அனு சித்தாரம்
மலையாளப் பெண்கள் மீது எப்போதும் எனக்கு தனித்த பிரேமையும் மயக்கமும் உண்டு. இதைப் பற்றி சில ஆண்டுகள் முன் விரிவாய்ப் பதிவு செய்திருக்கிறேன்: http://www.writercsk.com/2017/12/blog-post.html
'யட்சி' என்ற சிறுகதையில் ஜெயமோகன் இப்படி எழுதி இருப்பார்: "எத்தனை அழகான பெண்ணாக இருந்தாலும் வாழ்வின் ஒரு பருவத்தில் மட்டும்தான் அழகாக இருக்கமுடியும். அப்பருவத்தில் கூட சில தருணங்களில்தான் அவள் அழகு முழுமையாக வெளிப்படும். அத்தருணத்தில் கூட சில கோணங்களில் சில அசைவுகளில்தான் அவள் அழகின் உச்சம் நிகழ்கிறது. ஒவ்வொரு அழகிக்கும் அவள் ஒரு உச்சமுனையைத் தொடும் ஒரு கணம் வாழ்வில் உண்டு. ஒரே ஒரு கணம். அவ்வளவுதான். அந்தக்கணங்களையே நீட்டிக் காலமாக்கினால் அதில் வாழ்பவள் யட்சி." இந்த அளவுகோலின்படி பார்த்தால் மலையாளத் திரைப்பட நடிகை அனு சித்தாரா ஓர் யட்சி; ஒரே யட்சி. அதிரூபசுந்தரி, பெரும்பேரழகி என்பதெல்லாம் தாண்டி இன்றைய தேதியில் இந்த நீலப்பந்தில் வாழும் பெண்டிருள் மிக அழகு யாரெனக் கேட்டால் இந்த வயநாட்டுக்காரியையே கைகாட்ட முடிகிறது.
அப்படியானவருடன் தினமொரு இனிப்புத் தின்பண்டத்தை ஒப்பீடு செய்து அக்டோபர் 2019 தொடங்கி ஜனவரி 2020 வரை சரியாக 100 நாட்கள் ஃபேஸ்புக்கில் வெளியிட்டேன். பிள்ளை விளையாட்டாய்த் தொடங்கிய தொடர் அதன் உச்சத்தில் இருந்த சமயத்தில், அலுப்பைத் தொடாத ஒரு நிறைபுள்ளியில் நிறுத்திக் கொண்டேன். அழகை ஆராதிக்க கௌரவம் பார்த்தல் பாசாங்கு. இது ஓர் எதிர்பார்ப்பற்ற உபாசனை தான். ஆதிசங்கரர் செளந்தர்ய லஹரியில் பராசக்தியை ஆராதித்தது மாதிரி.
#AnuSitharaSweetSeries என்ற ஹேஷ்டேகில் வெளியான இத்தொடர் எனக்கு நல்கிய அனுபவம் அலாதியானது; அரிதானது. அதற்குப் பின்னுள்ள உளவியல் சுவாரஸ்யமானது. சிலருக்கு இனிப்புப் பண்டம் பிடித்தது, சிலருக்கு உடையலங்காரம், இன்னும் சிலருக்கு அனு சித்தாராவின் மீயழகு. மேலும் சிலருக்கு ஒப்பீட்டின் ரசனையும், தொடரும் அர்ப்பணிப்பும் பிடித்தது. அரிதாய்ச் சிலர் சகிக்கவில்லை என்று சொல்லி நிறுத்தக் கோரினார்கள். சிலர் உற்சாகமாய் தாமும் களமிறங்கி ஸ்வீட் சீரிஸ் முயன்றார்கள். சிலர் பொதுவெளி பிம்பத்தின் பொருட்டு ரகசியமாய் ரசித்தார்கள். பிற்பாடு வடிவேலு ஸ்வீட் சீரிஸ் ஒன்று கண்ணில் பட்டது. ஃபேஸ்புக்காரன் எனக்கு ஸ்வீட் ஸ்டால்களைச் சிபாரிசு செய்தான்; யார் அனு சித்தாரா படம் போட்டாலும் என் பெயரை ஆட்டோடேக் செய்தான். அந்த 100 நாட்களும் என் மீது பல திசைகளிலிருந்தும் 'அனு'தாப அலை வீசிக் கொண்டே இருந்தது எனலாம்.
"ஒரு கலைஞன், ஓர் எழுத்தாளன் இப்படி ஒரு நடிகையை ஆராதித்துக் கொண்டிருக்கலாமா? உருப்படியாய் வேறு வேலை இல்லையா? அபச்சாரம், தவறான முன்னுதாரணம்." என்றனர் சில அக்கறையான அன்பர்கள். எம்எஃப் ஹுசைனையும், குஷ்வந்த் சிங்கையும் நினைத்துக் கொண்டேன்.
மிக ரசித்த எதிர்வினை மீனம்மாவுடையது: https://www.facebook.com/meenammakayal/posts/373569116859134
சிலர் அனு சித்தாராவுக்குப் போடுவது போல் அந்த நடிகைக்குப் போடு, இந்த மாடலுக்கும் போடு எனக் கேட்டார்கள். இன்னும் சில தோழிகள் தங்களுக்கே இத்தகு சீரிஸ் போட்டால் தான் என்னவாம் என ஆதங்கம் கொண்டார்கள். அப்போது அவற்றுக்கு பதிலளிக்கும் முகமாக இப்படிச் சொல்லியிருந்தேன்: "ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒவ்வொரு விஷயம் உகந்தது. அதைக் கொண்டு தான் அர்ச்சிக்க வேண்டும். அதை மாற்றக்கூடாது. உதாரணமாய் சிவனுக்கு வில்வ இலை, காளிக்கு செவ்வரளி, பிள்ளையாருக்கு அருகம்புல். அதை மாற்றி சிவனுக்கு அருகம்புல் கொண்டு பூஜிக்கக்கூடாது, பிள்ளையாருக்கு செவ்வரளி மாலை சாற்றக்கூடாது. அப்படித்தான் அனு சித்தாராவுக்கென ஸ்வீட் சீரிஸ் அமைந்து விட்டது. அதை இன்னொருவருக்கு நீட்டிக்கக்கூடாது. செய்தால் அது ஆகம விதிகளை மீறியதாகி விடும். வரலாறு நம்மை மன்னிக்காது. ஆனாலும் பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பது போல், ஒரு காரம் சீரிஸோ, சூப் சீரிஸோ அவரவர் வசதிக்கேற்பச் செய்யலாம்."
ஸ்வீட் சீரிஸில் படம் போட முயற்சிப்போருக்கு சில விதிமுறைகளைச் பின்பற்றச் சொல்லியிருந்தேன்: "1) இரண்டு படங்களுமே HD படங்களாக இருக்க வேண்டும் - குறைந்தது 1000 x 1000 ரெசலூஷனில். 2) இரண்டு படங்களிலுமே வாட்டர்மார்க் இல்லாமல் இருக்க வேண்டும் - ஓரமாய் லோகோ அல்லது புகைப்படக்காரர் பெயர் இருக்கலாம், தவறில்லை. 3) அனு சித்தாராவின் படம் எப்படியும் அழகாய்த் தான் இருக்கும், அதில் ஏதும் மெனக்கெடல் அவசியமிராது. ஆனால் உணவுப் பண்டத்தின் படம் பார்த்தவுடனே ருசிக்கத் தூண்டுவதாய் இருக்க வேண்டும். 4) ஆபாச ஒப்புமைகள் கூடவே கூடாது. மாமாங்கம் போன்ற ஒரு பெரிய நடிகரின் பட இசை வெளியீட்டு நிகழ்வுக்கே சாதாரணமாய் சுடிதார் அணிந்து பக்கத்து வீட்டுப் பெண்ணைப் போல் எளிமையாய் வந்தவர் அனு - இம்மாதிரி நிகழ்வுகள் புது திரை வாய்ப்புக்கள் பெற நடிகைகள் பயன்படுத்திக் கொள்பவை என்பதை நினைவில் கொள்ளவும். 5) வெறும் ஆடையின் நிற ஒற்றுமை தாண்டி இரண்டும் ஒன்று என்று ஆழ்மனதில் திருப்தியெழ வேண்டும். சதா தியானிப்பதன் மூலமும் தொடர்பயிற்சியின் வழியாகவும் தான் அது சாத்தியப்படும். தமிழ்ச் சூழலில் இது ஒரு முன்னோடியான open source முயற்சி. ஊர் கூடித் தேர் இழுப்போம். தேரை இழுத்துத் தெருவில் விடாமல் முயற்சிப்போம்.". இவ்விதிமுறைகளை மிகப் பெரும்பாலும் நானும் ஒழுக்கமாய்க் கடைபிடித்தேன். (ஆபாசப் பார்வை பற்றிய ஒரு நிரூபணம்: 46ம் நாளின் படத்தில் அந்தக் கண்ணாடி பிம்பத்தை நண்பர்கள் சொல்லும் வரை நான் கவனிக்கவில்லை.)
மெட்டுக்குப் பாட்டா அல்லது பாட்டுக்கு மெட்டா என இசையமைப்பாளரைக் கேட்பது போல் அனு சித்தாராவின் படத்துக்கு ஈடான தின்பண்டத்தின் படத்தைத் தேடிப் போடுகிறேனா அல்லது பண்டத்துக்கு இணையான அனுவின் படமா என ஆர்வலர்கள் வினவினார்கள். இரண்டும் தான். அது அந்தந்த நாளின் 'அனு'க்ரஹம்! (இது தொடர்பான ஷ்ருதி டிவி குறும்பேட்டி ஒன்றுமுண்டு.)
அனு சித்தாரா ஸ்வீட் சீரிஸ் எப்போது முடியும் என அச்சத்துடன் - இரு அர்த்தத்திலும் வினவிய சில நண்பர்களிடம் வேறு யாராவது அனு சித்தாராவை விட அழகாய்த் தென்பட்டால் இத்தொடரை நிறுத்திக் கொள்ளத் திட்டம் எனச் சொல்லி வைத்திருந்தேன். நல்லவேளை, அதை நிஜமாய்க் கடைபிடித்திருந்தால் இப்போது வரையிலும் கூட இத்தொடரை நிறுத்தியிருக்க முடியாது!
நிச்சயம் இத்தொடரின் நோக்கம் அனு சித்தாரா என்ற நடிகையை தனிப்பட்டு நான் நெருங்குவதல்ல. உண்மையில் அவருக்கு இச்செய்தி போயிருந்தால் அத்தினத்துடன் தொடரை அப்படியே நிறுத்துவதாக இருந்தேன். சரி, அப்படியெனில் இதன் மையநோக்கு தான் என்ன? உண்மையில் இது ஓர் ஆட்டம். அவ்வளவு தான். இதன் சவால் சுவாரஸ்யமாக இருந்தது. தன்முனைப்பைச் சீண்டுகிற உற்சாகத்தைத் தாங்கியிருந்தது. மற்றபடி, இதற்கு நான் உத்தேசிக்காத சில பலன்கள் இருக்கலாம் தான். இனி புதிதாய் உருவாக்கப்பட இருக்கும் ஓர் இனிப்புப் பண்டத்துக்கு அனு சித்தாரா என்று பெயர் வைக்கலாம். அல்லது யாராவது ஒருவர் அனு சித்தாரா தீமில் ஒரு பிரம்மாண்ட இனிப்பகம் தொடங்கலாம் (குறைந்தபட்சம் தன் வழக்கமான இனிப்புக் கடைக்கு அனு சித்தாராவின் பெயரை வைக்கலாம்). பார்ப்போம், எதிர்காலம் என்ன ஆச்சரியத்தை ஒளித்து வைத்திருக்கிறதென!
இத்தொகுப்பைப் புத்தகமாக வெளியிடச் சொல்லி கேலியாகவும், நிஜமாகவும் நிறையப் பேர் சொன்னார்கள். அச்சுப் புத்தகமாக வந்தால் அழகாகத்தான் இருக்கும். வழவழ, பளபள தாளில் தரமாய் ஒரு காஃபிடேபிள் புத்தகம் போல். ஆனால் நம்மிடம் அதற்கான சந்தையில்லை என நம்புகிறேன். (எனக்கும் அது குறித்த, என் எழுத்தாள பிம்பம் சார்ந்த தனிப்பட்ட தயக்கங்கள் இருக்கின்றன.) மின்னூல் செய்யலாம். கிண்டிலில் வைத்தால் இலவசமாகத் தர முடியாது. இதை விற்றுச் சம்பாதிக்க விருப்பமில்லை. அதனால் எதிர்காலத்தில் சமயம் கிடைக்கையில் இலவச பிடிஎஃப் வெளியிடுவேன்.
அதுவரை ஆறுதலாக இத்தொடர்பதிவுகளின் சுட்டிகளை இந்நன்னாளிலே இங்கு தொகுத்தளிக்கிறேன்:
- அட பிரதமன் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156548487747108
- செர்ரி பழம் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156550734692108
- குலாப் ஜாமூன் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156553785317108
- மினி ஜிலேபி - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156556128557108
- மோத்தி லட்டு - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156558132077108
- ஸ்வீட் பீடா - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156562931037108
- ரோஸ் மில்க் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156565325592108
- ஜிகர்தண்டா - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156567962002108
- பட்டர்ஸ்காட்ச் கேக் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156570452667108
- திருநெல்வேலி அல்வா - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156573283532108
- பிஸ்தா பர்ஃபி - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156575147367108
- தேன் மிட்டாய் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156577691307108
- குழிப் பணியாரம் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156580426847108
- ஸ்ட்ராபெர்ரி - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156582892122108
- ஜவ்வு மிட்டாய் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156585334297108
- தீபாவளி பட்சணம் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156588416642108
- காஜு கத்லி - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156591582962108
- தர்பூசணி - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156593325317108
- சம் சம் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156595746357108
- ஜவ்வரிசிப் பாயாசம் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156598308747108
- சர்க்கரைப் பொங்கல் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156602286277108
- தேங்காய் பர்ஃபி - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156603850227108
- எள்ளுருண்டை - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156607553992108
- ப்ளூபெரி ஐஸ்க்ரீம் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156610258032108
- மின்ட் லைம் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156612025412108
- பால் கொழுக்கட்டை - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156615164567108
- ஆக்ரா பேதா - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156618957107108
- ரெட் வெல்வ்ட் கேக் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156621072952108
- ரசகுல்லா - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156621995977108
- குபானி கா மீத்தா - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156624833317108
- கராச்சி பிஸ்கெட் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156627783602108
- அசோகா அல்வா - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156630432417108
- மட்டர் பர்ஃபி - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156633179907108
- பாதுஷா - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156635735752108
- பூதரேகுலு - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156638395837108
- பக்லவா - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156641110092108
- திராமிசு - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156643968192108
- பாவ்லோவா - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156646823662108
- பால்கோவா - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156650476797108
- அதிரசம் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156652186997108
- சாக்லேட் பர்ஃபி - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156654695457108
- ஆரஞ்சு மிட்டாய் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156658462922108
- மேக்ரான் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156661035187108
- சக்க வரட்டி - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156662836912108
- நெய்யப்பம் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156665376322108
- சோன் பப்டி - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156668944512108
- மூங் தால் அல்வா - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156670697182108
- பஞ்சாமிர்தம் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156673294512108
- தேங்காய் லட்டு - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156675750267108
- காலா ஜாமுன் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156678449867108
- டோனட் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156681099427108
- அச்சப்பம் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156683789397108
- கேரமல் கஸ்டர்ட் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156686288612108
- மில்க் பேடா - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156689117217108
- ப்ளூ ரேஸ்ப்பெரி லாலிபாப் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156692007082108
- ஃபில்டர் காஃபி - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156695328612108
- கோதுமை லட்டு - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156697870057108
- பருப்பு போளி - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156700500477108
- பாதாம் பர்ஃபி - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156703574562108
- ஆப்பிள் பை - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156706121887108
- டபுள் கா மீட்டா - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156708914327108
- பாம்பே ஹல்வா - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156712276862108
- ரசமலாய் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156713871182108
- கடலை மிட்டாய் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156717693122108
- க்ரே ஸ்டஃப் மூஸ் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156719210752108
- கேரட் அல்வா -https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156722809987108
- தம்ரூட் அல்வா - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156724543322108
- பீட்ரூட் அல்வா - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156727825577108
- பஞ்சு மிட்டாய் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156729723572108
- ஓரியோ பிஸ்கெட் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156732306642108
- தேங்காய் பன் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156736232052108
- லிட்டில் ஹார்ட்ஸ் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156737801587108
- மேங்கோ பர்ஃபி - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156740492837108
- காஜா - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156743389422108
- ப்ளம் கேக் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156746987327108
- ப்ளூ வெல்வெட் கப்கேக் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156748946212108
- ப்ளூ மொஹீட்டோ - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156751811262108
- க்ரீன் டீ ஐஸ்க்ரீம் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156754292072108
- லைம் ஜெலடின் சாலட் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156756829762108
- ராயல் ஃபலூடா - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156759737102108
- சீஸ் கேக் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156762703747108
- ப்ளாக் ஃபாரஸ்ட் கேக் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156765726572108
- ஐஸ் கோலா - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156768951222108
- சோர் ப்ளூ ஸ்டார்ஸ் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156772636142108
- ஜெல்லி கேண்டி - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156774259602108
- பிங்க் வெல்வெட் ரோல் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156778164012108
- பனானா கேரமல் டெஸர்ட் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156779448397108
- ரவா கேசரி - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156782068522108
- ரம்புட்டான் பழம் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156784291882108
- யக்சிக் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156786892432108
- ரெட் & ப்ளாக் ஜெல்லி பெர்ரீஸ் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156790099742108
- ஐஸ் & ஃபயர் குக்கீஸ் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156791973897108
- ஃபட்ஜ் ப்ரௌனி - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156794744627108
- ஷாகி துக்டா - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156797827057108
- செம்பருத்தி டீ குச்சி ஐஸ் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156801222097108
- கரும்பு - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156803757637108
- ஹம்பக் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156805442892108
- ரேஸ்ப்பெரி மூஸ் கேக் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156808935832108
- ஸ்பைருலினா ஸ்மூத்தி - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156810751292108
- லிக்கரிஸ் ட்விஸ்ட்ஸ் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156813357637108
- வெல்லக் கட்டி - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156813384922108
*
Comments