பரத்தை கூற்று பற்றி கவிஞர் ச.முத்துவேல் அனுப்பிய மின்னஞ்சல் இங்கே: ******* http://thooralkavithai.blogspot.com/2010/11/blog-post.html ******* Wednesday, November 3, 2010 எழுதியது ச.முத்துவேல் at 6:26 PM பரத்தைக்கூற்றும், சாரு நிவேதிதா கூற்றும் அன்புள்ள நண்பர் CSK (சரவணகார்த்திகேயன்) மிகவும் தாமதமான இந்தக் கடிதத்திற்கு முதலில் என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஏனோ, இப்போது எதையுமே எழுதவோ, முன்பு போல் ஆர்வத்தோடு படிக்கவோ இயலாமல் ஒருவித அயர்ச்சியோடும், சோம்பலோடும் இருக்கிறேன். அதனால் தான் உடனடியாக எழுதவில்லை. பரத்தைக்கூற்று நூல் வெளியீட்டு விழாவுக்கு முந்தின நாளே நான் தொகுப்பைப் படித்து முடித்து விட்டிருந்தேன். ஆனாலும் மேற்சொன்ன காரணங்களினால் எழுத முடியவில்லை. இத்தனைக்கும் அன்று நூல் வெளியீட்டு விழா முடிந்த பின்னர், பரத்தைக்கூற்று பற்றி சாருவுக்காகவே எழுதி விட வேண்டும் என்றொரு உத்வேகம் எழுந்திருந்தது. அங்கிருந்த நண்பர்களுடன் கூட நான் இதைப் பகிர்ந்து கொண்டேன். வீடு வந்து சேர்ந்ததும் உத்வேகத்தை லௌகீக வாழ்க்கை இழுத்துக்கொண்டது. நீங்கள் மிகவும் விரும்புகிற, மதிக்கிற ச