Posts

ஒரு நன்னாள்

Image
கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 9, 2016) அன்று 'ஞயம் பட வரை' கட்டுரைப் போட்டியில் வென்றதற்கான‌ முதல் பரிசினை புதிய தலைமுறை ஆசிரியர் மாலன் அவர்களிடமிருந்து சென்னை டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் நடந்த நிகழ்வில் பெற்றுக் கொண்டேன். பரிசளிப்போடு தமிழ் குறித்த ஒரு கருத்தரங்காகவும் இவ்விழா நடந்தது. (என் முதல் கவிதை நூலான 'பரத்தை கூற்று' இங்கே தான் வெளியானது. ஐந்தரை ஆண்டுகள் கழித்து மறுபடி அங்கே.) "தொழில்நுட்ப ரீதியான வளர்ச்சியில் தமிழ் மொழியின் தற்போதைய நிலை, அடைய வேண்டிய இலக்குகள்" என்ற தலைப்பில் மாலன் சிறப்புரை ஆற்றினார். தமிழ் இணையக்கல்வி கழக உதவி இயக்குனர் தமிழ்ப் பரிதி, நாடகவியலாளர் ஆர். அரவிந்தன், The Wagon இதழ் பதிப்பாசிரியர் சித்தன் பிரசாத் ஆகியோரும் கலந்து கொண்டனர். போட்டியையும் நிகழ்வையும் நடத்திய பிரதிலிபி மற்றும் அகம் இதழ் குழுவினருக்கு வாழ்த்துக்கள். தகவல் தொடர்பை ஒருங்கிணைத்த திலீபனுக்கு நன்றி. என் வேண்டுகோளுக்கிணங்க என் கட்டுரையை வாசித்து மதிப்பீடு செய்த அனைவருக்கும் என் அன்பினைப் பதிகிறேன். ஆரம்பத்தில் இப்போட்டியில் கலந்து கொள்வது பற்றி எனக்குத் தயக்கங்க...

ஒரே ரத்தம் [சிறுகதை]

Image
“குழந்தையோட ப்ளட் க்ரூப் உங்க ரெண்டு பேரோடவும் பொருந்தலையே!” டாக்டர் முதலில் சொன்ன போது புவனாவுக்குப் புரியவில்லை. அருகே அமர்ந்திருந்த சசியின் முகத்தைப் பார்த்தாள். அவனுக்கும் எதுவும் புரிந்த மாதிரி தெரியவில்லை. “கேன் யூ எக்ஸ்ப்ளைன்?” - தயக்கமான குரலை சன்னமாய் ஒலிக்க விட்டான் சசி. “உங்க ப்ளட் க்ரூப் ஓ. புவனாவோடவது ஏ. அப்படின்னா குழந்தையோட ப்ளட் க்ரூப் ஏ அல்லது ஓ ஆகத்தான் இருக்க முடியும். ஆனா ஜோதிகாவோட ப்ளட் க்ரூப் பி!” கோர்க்கப்பட்ட, அச்சடித்த தாள்களிலிருந்து பார்வையை விலக்கி கண்ணாடிக்கும் புருவத்துக்குமான குறுஞ்சந்தின் வழி அவர்கள் இருவரையும் ஒருமுறை நிமிர்ந்து பார்த்தாள் மெனோபாஸை மிக நெருங்கும் அந்த மத்திம வயது கைனகாலஜிஸ்ட். “எனக்கு சரியாப் புரியல, டாக்டர். அதில் ஏதும் பிரச்சனையா?” - புவனா கேட்டாள். “அதாவது மெடிக்கலி இது சாத்தியமே இல்ல. இது உங்க குழந்தை தானா?” “வாட்? ஜோ எங்க குழந்தை தான். எங்களுக்குப் பொறந்த சொந்தக் குழந்தை.” தடுமாறியபடி சொன்னான் சசி. புவனா பேச்சற்றுப் போயிருந்தாள். “ம்ம்ம். பெகூலியர்.” - டாக்டர் யோசனையாய் முணுமுணுத்தாள். சசி சட்டெனக் கேட்டான். – ...

இறுதி இரவு [சிறுகதை]

Image
“ இருட்டறையில் ஏதில் பிணந்தழீஇ ” - திருக்குறள் (913) “கன்னிப் பொணம் விழுந்திருச்சு!” ஊர் முழுக்க இதே பேச்சாய் இருந்தது. டீக்கடையில், பொதுக் கழிப்பிடத்தில், வீட்டுத் திண்ணையில், முச்சந்திக் கிணற்றடியில், சீட்டுக் கச்சேரியில், எல்லா இடங்களிலும். “குப்பனுக்கு சொல்லி விட்டாச்சா?” விஷயம் கேள்விப்பட்டவர்களின் முதல் கேள்வி இதுவாகவே இருந்தது. இறந்தது யார்? எப்படிச் சாவு நடந்தது? என்றெல்லாம் பிற்பாடு தான் பேச்சு தொடங்கியது. “சடங்கு எப்ப நடக்குதாம்?” “இதென்னய்யா புதுசாக் கேட்கறீங்க? எப்பவும் போல இன்னிக்கு ராத்திரி தான்.” கண்களில் மின்னும் ஆர்வத்தை மறைத்தபடி மெல்லிய குரலில் கிசுகிசுத்தார்கள். அந்தப் பெரிய வீட்டில் பிணம் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பெட்டியைச் சுற்றி தரையில் ஏராளமான பெண்கள் ஒப்பாரி வைத்திருக்க, ராமசாமி மட்டும் பிணத்தின் முகத்தைப் பார்க்க வாகாக மரச்சேர் போட்டு அமர்ந்து கொண்டு தோளில் இருந்த துண்டின் முனையைச் சுருட்டி வாய்க்கும் மூக்கிற்கும் மத்தியில் வைத்திருந்தார். ஏற்கனவே அழுதிருப்பதும் இனியும் அழத் தயார் என்பதையும் அது சொல்லியது. அவர் வயதொத்தோர் வந்து பிணத்தை வ...

ஞயம் பட வரை

Image
மின்னூல்களின் தளமான ப்ரதிலிபி யும், அகம் மின்னிதழும் இணைந்து  ' ஞயம்பட வரை ' என்ற பேரில் கட்டுரைப் போட்டி ஒன்றினை அறிவித்திருந்தார்கள். ஔவையின் ஆத்திச்சூடியில் ஒருவரி 'ஞயம்பட உரை'. நயமாகப் பேசு என்று அதற்கு அர்த்தம். அதைச் சற்று மாற்றி நயமாக எழுது என்ற பொருளில் போட்டிக்கு இத்தலைப்பைச் சூட்டி இருக்கிறார்கள்! " இன்றைய தமிழர்களின் வாழ்வில் தாய்மொழிக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்ன? அதனை அதிகரிக்க என்னென்ன வழிமுறைகளைக் கையாளலாம்? " என்பது தலைப்பு. அதற்கு என் கட்டுரையை அனுப்பி இருக்கிறேன். தற்போது நடுவர் தீர்ப்பு தவிர்த்து போட்டியின் ஒரு கூறாக வாசகர் விருப்பம் என்பதையும் இணைத்திருக்கிறார்கள். அதாவது பொதுஜனம் படித்துப் பார்த்து படைப்புக்கு மதிப்பிடுவது. இந்த மாதிரி சூப்பர் சிங்கர் மாடல் போட்டிகளில் அவ்வளவாய் ஆர்வம் இல்லாதவன் என்றாலும் இதற்கு நான் எழுதிய கட்டுரை சமீப காலங்களில் நான் எழுதியவற்றில் கடும் உழைப்பையும் சிந்தனைச் செறிவையும் கோரிய ஒன்று என்பதால் விட்டுத் தந்து பின்வாங்க‌ மனமில்லை. அதனால் நட்புக்காக அல்லது மரியாதைக்காக அல்லாமல் நிஜமாகவே ஆர்...

தேவதை புராணம் - மின்னூல்

Image
தேவதை புராணம் என் இரண்டாவது கவிதைத் தொகுதி. ஏழு பருவங்களிலும் ஒரு பெண் தன் காதலனைக் குறித்துப் பாடுவதாய் அமைந்த 150 சிறுகவிதைகளால் ஆனது இந்நூல். தற்போது NewsHunt மூலம் மின்னூலாக வெளியாகிறது. இந்தக் கவிதைப் புத்தகத்திற்கு நான் எழுதிய முன்னுரையை இவ்விடம் வாசிக்கலாம்: http://www.tamilpaper.net/?p=5541 . மின்னூலை வாங்க‌ : http://ebooks.newshunt.com/Ebooks/default/Devathai-Puraanam/b-149624

தமிழ் திரைப்பட விருதுகள் - 2015

Image
#CSKFilmAwards2015 சிறந்த திரைப்படம் - தனி ஒருவன் @archanakalpathi @jayam_mohanraja — சி.சரவணகார்த்திகேயன் (@writercsk) January 2, 2016 #CSKFilmAwards2015 சிறந்த மாற்று திரைப்படம் - காக்கா முட்டை @dhanushkraja @VetriMaaran @Dir_Manikandan — சி.சரவணகார்த்திகேயன் (@writercsk) January 2, 2016 #CSKFilmAwards2015 சிறந்த இயக்குநர் - ராஜமௌலி [பாகுபலி] @ssrajamouli — சி.சரவணகார்த்திகேயன் (@writercsk) January 2, 2016 #CSKFilmAwards2015 சிறந்த திரைக்கதை - மோகன் ராஜா & சுபா [தனி ஒருவன்] @jayam_mohanraja @sureshsubha — சி.சரவணகார்த்திகேயன் (@writercsk) January 2, 2016 #CSKFilmAwards2015 சிறந்த வசனம் - மோகன் ராஜா & சுபா [தனி ஒருவன்] @jayam_mohanraja @sureshsubha — சி.சரவணகார்த்திகேயன் (@writercsk) January 2, 2016 #CSKFilmAwards2015 சிறந்த கதை - ஆர். ரவிக்குமார் [இன்று நேற்று நாளை] @Ravikumar_Tup — சி.சரவணகார்த்திகேயன் (@writercsk) January 2, 2016 #CSKFilmAwards2015 சிறந்த பின்னணி இசை - இளையராஜா [ருத்ரமாதேவி] — சி.சரவணகார்த்திகேயன் (@writercsk)...

நிர்பயம் Vs நிர்மல்யம்

Image
நிர்பயா என்று பரவலாக அறியப்படும் தில்லியைச் சேர்ந்த‌ ஜோதி சிங் பாலியல் வல்லுறவு வழக்கில் தண்டனை பெற்ற‌ குற்றவாளியான மைனர் ரகசியமாக விடுவிக்கப்பட்டிருக்கும் இந்நேரத்தில் பாலியல் மற்றும் பலாத்காரம் சார்ந்த‌ சில விஷயங்களை நம்முடைய‌ இந்தியப் பின்புலத்தில் மறுபார்வை செய்து தொகுத்துக் கொள்ளலாம் எனத் தோன்றுகிறது. மக்கட்தொகை அதிகம் என்பதால் அதே விகிதத்தில் பாலியல் வல்லுறவுகளின் எண்ணிக்கையும் இந்தியாவில் மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் அதிகம் இருப்பதில் ஆச்சரியம் இல்லை. (நியாயமாய் ஒவ்வொரு நாட்டிலும் 1000 பேருக்கு எத்தனை பாலியல் வல்லுறவு நடக்கிறது என்பது மாதிரியான புள்ளி விபரங்களே ஒப்பிடத் தகுந்தவை; ஒட்டுமொத்த எண்ணிக்கை அல்ல.) ஆனால் அதை மட்டும் சொல்லி நாம் தப்பித்துக் கொள்ள முடியாது. ஏனெனில் உண்மையில் நடக்கும் பாலியல் குற்றங்களில் மிகக் குறைந்த சதவிகிதமே வழக்காகப் பதிவாகின்றன. மற்றவை மறக்கவோ, மறைக்கவோ, மௌனமாய்க் கடக்கவோ படுகின்றன. அதனால் உண்மை எண்ணிக்கையை எடுத்தால் இந்தியாவில் பாலியல் வல்லுறவு என்பது பெரும்பாலான நாடுகளை விட‌ மிக அதிகமாகவே இருக்கும் என்றே நினைக்கிறேன். இந்தியாவில் நடக்கும் பாலி...