Posts

தந்தைமையின் முலைப்பால்

Image
குழந்தைகளின் பொம்மைகளாக இருப்பது பொறுப்புகள் மிகுந்த பணி என்று கருதும் அவை தாமும் குழந்தைகளாகவே நடத்தப்பட வேண்டும் என்று நினைக்கின்றன‌ - மனுஷ்ய புத்திரன் ( 'அதீதத்தின் ருசி' தொகுப்பிலிருந்து) * சினிமா பார்த்தெல்லாம் கண்கள் ரெண்டும் பிசுபிசுத்து நிற்பேன் என்று ஒருபோதும் எண்ணியதில்லை. காதல், தவமாய்த் தவமிருந்து, பருத்தி வீரன், சுப்ரமணிய‌புரம், பரதேசி போன்ற ப‌டங்கள் கூட மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தின என்பது தாண்டி கலங்கடித்தது என்று சொல்லவியலாது. ஆனால் இந்த ராம் என்கிற ராட்சசன் என்னைச் சுக்கலாய் உடைத்து விட்டார்.     தங்க மீன்கள் . அன்பும் அழகியலும் இழையோடப் புனைந்திருக்கும் அழுத்தமான செல்லுலாய்ட் கவிதை. இதற்கு முன் வெளியான‌ இதற்கு இணையான படம் என்ன என்று யோசித்தால் மிஷ்கினின் நந்தலாலா தான் நினைவுக்கு வருகிறது. செல்லம்மா என்ற மகளுக்கும் கல்யாணி என்ற தந்தைக்கும் இடையே இயல்பாகவே உயிர்த்திருக்கும் அதீத அன்பின் அதிருசியே இப்படம். கலாப்பூர்வம் என்பதற்கான‌ எந்த சடங்குகளோ சம்பிரதாயங்களோ இன்றி மிகச் சுவாரஸ்யமாகப் பின்னப்பட்ட நேர்த்தியான திரைக்கதை. உறவின் பாசப் பிணைப்பைக் கா...

களிபத்துப்பரணி

Image
வண்ணத்துப்பூச்சியே உன் இறகுகளை விரிக்கும் போது என்ன கனவு காண்கிறாய்... இது ஒரு ஜப்பானிய ஹைக்கூ (மொழிபெயர்ப்பு: மிஷ்கின்). இந்தக் கவிதை அநிச்சையாய் அரட்டைகேர்ளிடம் அழைத்துச் செல்கின்றது. ஒரு கலர்ஃபுல்லான பட்டர்ஃப்ளையின் கனவு அவரது ட்வீட்கள் போலத்தான் இருக்கும் எனத்தோன்றுகிறது. அரட்டைகேர்ள் ( @arattaigirl ) என்பது கோவையைச் சேர்ந்த பிரபல‌ பெண் ட்வீட்டரான சௌம்யா. இன்று அவர் பத்தாயிரம் ஃபாலோயர்களை ட்விட்டரில் கடந்திருக்கிறார். இந்த பிரம்மாண்ட மைல் கல்லின் அருகே நின்றபடி அவர் கடந்து வந்த எழுத்துப் பாதையைத் திரும்பிப் பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கம் - உடன் அவருக்கென‌ சில goodகளும் குட்டுகளும். முதலில் ஒரு சின்ன கணக்கு பார்க்க‌லாம்: கிட்டதட்ட இரண்டே கால் வருடங்கள் - கொஞ்சம் துல்லியம் கூட்டினால் 818 நாட்கள் - இந்தக் கால வரையறையில் இன்றைய அவசர உலகில், தமிழ் வாசிப்புச் சூழலில் ஒருவர் அதிகபட்சம் எத்தனை பேரை தன் எழுத்தால் வசீகரிக்க முடியும் என நினைக்கிறீர்கள்? அதுவும் எந்தப் பிரபலப் பின்புலமும் இல்லாமல் எந்த ஊடக பக்க‌பலமும் இல்லாமல் ஒரு சமூக வலைதளத்தில் மட்டும் எழுதி - 1000 பேர்? 2000 ...

அநிச்சை நகல்கள்

இன்றைய‌ செகண்ட் ஸிட்டிங் ரயில் பயணத்தில் அருகே ஓர் இளங்குடும்பம். கணவன், மனைவி, குழந்தை. குழந்தைக்கு 3 இருக்கும்; மனைவிக்கு குறைந்தபட்சம் 36 (முதலாவது வயது). அக்குழந்தைக்கு உணவூட்ட அப்பெண் நேடுநேரமாய் முயற்சித்துக் கொண்டிருந்தார். ம்ஹூம். குழந்தை (சம்)மதியேன் என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தது. பிறகு அந்த ஆள் தன் பையிலிருந்து ஐபேட் எடுத்து ஆங்க்ரி பேர்ட்ஸ் விளையாடிக் காட்ட ஆரம்பித்தார் அந்தக் குழந்தைக்கு. உற்சாகமான குழந்தை அதைப் பார்த்துக் கொண்டே ஏதோ பேசியபடி சமர்த்தாய் சோறுண்ணத் தொடங்கியது. இதைப் பார்த்ததும் எனக்கு சட்டென ஒரு ட்வீட் தோன்றியது: " அம்மா ஊட்டாத சோற்றை ஆங்க்ரி பேர்ட் ஊட்டும் ". அதை மொபைலில் டைப் செய்தும் விட்டேன். ஆனால் ஏதோ உள்ளுணர்வில் உறுத்தவே தேடிப் பார்த்ததில் கிடைத்தது இது! அம்மா ஊட்டாத சோறு அப்பளம் ஊட்டும்:-) #பொறியல் செய்யலை — சௌம்யா (@arattaigirl) April 22, 2012 நீதி : ஏற்கனவே நான் பலமுறை சொன்னது தான். சில விஷயங்களை காப்பி எனத் தட்டையாய் சொல்லி விட முடியாது. படித்த பாதிப்பில் மிகப் பிடித்துப் போனதில் வார்த்தையோ வாக்கியமோ அதன் பகுதியோ அப்...

நிசப்தத்தின் பேரோசை

Image
ஆழம் - ஜூலை 2013 இதழில் ஜியா கான் தற்கொலை குறித்த என் கட்டுரை வெளியாகியுள்ளது. அதன் முழு வடிவம் இது. ******* “தற்கொலை என்பது உச்சகட்ட கோழைத்தனம் தான்; ஆனால் அதைச் செய்து கொள்ள உட்சபட்ச துணிச்சல் தேவை.”  – ட்விட்டரில் @arattaigirl சௌம்யா இந்தியத் திரையுலகில் உடனடித் துணிச்சல் போர்த்திய, உள்ளே கோழைத்தனம் மண்டிய பெண்டிர் மிகுதி. அதனால் நடிகைகள் தற்கொலை செய்வது தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் போல் வழமையான வருடாந்திர நிகழ்வாகி விட்டது. நீளும் இப்பட்டியலின் மிகச்சமீபத்திய இணைப்பு இந்திப்பட நடிகை ஜியா கான். கடந்த ஜூன் 2ம் தேதி இரவு 11:45 மணியளவில் மும்பையின் ஜுஹூவிலிருக்கும் தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் 25 வயதான ஜியா கான். ஏன்? பார்க்கலாம். ந‌ஃபீஸா கான் என்ற இயற்பெயர் கொண்ட ஜியா கான் நியூயார்க்கில் பிறந்தவர். லண்டனில் வளர்ந்தவர். நல்ல வசதியான முஸ்லிம் குடும்பம். அம்மா ராபியா கான் முன்னாள் இந்தி நடிகை. அந்தப் பிறவித் தொடர்பிலும் தன் 6வது வயதில் ராம் கோபால் வர்மாவின் ரங்கீலா படம் பார்த்த பாதிப்பிலும் ஜியாவை சினிமா சுண்டி இழுத்தது. இத்தனைக்கும் பள்ளியில் ந...

மோடியை முன்வைத்து பத்ரிக்கு சில கேள்விகள்

டியர் பத்ரி, இட்லிவடை தளத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்வைத்து பார‌திய ஜனதா கட்சி மற்றும் நரேந்திர மோடியைப் பற்றி (அவர் பெயர் மோடி அல்ல, மோதி என்று உங்கள் பதிவிலிருந்து அறிய நேர்ந்தது. நான் மோடி என்றே உச்சரித்துக் கொள்கிறேன், தமிழில் கேலி செய்ய அது தான் வசதி!) நீங்கள் எழுதிய‌ மூன்று கட்டுரைகளையும் ( 1 , 2 , 3 ) வாசித்தேன். அவற்றில் முதல் இரண்டு பற்றி - நரேந்திர மோடியை ஹீரோவாய் முன்னிறுத்தியது தவிர‌ - பெரிய ஆட்சேபங்களோ, விலகலோ இல்லை. சொல்லப் போனால் அந்த அலசல் பிடித்திருந்தது (அதை நேற்று ட்விட்டரில் பதிந்தும் இருந்தேன்). நரேந்திர மோடி பாஜகவின் பிரச்சாரக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை justify செய்தும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி சார்ந்து பாஜகவின் லாப நஷ்டக் கணக்கு பற்றியும் எழுதி இருந்தது வரை எந்தப் பிரச்சனையும் இல்லை. அவர் இந்த தேர்தல் பரிட்சையில் வெற்றி பெறுவார் என மோடி Vs Rest of BJP, மோடி Vs Rest of All Indian Parties அடிப்படையில், அவரது ஆளுமையின் மீதான ப்ரியத்தில் சொல்லி இருந்தது வரையிலும் கூட பிரச்சனையில்லை. ஆனால் இன்றைய பதிவில் சில நெருடல்கள் இருக்கின்ற...

முதல் நரை

மழிக்காத‌ மீசையில் சிரைக்காத‌ தாடியில் வரலாம் மிகக் கச்சிதமாய்ச் செதுக்கிய கிருதாவில் வரலாம் மார்பில் அடர்ந்திருக்கும் மயிர்க்கொத்தில் வரலாம் லக்ஷம் தலைமுடிகளில் எதாவதொன்றில் வரலாம் ரகசிய ப்ரியத்துடன் மறைப்பின் சௌகரியத்துடன் ஆண் குறியில் அல்லது ஆசன வாயில் வரலாம் - ஓரிரு எச்சரிக்கைகளை சிற்சில‌ அறிவிப்புக்களை மௌனமாய்ப் பகிர்கிறது அந்த ஆதிரோம வெள்ளி மனைவியிடம் சிரித்துப் பேச‌ ஞாபகப்படுத்துகிறது குழந்தைகளுடன் விளையாட‌க் கூவிய‌ழைக்கிறது பெற்றோர்களை கவனித்துக் கொள்ளச் சொல்கிறது பால்ய நண்பர்களை ஆசிரியர்களை தேடச்செய்கிறது புதைந்த காதல்களை துரோகங்களை அவமானங்களை முட்டாள்தனங்களை வக்கிரங்களைத் தோண்டுகிறது பொய்பேசுதலை புறங்கூறுதலை நிறுத்தக் கோருகிறது பயங்கொள்தலை சினங்கொள்தலை குறைக்கக் கேட்கிறது படிக்காத புத்தகங்களை பார்க்காத திரைப்படங்களை புசிக்காத புலாலுண்டிகளை ருசிக்காத மதுப்புட்டிகளை முடிக்காத பயணங்களை புணர்ந்திராத‌ பெண்களை செய்யாத பாவங்களை மனதில் ஓங்கி அறைகிறது கூழாங்கற்கள் சகிதம் கதை பேசும் ஒரு ஜென் குரு போல் மரணத்தின் இளஞ்சுகந்தத்தை மானசீகமாய் முகரத் த‌ந்து என்றோ த...

ஒரு தசாப்தத்தின் ஸ்வப்னம்

Image
இது என் பத்து வருடக் கனவு. 2000ங்களில் தொடக்கத்தில் ஏதோ ஒரு வருடத்தில் தான் முதன் முதலாக‌ ஆனந்த விகடனுக்கு என் படைப்பு ஒன்றை அனுப்பினேன். அது ஒரு விஞ்ஞானச் சிறுகதை. பெயர் நியூட்டனின் மூன்றாம் விதி . துரதிர்ஷ்டவசமாய் அது இன்னமும் எதிலும் பிரசுரமாகவில்லை. பிற்பாடு இந்த பத்தாண்டுகளில் கவிதைகள், சிறுகதைகள் என நான் முக்கியமாய் முயன்ற அத்தனை ஆக்கங்களையும் ஒரு ராணுவக்கடமை போல் முதலில் ஆனந்த விகடனுக்குத் தான் அனுப்பி இருக்கிறேன். பள்ளி நாட்களில் என் வீட்டில் குமுதம் தான் வாங்குவார்கள். ஆனாலும் பக்க‌த்து வீட்டில் வாங்கிய ஆனந்த விகடன் தான் அதிகம் ஈர்த்தது. அப்போதைய அதன் அத்தனை வசீகர உள்ளடக்கங்களையும் தாண்டி சுஜாதா ஒரு முக்கியக் காரணம். அதனால் தான் அதில் என் எழுத்து வருவது என்பது மஹாஸ்வப்னமாகத் தோன்றியது. அதனால் தான் முதன்முதலில் என் ட்வீட் விகடனில் வந்த போது கூட மிகுந்த மகழ்வுற்றேன் (விகடனுக்கும் அது தான் முதல் வலைபாயுதே !). ஆனால் அது என் அப்பீல் இன்றி அவர்களாகப் பார்த்துத் தேர்ந்தெடுப்பது. அதனால் குமுதத்தில் சிறுகதை, கட்டுரை வந்தாயிற்று, குங்குமத்தில் தொடர், கவிதை வந்தாயிற்று ஆனால் விக...

சுஜாதா Birthday Special

சுஜாதாவின் பிறந்த நாளான இன்று (மே 3) எனது சிறுகதை ஒன்று தமிழ் பேப்பர் இணைய இதழில் வெளியாகி உள்ளது: மதுமிதா : சில குறிப்புகள் - http://www.tamilpaper.net/?p=7714 இது கொஞ்சம் experimental சிறுகதை. கிட்டதட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிற்றிதழுக்காக எழுதப்பட்டது. அவ்விதழ் வராததால், பின் சில‌ வெகுஜன இதழ்களுக்கு அனுப்பப்பட்டு, நிராகரிக்கப்பட்டு (ஓரிடத்தில் சொல்லப்பட்ட காரணம்: இது பத்தாண்டுகளுக்கு பின்பு எழுதப்பட வேண்டிய சிறுகதை), திருத்தப்பட்டு இப்போது என் சிறுகதைத் தாய் வீட்டின் வழி வெளியாகிறது. தாய் வீடு எனக் குறிப்பிட காரணம் என் முதல் சிறுகதையான E=mc 2 தமிழ் பேப்பரில் தான் வெளியானது - அது சுஜாதாவின் நினைவு தினத்தன்று. இன்று அவர் பிறந்த தினத்தில் அவர்   தொடங்கிய‌ சிறுகதைப் பரிசோதனை விளையாட்டை நானும் முன்னெடுத்துச் செல்வதை அவருக்குச் செய்யும் tribute-ஆகக் கருதுகிறேன்.

கமல்ஹாசனின் அவதாரங்கள்

Image
ஷியாம் வெங்கட்ராமன் என்ற 20 வயது இளைஞர் கம‌ல்ஹாசன் திரைப்பட கேரியரின் முக்கியக் கதாபாத்திரங்களின் கெட்டப்களை ஓவியங்களாகத் தீட்டி இருக்கிறார். இவற்றையெல்லாம் ஒட்டுமொத்தமாய்ப் பார்த்தால் கமல்ஹாசன் என்ற பெருங்கலைஞனின் ஆளுமை வீச்சை உணரலாம். கமல்ஹாசனே மயிர்கூச்செரியும் உண்ர்வு ஏற்படுத்தியதாக புளகாங்கிதம் அடைந்திருக்கிறார்! நிஜமாகவே அசுர உழைப்பு. ஷியாமுக்கு வாழ்த்துக்கள்! உடன் நிறைய நன்றிகளும்! ஓவியங்களின் தொகுப்பு : | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | ******* [1959 to 1977] [1977 to 1981] [1981 to 1986] [1986 to 1993] [1994 to 2013] *******

கள்ளிச்செடி வளர்ப்பவன் - சில கருத்துக்கள்

Image
அழகியசிங்கர் நடத்தி வரும் நவீன விருட்சம் இணையதளம் எனக்கு பல இளம் நவீன கவிஞர்களை அறிமுகப்படுத்தியது. அதில் ஒருவர் லதாமகன் . அதில் வந்த அவர் கவிதை ஒன்றினை படித்தது / பிடித்தது தொடரில் குறிப்பிட்டிருந்தேன் . பின் ஆனந்த விகடனில் அவரது கவிதைகள் வெளியான போதும் கவனித்திருந்தேன். இடையில் என் பரத்தை கூற்று நூலிற்கு ஒரு விமர்சனம் எழுதிய வகையில் மற்றுமொரு தொடுகை. பிற்பாடு ட்விட்டர் மூலமும் ஓரளவு பழக்கமானார். பிறகு அரட்டைக்குத் திரட்டையவை போட்ட போது விடுபட்டதற்காக நான் வருந்திய இருவரில் லதாமகனும் ஒருவர். லதாமகன் கள்ளிச்செடி வளர்ப்பவன் என்ற தன் முதல் கவிதைத் தொகுப்பை அனைவருக்கும் கிடைக்கும் வண்ணம் இலவச மென்னூலாக வெளியிட்டிருக்கிறார்: http://issuu.com/lathamagan/docs/poems-1?mode=window&viewMode=doublePage மொத்தம் 54 பக்கங்கள். 50 கவிதைகள். உட்கார்ந்தால் ஒரே மூச்சில் 15 நிமிடத்தில் படித்து முடித்து விடலாம் என்றாலும் அது கவிதைக்கு செய்யும் மரியாதையாகா என்பதால் நேற்றிரவும் இன்றும் மூன்று முறை முழுக்க வாசித்து விட்டு சில‌ கருத்துக்கள் பகிரத் தோன்றியதால் இங்கே எழுதிக் கொண்டிருக்கிறேன். ...