வ‌ற்ற‌ தொடை உர‌ச‌லை பொருட்ப‌டுத்திய‌வ‌ள்போல் என் இருத்த‌லை வேண்டுமென்றே அசௌக‌ரிய‌மாக்கிக் கொள்கிறேன் ம‌ற்ற‌ மூவ‌ரின் சுவார‌ஸ்யத்திற்காக‌வேனும். - அனிதா நன்றி : இதழ்கள்

படித்தது / பிடித்தது - 43

இந்த ஒரு முறை மன்னிச்சிடுங்க.. நேற்று முதல் எதை சாப்பிட்டாலும் லிப்ஸ்டிக் வாசனை என்றேன். உனக்கு பரவாயில்லை எனக்கு ரத்த வாசனை என்கிறாய். - கார்க்கி நன்றி : சாளரம்

படித்தது / பிடித்தது - 42

சூத்தை பிளந்து இந்தியாவின் இறையாண்மையும் இலங்கையின் இறையாண்மையும் காப்பாற்றப்பட்டது ஈழக்குழந்தையின் சூத்தை பிளந்து - குழலி / Kuzhali நன்றி : குழலி பக்கங்கள்

படித்தது / பிடித்தது - 41

சில சிந்தனைகள் எல்லா௫ம் எல்லாமும் பெற வேண்டும். எனக்கு மட்டும் சற்று கூடுதலாக. - செல்வராஜ் ஜெகதீசன் நன்றி : கவிதையை முன்வைத்து... ############ Dear CSK, I developed my blog as below: www.selvarajjegadheesan.blogspot.com Visit if your time permits and pass me all your comments. Best Regards, S. Jegadheesan Abu Dhabi ############ Jegadheesan, I feel you have the potential. தொடர்ந்து எழுதுங்கள் . CSK

கடிதம்: why no updates?

நேற்று வந்திருந்த‌ ஓர் அனானி பின்னூட்டம்: ############ Anonymous has left a new comment on your post " Toniaவும் 4.7 மில்லியன் டாலரும் " hope and wish dat u and ur family members b fine. y no updates nowadays. expecting more 4m u. sorry if it pressures u. by ur fan ############ Dear Anonymous, I will be surprised if you are not a female. எனக்கும் நிறைய எழுத ஆசை தான். ஆனால் சமீப தினங்களில் அலுவலகத்தில் மிகுந்த பணிச்சுமை. காலை எட்டு மணிக்கு வீட்டை விட்டு கிளம்பினால் வீடு திரும்ப இரவு பத்து மணியாகி விடுகிறது. தவிர என்னுடைய இன்னொரு கெட்ட பழக்கம் என்னவெனில், எந்த நாளென்றாலும் குறைந்தபட்சம் எட்டு மணி நேரம் உறங்கியாக வேண்டும். சில நாட்களாக தினசரி புரட்ட, தொலைக்காட்சி பார்க்க - அவ்வளவு ஏன் - மனைவியுட‌ன் சரியாய்ப் பேசக் கூட நேரமில்லை. அதனால் தான் வாசகர் கடிதம், படித்தது பிடித்தது, BEST OF FORWARDS என்று கணக்கு காட்டிக் கொண்டிருக்கிறேன். Anyway, let me.. -CSK

Toniaவும் 4.7 மில்லியன் டாலரும்

Image
கொஞ்ச காலம் முன்பு SocialSpark ல் Antonia Diegah என்கிற பெண் என் மின்‍ அஞ்சலைக் கேட்க, தந்திருந்தேன். அவருடனான கடிதப் போக்குவரத்து - ############ Hello My name is Atonia i saw you today at www.socialspark.com and became intrested in you,i will also like to know you the more,and i want you to send a mail to my email address so i can give you my picture also introduce myself properly to you know whom l am.Here is my email address(toniadiegah@hotmail.com)I believe we can move from here.contact me back direct on this my private e-mail.I will be expecting your response take care of yourself have a nice day, Tonia ############ Hi Tonia, I am 24, Male, Married, Bangalore. Blogging @ www.writercsk.com Love to read books and watch movies. -CSK ############ Hello Dear, How is your day? i hope it is great. I am very happy in your reply to my email. Meanwhile like i told you, my name is Miss Antonia Diegah, I'm 24 years old of age, from Rwanda in Eastern Africa. I am 5.10ft/178cm tall, fair in

சர்வம் - ஓர் உரையாடல்

Image
சர்வம் படம் உனக்கு பிடிக்காததற்கான காரணங்களை ஒன்று இரண்டு மூன்று என்று வரிசைப்படுத்திக் கூறு என்றான் என் நண்பன் 1. விஷ்ணுவுக்கு திரைக்கதை தெரிய‌வில்லை 2. ஆர்யாவுக்கு வசனம் பேசத் தெரிய‌வில்லை 3. திரிஷாவுக்கு நடிப்பு என்பது தெரிய‌வில்லை கேட்டு விட்டு நிதானமாய் சொன்னான் உனக்குத் தான் ரசிக்க தெரியவில்லை நான் மெளனமாய் இருந்தேன் முடிவா என்ன தான் சொல்ற? செம மொக்க .

மக்கள் குரல் : 2009

இன்று வெளியாகிக் கொண்டிருக்கும் 15வது மக்களவை தேர்தல் முடிவுகள் மூலம் தமிழக மக்கள் சில முக்கிய விஷயங்களை முன்வைக்கிறார்கள்: இலங்கை பிரச்சனையும் பாராளுமன்ற தேர்தலும் வேறு வேறு கருணாநிதியின் மீதான நம்பிக்கை இன்னும் குறையவில்லை என்ன நடந்தாலும் கொங்கு தேசத்தில் இர‌ட்டை இலை தான் தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறுபவர்கள் தேவையில்லை காங்கிரஸுக்கு ஓட்டு போடுவது கைக்கு; தலைகளுக்கு அல்ல‌ பிஜேபி, பிஎஸ்பி போன்ற கட்சிகள் தேர்த‌லில் நிற்பதே தெரியாது சீமான் பாரதிராஜாவின் தயவில் மதிமுகவுக்கு ஒரு தொகுதி விஜயகாந்துக்கும் பாராளுமன்றத்துக்கும் சம்பந்தமுமில்லை நடிகர்களின் ஜிகினாத்தனங்களுக்கு தேர்தலில் வேலையில்லை ஊழல், அதிகார துஷ்பிரயோகம் செய்தால் பிரச்சனையில்லை கட்டபஞ்சாயத்து, ரவுடித்தனம் செய்தால் இன்னமும் உத்தமம் அரசு அதிகாரிகளுக்கு புத்திஜீவிகளுக்கு அரசியல் தெரியாது ரிசர்வட் தொகுதி தவிர மற்றவற்றில் தலித் வெல்ல முடியாது எம்.பி. தேர்தலில் நிற்கும் சுயேச்சைகளுக்கு அனுதாபங்கள் தேர்தல் கருத்து கணிப்புகளில் பொய் சொல்லித்தான் பழக்கம்

கடிதம்: From Malayalathan

Hi... My name is Malayalathan A.K.A Kaba... I came to know ur website though charonline.com... Since then I check ur blog everyday... Ur blog is interesting... Keep it up.... ############ Kaba, "everyday" is a pressure - cheers! -CSK

கடிதம்: நடை, சொல்லாடல்

உங்கள் நடை, சொல்லாடல் மிகவும் அருமை தங்களின் writerCSK ப்ளோகில் ...... பிரமிப்புடன் Krishnaa..@Ramakrishnan.V(Balaji) வாழ்க வளமுடன் ############ Krishnaa, வாழ்க வளமுடன். -CSK

படித்தது / பிடித்தது - 40

சல்லிக்கற்கள் மிர்தாத், சாகுந்தலம், ஆழ்வார்கள், பாஷோ, ரஷ்கின், ரஷ்புதின், ஹைபோ நீடில் தியரி என்னென்னவோ பேசினான் வழக்கம்போல டீக்காசு நான்தான் கொடுத்தேன். - செல்வேந்திரன் நன்றி : http://selventhiran.blogspot.com/

கடிதம்: are you a big writer, really?

Hi Writercsk, Have you published in magazine, writernu neeye sollikuvia? Also “Being a writer” nu you write in every blog entry..what have u really written that’s published..give a list..pakalam. Also stop publishing letters like big writers in your blog. Sekhar ############ sekhar, better luck next time. - WRITER csk

இதனால் சகலமானவர்களுக்கும்

இந்தியாவிலேயே இரண்டாவது சிறந்த மேலாண்மைக் கல்வி நிறுவனமான‌ பெங்களூர் ஐ.ஐ.எம். நடத்தும், மூல வருமான வரிக் கழிவு போக விளையாட்டாய் மாதம் சில லட்சம் இந்திய ரூபாய்கள் கையிலேயே சம்பளமாய் வாங்கும் மென்பொருள் துறை இளைஞர்கள் ஆர்வமாய்ப் போட்டியிடும், இரண்டரை வருட எட்டரை லகர பகுதி நேர PGSEM என்கிற பட்டயப்படிப்பிற்கான எழுத்துத்தேர்வு தேறி, நேர்முகத்தேர்வு முடித்து (என்னிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வி " இந்தியாவின் தற்போதைய ஜனாதிபதி யார்? " என்பது. எனக்குப் பதட்டத்தில் 'பிரதீபா பாட்டீல்' என்கிற‌ பெயர் மறந்து போய், " A lady. Some name ends with Patel " என்று உளறிக்கொட்ட, கேள்வி கேட்ட அந்த பெண்மணி என்னை ஊடுருவிப் பார்த்துக் கொண்டே நக்கலாய்க் கேட்டார் " அமீஷா பட்டேலா? " என்று. " Fuck Off " என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்) வெளிவந்து பன்னார்கட்டா சாலை கடந்து எதிரேயிருந்த பேருந்து நிறுத்தத்தை நான் அடைந்த போது அந்த உச்சி வெயிலில் முக்காடிட்டு ஒரு கிழவி பிச்சையெடுத்துக் கொண்டிருந்தார். நான் நேர்முகத் தேர்வில் தேர்ச்சியடையவில்லை.

கடிதம்: வாசகர் கடிதம்

Image
அன்புள்ள சரவணன் அவர்களுக்கு தங்களுடைய பதிவை வேறு ஒரு பதிவின் மூலம் அறிந்து படிக்க ஆரம்பிதேன் ...தங்களுடைய எழுத்துக்கள் படிக்க சுவாரஸ்யமாக உள்ளது . மேலும் அவற்றிற்கான பின்னூட்டம் மற்றும் அதற்கு நீங்கள் அளிக்கும் பதில்களும் ரசிக்க வைக்கிறது. SARKAR பதில்கள் - 8 கேள்வி பதில் 1 திரு அளித்த பின்னூட்டம் மற்றும் அதற்கு நீங்கள் அளித்த பதில் போன்றவற்றை தவிர்கலாமே!!! நான் உங்களுடைய தீவிரமான வாசகனாக, நேர்மையான விமர்சகனாக, எளிமையான சினேகிதனாக இருக்க விரும்புகிறேன். அவ்வளவே. மற்றபடி "தல! சூப்பர்" என்று 'கைப்புள்ள'யின் அடியாட்கள் போலெல்லாம் சொல்ல எனக்கு ஆர்வமில்லை. அது உங்களுக்கும் பிடிக்காது எனறே நம்புகிறேன். தங்கள் நட்பை நாடும் மணி பி . கு : நீங்கள் கார்த்திகா ரஞ்சன் அவர்களுக்கு அளித்த பதில் படித்த பின்பு நான் தமிழில் எழுதும் முதல் மடல் இது ... ############ மணி, நன்றி. அது போன்ற விஷயங்களைத் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை என்பது என் தாழ்மையான கருத்து. மிக முக்கியக் காரணம் அந்த பின்னூட்டங்கள் இரண்டுமே வெறுப்பினாலோ விரோதத்தினாலோ உமிழப்பட்டதல்ல. அது எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் இடை

இசை ஞானி ஆயிரம் - 7

இஞ்சி இடுப்பழகா - தேவர் மகன் மாசறு பொன்னே - தேவர் மகன் வானம் தொட்டு - தேவர் மகன் அட புதியது பிறந்தது - தேவர் மகன் சாந்து பொட்டு - தேவர் மகன் போற்றிப் பாடடி - தேவர் மகன் ஆலோலம் பாடி - ஆவாரம் பூ சாமிகிட்ட சொல்லி - ஆவாரம் பூ அடுக்கு மல்லி - ஆவாரம் பூ நதியோரம் கரையோரம் - ஆவாரம் பூ

படித்தது / பிடித்தது - 39

கோணம் நான் தலைகீழாகத் தலைவாரிக்கொண்டிருப்பதை தலைகீழாகச் சமைப்பதை தலைகீழாக உணவருந்துவதை தலைகீழாக அமர்ந்து குழந்தைக்குப் பாலூட்டுவதை தலைகீழாக புத்தகம் வாசிப்பதை தலைகீழாகவே நின்று தன்னை உற்றுப் பார்ப்பதை அச்சத்துடன் வியந்து பார்த்தபடியிருக்கிறது தோட்டத்து விருட்சத்தில் காய்த்துக் கிடக்கும் வௌவால் - சல்மா நன்றி : பச்சை தேவதை [உயிர்மை பதிப்பகம்]

படித்தது / பிடித்தது - 38

ரகசியங்களின் ரகசியம் "யாரிடமும் சொல்லாதே" என்றே என்னிலிருந்து வெளிப்படும் ரகசியங்கள் என்னிடமே வருகிறது "யாரிடமும் சொல்லாதே" என்று..! - நாடோடி இலக்கியன் நன்றி : http://naadody.blogspot.com/

பாமரர்களும் இலக்கியமும்

கேள்வி : தல என்று தங்களை அழைப்பதை மொத்தமாக ஜால்ரா என்றும், எனவே அதலிருந்து விலகி இருப்பதாகவும் சரவண கார்த்திகேயன் சொல்லுவது ஒருவிதமான branding என்றே தோன்றுகிறது. எவ்வளவோ relational gaps இருப்பினும், ஒரு வாசகன் ஒரு படைப்பாளியைத் தனது நெருங்கிய நண்பனை அல்லது ஆதர்ச தலைவனை அழைக்கும் சொற்களைக் கொண்டு அழைப்பதில் என்ன தவறு ? நியாயமாகப் பார்த்தால் அதுவே மிகப் பெரிய கட்டுடைப்பு எனலாம். புத்திசாலிகள் ஒரு படைப்பை ஆயிரம் வார்த்தை கொண்டு விமர்சித்தால் , சிலாகித்தால் , ஒரு பாமரன் ’ தல , கலக்கிட்டீங்க, சூப்பரு ’ போன்று மூன்று நான்கு வார்த்தைகளில் மொத்தமாகக் கொட்டி விடுகிறான். ஏன் அறிவுஜீவிகள் எல்லாவற்றையும் ஒரு ஒழுங்குக்குள் கொண்டு வர விருப்பப்படுகிறார்கள்? - இலக்கிய ஜால்ராக்கள் பற்றிய எனது கருத்துக்களுக்கு வுஹானிலிருந்து அனீஸ் அஹ்மத் என்பவர் சாருவுக்கு தந்திருந்த எதிர்வினையிலிருந்து பதில் : எனக்கு பாமரர்களைப் பிடிப்பதில்லை.

காலத்தை வென்ற கலைஞன்

Image
ஆசியப்பெருங்கண்டத்துக்கு முதல் நோபெல் பரிசைப் பெற்றுத்தந்தவன் அவன் இந்தியத்துணைக்கண்டத்துக்கு தேசிய கீதம் இயற்றித் தந்த மாபெரும் கவிஞன் இரண்டாவதாய் வங்காள தேசத்திற்கும் அவன் கவிதையே தேசிய கீதம் ஆனது அகிலமே கொண்டாடும் அவனது நூற்றுநாற்பத்தெட்டாவது பிறந்த நாள் இன்று.

படித்தது / பிடித்தது - 37

சிநேகிதிகளின் கணவர்கள் சிநேகிதிகளின் கணவர்களுடனான சிநேகங்களில் எப்போதும் உருவாகிவிடுகிறது ஒரு சதுரங்கக் கட்டம் ஒரு கலைக்கமுடியாத பாவனையின் மர்ம நிழல் ஒரு சர்க்கஸ் கோமாளியின் அபாயகரமான சாகசங்கள் ஒரு அபத்த வெளியில் விரிக்கப்பட்ட வலை சிநேகிதிகளின் கணவர்களுடனான சிநேகங்களில் என் சிநேகிதிகளின் கண்களை முற்றாகத் தவிர்த்துவிடுகிறேன் அவளது ஆடையின் வண்ணங்களை அவளது தேனீரின் ரகசியப் பிரியங்களை மறுதலித்துவிடுகிறேன் அவளைப் பற்றிய ஒரு நினைவை வேறொரு சம்பவத்தோடு இணைத்துவிடுகிறேன் அவளது கணவனைப்போலவே அவளது இருப்பை ஒரு விளையாட்டுப் பொருளாக்குகிறேன் சிநேகிதிகளின் கணவர்களுடனான சிநேகிதங்களில் நாம் அனுமதிக்கப்படுவது ஒரு கருணை அது நம்மிடம் காட்டப்படும் ஒரு பெருந்தன்மை சில சமயம் நம் சிநேகிதிகளுக்கு காட்டப்படும் பெருந்தன்மை நாம் சந்தேதிக்கப்படவில்லை என நம்மை நம்ப வைக்கும் ஒரு தந்திரமான விளையாட்டு சிநேகிதிகளின் கணவர்களுடனான சிநேகங்களில் என் சிநேகிதி எப்போதும் பிசாசுகளின் புதிர்மொழியொன்றைப் பேசுகிறாள் உரையாடல்களின் அபாயகரமான திருப்பங்களை பதற்றத்துடன் லாவகமாகக் கடந்து செல்கிறாள் எதைப் பற்றிய பேச்சிலும் கணவரைப் பற்றி

BEST OF FORWARDS - 37

WHAT A WOMAN WANTS IN A MAN? What I Want In A Man, Original List... (at age 22) 1. Handsome 2. Charming 3. Financially Successful 4. A Caring Listener 5. Witty 6. In Good Shape 7. Dresses with Style 8. Appreciates the Finer Things 9. Full of Thoughtful Surprises 10. An Imaginative, Romantic Lover What I Want In A Man, Revised List... (at age 32) 1. Nice Looking - preferably with hair on his head 2. Opens car doors, holds chairs 3. Has enough money for a nice dinner at restaurant 4. Listens more than he talks 5. Laughs at my jokes at appropriate times 6. Can carry in all the groceries with ease 7. Owns at least one tie 8. Appreciates a good home cooked meal 9. Remembers Birthdays and Anniversaries 10. Seeks romance at least once a week What I Want In A Man, Revised List... (at age 42) 1. Not too ugly - bald head OK 2. Doesn't drive off until I'm in the car 3. Works steady - splurges on dinner at McDonalds on occasion 4. Nods head at appropriate times when I'm talking 5. Usua

படித்தது / பிடித்தது - 36

என்னிடம் பெரிதாக 'வாழ்க்கை எப்படிப் போகிறது' என்று கேட்டான் ரொம்ப நாள் கழித்து சாட்டில் வந்த நண்பன். முன் தினம் சரவணபவனில் பெரிய தோசை வேண்டும் என்று அடம் பிடித்து வாங்கி சாப்பிட முடியாமல் முழித்துக் கொண்டிருந்த சிறுமியைப் பற்றி சொன்னேன். 'அப்புறம் பார்க்கலாம்' என்று மறைந்து போனான். என்னிடம் பெரிதாக எதையேனும் எதிர்பார்க்கிறார்களோ. - முகுந்த் நாகராஜன் நன்றி : veenaapponavan

கடிதம்: Hello CSK

Hi This is XXX. (Just to refresh your memory, I posted my feedback to your opinion about the question "YYY?") From your today's posting (from your email interaction with Charu about Newbooklands store) I got your email and thought I will introduce to you. Your website is good and your thoughts, writings are original. Good work and please keep it up. I am also a regular visitor to new booklands store (i.e., whenever I come to India) I want to share a lot of things in the first emai itself but I am typing this email from my office and hence I would like to be short. In nutshell, I see many similarities between your and my personality, interests in reading etc. except that: 1. I am lazy and usually don't like to write a lot (but I can talk a lot) so, though I have created a blog, I have seldom written anything in the blog. And also living in US with a family keeps typically more busy compared with if you are living in India. I would like to talk to you as well if you d

கடிதம்: mr.gnani e mail id

Dear sir, Please forward me mr.gnani e-mail id i cant find theire e mail id in online r i request to you thanks regards vijayrakshikt ############ Hi Vijay, You can get it from his official home-site (But you need to register before getting it's contents. Sorry Yaar! A bit painful indeed). You can get more info from his orkut profile . I am replying you in public as this may be useful for others too. -CSK ############ Its me sir, I from mumbai mr.gnani doned good job for us about 49`o and i fallowed perfectly 30/04/2009 voting poll in mumbai i was send election commission /chief judge of supreme court i am ready in future for our nation so plz trust me i cant missuse theire e-mail id supose if you give e-mail id i was sited in mumbai i cant possible contact and discussion via telephone what i do any cost i need contact with them Thanking you vijayrakshikt ############ gnani@gnani.net / gnanisankaran@hotmail.com

படித்தது / பிடித்தது - 35

கோபிகிருஷ்ணனின் வாழ்க்கை - அவர் வார்த்தைகளில் : 1 கோபிகிருஷ்ணனின் வாழ்க்கை - அவர் வார்த்தைகளில் : 2 கோபிகிருஷ்ணனின் வாழ்க்கை - அவர் வார்த்தைகளில் : 3 கோபிகிருஷ்ணனின் வாழ்க்கை - அவர் வார்த்தைகளில் : 4 நன்றி : ஜ்யோவ்ராம் சுந்தர்

ஆண்டவன் கட்டளை

சில தினம் முன்பு ஆர்க்குட் கமல்ஹாசன் குழுமத்திலிருந்து எந்த முன் தகவலுமின்றி நான் வெளியேற்றப்பட்டேன். அதே நாளில் அந்த‌ கம்யூனிட்டியின் மாடரேட்டர்களில் மூவர் என் ப்ரொஃபைலைப் பார்வையிட்டிருந்தனர். அவர்களில் ஒருவரிடம் ஸ்க்ராப் பண்ணி காரணம் விசாரித்திருத்தேன். அவரிடமிருந்து வந்த பதில்: http://charuonline.com/April09/saravana.html இதுவும் ஒரு வகையில் ஃபாசிஸம் தான்.

இசை ஞானி ஆயிரம் - 6

கண்ணனுக்கு என்ன வேண்டும் - தனம் கையில் தீபம் - மன‌செல்லாம் நீ தூங்கும் நேரத்தில் - மன‌செல்லாம் இளையநதி இனியநதி - மன‌செல்லாம் என்ன சொல்லி - என் மன வானில் ஆத்தோரத்தில - காசி என் மன வானில் - காசி நான் காணும் உலகங்கள் - காசி புண்ணியம் தேடி - காசி ரொக்கம் இருக்குற - காசி

படித்தது / பிடித்தது - 34

ப.சிவகாமி - நேர்காணல் நன்றி : காலச்சுவடு [ஏப்ரல் 2009 இதழ்]

படித்தது / பிடித்தது - 33

வயதிற்கு வருவது - டாக்டர் என். ஷாலினி நன்றி : http://linguamadarasi.blogspot.com