Posts

மீண்டும் விகடனில்...

Image
ஆனந்த விகடன் 28.07.2010 தேதியிட்ட இதழின் வலைபாயுதே பகுதியில் மீண்டும் எனது ட்வீட் இடம் பெற்றுள்ளது. சில வரி கொண்ட சிறுபடைப்பு என்ற போதிலும் தொடர்ந்து வெளியாவது சந்துஷ்டி அளிக்கிறது. சைபர் ஸ்பைடர் யாராயிருந்தாலும் வந்தனம். பாரா, பேயோன், மாயோன், அடியேன் வரிசையில் பெயரில் writer என்ற prefix உடன் ட்விட்டர் களத்தில் புதிதாய்க் குதித்திருப்பவர் writerzero (பாரிஸ்). விஷய‌த்தை எனக்கு முதலில் தெரியப்படுத்திய அவருக்கும் என்னுடைய‌ நன்றிகள் உரித்தாகுக.

ஆனந்த விகடனில்...

Image
இந்த வார ஆனந்த விகடன் (7.7.10 தேதியிட்ட இதழ்) பக்கம் 110ல் வலைபாயுதே என்ற தலைப்பில் சில‌ (இங்கு 'சில' என்பத‌ற்குப் பதிலாக‌ 'பிற' என்று போடலாமா என யோசித்துக் கைவிட்டேன் - காரணம் திருக்குறளின் பதின்மூன்றாம் அதிகாரம்) இந்தியப் பிரபலங்களின் ட்வீட்களோடு அடியேனின் ட்வீட்டும் இடம் பெற்றுள்ளதாக அறிகிறேன். இன்னும் நான் பார்க்கவில்லை. உடன் இடம் பெற்ற சச்சின் டெண்டுல்கர், ஷாரூக் கான், செல்வராகவன், சேரன், அசின், ஷ்ருதி ஹாசன், ஷெர்லின் சோப்ரா, நமீதா , சிம்பு ஆகியோருக்கு வாழ்த்துக்கள். முதலில் எனக்கு தகவல் சொன்ன சான் பிரான்சிஸ்கோ ஆனந்த் அவர்களுக்கு நன்றிகள். இதழ் தற்போது கடைகளில் கிடைக்கிறது. உங்கள் பிரதிக்கு முந்துங்கள்!

அகநாழிகை - தொடர்ச்சி

அகநாழிகை இதழை அறிமுகம் செய்து நான் எழுதிய பதிவில் சொல்ல‌ப்பட்டிருந்த சில கருத்துக்களுக்குப் பதிலளித்து இதழின் ஆசிரியர் பொன்.வாசுதேவன் அவர்கள் எனக்கு ஒரு நீண்ட மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். இதழ் குறித்து என் பார்வையில் தப்பியிருந்த அல்லது தப்பாயிருந்த சில விஷயங்கள் அதில் தெளிவாக்கப் பட்டிருந்தன. ஆனால் அது எனக்குத் தனிப்பட்ட முறையில் அவர் எழுதிய‌ கடிதம் என்பதால் இங்கே பகிர இயல வில்லை. பிறிதொரு சமயம் அதைக் குறித்து விரிவாய்க் கதைப்போம். ******* அகநாழிகை - ஜூன் 2010 இதழின் உள்ளட‌க்கம்: நேர்காணல்கள் : ''நவீனத்துவம் என்பது உத்தியில் இல்லை'' - எம்.ஏ.நுஃமான் [நேர்காணல் : பஃஹிமா ஜஹான்] ''சுதந்திரம்'' - பால் ஸக்கரியா [நேர்காணல் : ஷோபா வாரியர் - தமிழில் : சி.சரவணகார்த்திகேயன் ] ''காதலின் வரைபடம்'' - அதாஃப் சோயிப் [நேர்காணல் : அமித் ஹுசைன் - தமிழில் : நதியலை] சிறுகதைகள் : பாவண்ணன் அய்யப்ப மாதவன் ரிஷான் ஷெரிப் ஐயப்பன் கிருஷ்ணன் மதியழகன் சுப்பையா கட்டுரைகள் : கலாப்ரியா ஜெயந்தி சங்கர் அஜயன்பாலா நதியலை ஆர்.அபிலாஷ் வாழ்க்கைத்தொடர் : சுபின் மேத்தா - ரா.க...

அகநாழிகை - ஓர் அறிமுகம்

அகநாழிகை ஜூன் இதழ் வெளியாகியுள்ளது. எந்தவொரு சிற்றிதழையும் போல் இன்ன கால இடைவெளியில் இதழ் வெளி வரும் என்று அறுதியிட்டுக் கூறவியலாத நிலையாமையுடன் தான் அகநாழிகை யும் இருக்கிறது. அதன் முதலிர‌ண்டு இரு மாத இதழ்களாக வெளியாயின; பின்னிரு இதழ்கள் மூன்று மாத இடைவெளியில் வெளியாகி இருக்கின்றன. சற்றேரக்குறைய அல்லது உத்தேசமாக அகநாழிகை யை ஒரு காலாண்டிதழாகக் கொள்ளலாம். தற்போது வெளியாகி கடைகளில் கிடைத்துக் கொண்டிருக்கும் இந்த ஜூன் மாத இதழ் அதற்கு முந்தைய மூன்று இதழ்களைக் காட்டிலும் வடிவ‌மைப்பில் நன்றாகவே வந்திருக்கிறது. அட்டையின் தாள், முகப்புப் படம், தாள்களின் தரம், எழுத்துக்கள், லேஅவுட் எல்லாமே ஓரளவு நல்ல நிலையை எய்தியிருக்கிறது. ஆனால் உள்ளடக்கத்தின் பரிணாம‌ம் குறித்த‌ திருப்தி சற்றே விவாதத்திற்குரியதாக இருக்கிற‌து. என்னைப் பொறுத்தவரை, அகநாழிகை இதழுக்கு தற்போதைய‌ அவசரத் தேவை இரண்டு:‌ 1. அத‌ன் வாசகர்களை அதிகமாக்குவது 2. அதில் எழுதுபவர்களை அதிகமாக்குவது. இதில் பின்னது முன்னதைக் காட்டிலும் முக்கியமானது. அதன் ஒரு பகுதியாக இதழின் ஆசிரியர் குழு விரிவாக்கத்தைக் கொள்வது நல்லது. தற்போதைக்கு வாசுதேவன் ஒருவரே...

BEST OF FORWARDS - 40

Image
how to identify a MALE snake?

BEST OF FORWARDS - 39

Image

செகண்ட் இன்னிங்ஸ்

Image
அகநாழிகை : ஜூன் 2010 இதழில் 'சுதந்திரம்' பற்றி‌ மளையாள எழுத்தாளர் பால் ஸக்கரியா ஷோபா வாரியருக்கு (rediff.com) அளித்த‌ நேர்காணல் - மொழிபெயர்ப்பு என்னுடையது - வெளியாகியுள்ளது. உடன் எனது சில கவிதைகளும். மேலும் விவரங்களுக்கு - http://www.aganazhigai.com/2010/05/2010.html

சகா : சில குறிப்புகள் - 12

Image
ச‌கல தேசங்களின் கலாசாரப் பின்புலங்களிலிருந்தும் நம் சகாவுக்கு பெண்வழித் தொடர்புகள் உண்டு என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதிலொருத்தி சுப்ரியா (பெயரை ஆதி நீடலுக்கு உட்படுத்தி ஆபாசமாக்கி விட வேண்டாம் எனபது சகாவின் தாழ்மையான வேண்டுகோள்!). பன்னிரண்டாம் வகுப்பில் சகாவின் வகுப்புத் தோழியான இவள் பின் இளங்கலை தத்துவ இயல் படிக்க ஜப்பான் சென்று, தொடர்ந்து அங்கேயே அதே துறையில் முதுகலையும் படித்து கடந்த ஆண்டு தான் இந்தியா திரும்பினாள். ஜப்பானிலிருந்த ஐந்து ஆண்டுகளும் தொடர்ந்து மின் அஞ்சல், மின்னாத அஞ்சல் எல்லாவற்றின் உதவியுடனும் சகவுடனான தனது பரிசுத்த நட்பைப் பேணிப் பாதுகாத்து வந்தவள், இந்தியா திரும்பியதும் செய்த முதல் வேலை சகாவை தன் வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்தது தான். விருந்து என்றால் நீங்கள் நினைப்பது போல் ஆளுயர வாழையிலை இட்டு, தண்ணீர்த்துளி தெளித்து, பொன்னி அரிசிச்சோறு பொங்கி, சாம்பார், குழம்பு, கூட்டு, அவியல், பொறியல், ரசம், தயிர், மோர், அப்பளம், வடை, பாயாசம் சகிதம் பிரமாதப்படுத்தும் நம்மூர்த் தமிழ்ச்சமையல் அல்ல. ஜப்பானிய பாரம்பரிய முறைப்படியிலான சஷிமி மற்றும் சுஷி என்ற வினிகர் தடவ...

தமிழ் கௌபாய்

Image
இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் . எனக்குத் தெரிந்தவரை, கடந்த 25 ஆண்டுகளில் தமிழில் வெளிவந்திருக்கும் முதல் கௌபாய் படம் இது தான் (கடைசிப் படம் என்ன? - ரஜினி நடித்த தேவரின் தாய் மீது சத்தியம் ?). இது போன்ற மாற்றுக்களங்களில் தான் ராஜாதி ராஜா என்பதை இரண்டாவது முறையாக நிரூபித்திருக்கிறார் சிம்புத்தேவன். டைட்டில் கார்ட் தொடங்கி படம் முழுக்க முழுக்க இஞ்ச் பை இஞ்ச்சாக அவரது அதிரடி அடாவடி அட்டகாச ராஜ்யம் தான். நடிப்பில் ஜொலிப்பவர்கள் நாசரும், எம்.எஸ்.பாஸ்கரும். அப்புறம் அந்த மூன்று அழகான நாயகிகள் (பத்மப்ரியா, லக்ஷ்மி ராய், சந்தியா). அதற்கு அடுத்துத் தான் லாரன்ஸைச் சொல்ல வேண்டும். தவிர‌ மனோரமா, ராகவன் தொடங்கி மௌலி, இளவரசு வரையிலான‌ நட்சத்திரங்கள் எல்லோரைப் பற்றியும் தனித்தனியே குறிப்பிட வேண்டிய அவசியமில்லை என நினைக்கிறேன். ஒளிப்பதிவும் (அழகப்பன்), கலை இயக்கமும் (முத்துராஜ்) தான் இந்த பீரியட் படத்தின் தொழில்நுட்ப முதுகெலும்பு. திரைக்கதையும் ஓக்கே. பொதுவாய்ப் பின்னணி இசையில் மிளிரும் சபேஷ்-முரளி (இரும்புக்) கோட்டை விட்டிருக்கிறார்கள்.‌ பாடல்கள் பற்றியும் ஒன்றும் சொல்வதற்கில்லை. தேசிய விருது பெற்ற...

அவ்வப்போது கிறுக்கியவை

எனக்கு பெண்களின் புத்திசாலித்த‌னத்தின் மேல் எப்போதுமே அத்தனை பிரமாதமான மரியாதையில்லை என்பதை (அதற்கான நியாய தர்க்கங்களும், வரலாற்றுக் காரணங்களும் ஆந்த்ரபோலஜியில் ஒளிந்திருக்கின்றன என்ற போதிலும்) ஆங்காங்கே நேரடியாகவும் மறைமுகமாகவும் பதிவு செய்து வந்திருக்கிறேன். விதிவிலக்குகள் உண்டு - ஒருவர் அம்பை; மற்றவர் பெயர் சொல்லவியலாது. ஆனாலும் அவர்களைப் பிடிக்கவே செய்கிறது. ******* ரோட்டில் எச்சில் துப்புபவர்களைப் பார்த்தால் சிகரெட்டால் சுட வேண்டுனெத் தோன்றுகிறது; பொதுவிடத்தில் புகைப்பவர்களைப் பார்த்தால் நன்கு காறி உமிழ வேண்டுனெத் தோன்றுகிறது. ******* அவன் சிற்றிதழ்களுக்கு ஆயுள் சந்தா செலுத்துபவன் போல் இருந்தான். ******* விளையும் பயிர் முளையிலே தெரியும்; விளையும் உயிர் முலையிலே தெரியும். ******* ஆண் ஒரு பெண்ணை ஒன்று அம்மனாய்ப் பார்க்கிறான்; அல்லது அம்மணமாய். ******* தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணச்செய்தியால் (கவனிக்கவும் மரணம் அல்ல; மரணச்செய்தி) மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறேன். இதுவும் கடந்து போகும். ******* முகம் பார்த்துப் புணரும் உயிரினம் மன...