ஷ்ருதி ஹாசன் says "Bitch Please!"


ஷ்ருதி ஹாசன் ஒரு 147 விநாடி வீடியோவை எழுதிப் பேசி நடித்திருக்கிறார் (இயக்கம் யார்?). அதன் பெயர் Be The Bitch.

ஆங்கிலத்தில் 'Bitch' என்ற சொல் பெண்களை நோக்கிய வசைச் சொல்லாகக் காலம் காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது (உத்தேசமாய் 15ம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து என்கிறார்கள்). இச்சொல்லின் நேரடி மொழிபெயர்ப்பு பெட்டை நாய் என்பது தான். (அதுவே வசை தான் என்பது வேறு விஷயம்.) ஆனால் அந்த நேரடிப் பொருள் தாண்டி அதன் பயன்பாடு வேறு மாதிரியானது. தமக்குப் பிடிக்காத பெண்களை இழிவு செய்யும் நோக்கில் திமிர் பிடித்தவள் என்ற பொருளில் அச்சொல்லைப் பயன்படுத்துவது வழக்கம். சில நேரம் அதீத காம உணர்ச்சி கொண்ட, ஒழுக்கம் தவறிய பெண் என்ற பொருளிலும் பிரயோகிப்பர். சமீப காலத்தில் இதன் பயன்பாடு அதிகரித்து வருவதைக் கீழே க்ராஃபில் காணலாம்.


இப்படியான பயன்பாட்டைப் பெண்ணியவாதிகள் தொடர்ந்து எதிர்த்து வருவதும், ஒரு கட்டத்தில் அச்சொல் தங்களை இழிவு செய்யவில்லை என்று சொல்வதும் நடந்திருக்கிறது. ஜோ ஃப்ரீமன் என்ற அமெரிக்கப் பெண்ணியவாதி The BITCH Manifesto என்ற கட்டுரை ஒன்றை 1968ல் எழுதி இருக்கிறார். அதில் Bitch என்ற சொல் பெண் முன்னேற்றத்தையே குறிக்கிறது என்கிறார். (அதை இங்கே வாசிக்கலாம்: http://www.jofreeman.com/joreen/bitch.htm.) Bitch என்ற பெயரில் பெண்ணியக் கருத்துக்களைப் பேசும் காலாண்டு சஞ்சிகை அமெரிக்காவில் இருபதாண்டுகளாக‌ வெளிவருகிறது. ஆக‌, பெண்ணியப் பார்வையில் Bitch என்ற வார்த்தை தங்களை அவமதிப்பதாய்க் கருதவில்லை, மாறாய் அது தங்களை வலுப்படுத்துகிறது என ஆணாதிக்கவாதிகளைப் பார்த்து நடுவிரலைக் காட்டுவது புழக்கத்தில் இருக்கும் ஒரு விஷயமே.

ஷ்ருதி ஹாசன் தன் பாணியில் அதே சங்கதியை இந்த வீடியோவில் பேசி இருக்கிறார். விரலும் குரலும் சிறப்பாகவே கொடுத்திருக்கிறார். ஆக்கமும் நன்று (குறிப்பாய் ஒளிப்பதிவு). உங்கள் குறுகிய சிந்தனைக்குள் அடங்காத, உங்களால் கையாள முடியாத பெண்களைப் பிரித்தறிய Bitch என்ற சொல்லைப் பயன்படுத்துகிறீர்கள் என ஆண்களைப் பார்த்துச் சொல்கிறார். அது தம்மைப் புண்படுத்துவதில்லை என்கிறார். அப்படி நினைப்பவர்களுக்கான செய்தியே இந்த வீடியோ.


Bitch என்பவள் அமைப்புக்கு எதிராய் நிற்கும் ஆசான் என்கிறார். அவள் தன் காதலைச் சொல்லத் தயங்காதவள்; தன் மனம் உடையும் என அஞ்சாதவள்; இல்லை என்பதை இல்லை என்றே நேரடியாகச் சொல்பவள் என்கிறார். இன்னொருபுறம் அவள் தான் விரும்பும் ஆடையை அணிபவள்; தனக்கான உள்ளாடைகளைத் தானே தேர்ந்தெடுப்பவள் என்கிறார்.

கடைசியாய் ஓரிடம் முக்கியமானது. Stud என்பதன் பெண் வடிவம் தான் Bitch என்கிறார். Stud என்றால் அழகன், வசீகரன், மன்மதத்தனங்கள் நிறைந்தவன், பெண்களுக்குப் பிடித்தமானவன். அவனுக்கு முலைகள் இருந்தால் அவளே Bitch என்கிறார் - அதாவது அப்படிப்பட்ட ஆண் எப்படி பெண்களால் விரும்பப்படுபவனாக இருக்கிறானோ அது போல் Bitch என்றழைக்கப்படும் பெண்ணும் உண்மையில் ஆண்களால் கொண்டாடப்பட வேண்டியவள் என்ற பொருளில்.


பாடலாசிரியரான பாப் டிலனுக்கு இலக்கிய நொபேல் அறிவிக்கப்பட்டிருக்கும் நாளில் ஷ்ருதி ஹாசன் எழுதியிருக்கும் இந்த வீடியோ வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது! ;-) அவர் மென்மேலும் இதுபோல் பங்களிப்பு செய்ய வாழ்த்துக்கள்.

*

(தவறாமல் இந்த அழகான‌ வீடியோவைப் பார்த்து விடுங்கள். நிதானமாய் வாசிக்க பாடல் வரிகளைத் தந்திருக்கிறேன்.)

Be The Bitch
 
I was on a phone call the other day and I noticed a word cloaked in a joke - Bitch.

This mongrel of an insult, slipped in to put me in my place.
And what place might that be?
The backseat of the slow moving train of your brain reserved for women
who were too big to fit into your narrow mind or too tall to cower under your insecurities.

Bitch is the verbal eye-roll you make to classify any woman
who is not your cup of tea because she refuses to pour it.
Genus: Selfishus. Species: Ambitious.

And if you think bitch offends me, honey, I’ve got news for you.

The bitch is a teacher who stands against a system.
The bitch is a multi-tasker and that’s why she has no time for your excuses.
The bitch has a multi-million dollar business that was based on doubt and sheer determination.

The bitch is pure ambition with hormones. Yes, hormones.
The bitch is a girl that said no and meant it and she left with her yes safely tucked in her handbag.
A bitch can’t always be nice, but she may be the kindest.
A bitch loses sleep for her kids, but dreams for herself.

The bitch is your boss who gave you the raise.
The bitch buys lingerie for herself.
The bitch wears what she likes.
A Bitch isn't afraid to have her heart broken.
A Bitch isn't afraid to tell you she loves you.

A bitch is a stud with boobs.
Bitch is the only insult you could come up with for a woman who left you.

So, the next time you look at me and want to send me flowers.
The next time you look at my face, my eyes, my clothes, my skin, my moods, my shoes,
my voice, my vice, my sacrifice, my now, my then,
my fight, my time, my love, my light, my heart, my mistakes, my very being,
please sign the big red roses to the..

- Shruthi Haasan

***

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்