கவிதை நூல்கள் - ஒரு சிபாரிசு
நவீனக் கவிதைகளாக சிலாகிக்கப்படுவனவற்றில் பாதி எனக்கு ஒத்து வருவதில்லை (அல்லது நான் ஒத்துழைப்பு தருவதில்லையோ என்னவோ!). ந.பிச்சமூர்த்தி மிகச்சிறந்த உதாரணம். அவரது கவிதைகளுக்குள் நான் நுழையவே முடியவில்லை. காலச்சுவடு, தீராநதி இதழ்களின் கவிதைகளில் கணிசமானவை எனக்கு இன்னும் புரிவதில்லை. உயிர்மை இவ்விஷயத்தில் பரவாயில்லை. இது தான் என் நவீனக் கவிதை ரசனையின் சுருக்கமான அறிமுகம்.
டிவிட்டரில் நண்பர் ஒருவர் வரும் சென்னைப் புத்தககாட்சியில் வாங்க நல்ல கவிதை நூல்களைச் சிபாரிசு செய்யச் சொல்லி இருந்தார். நான் வாசித்தவற்றில் எனக்கு உவப்பாகத் தோன்றிய நூல்களை இங்கே சிபாரிசு செய்திருக்கிறேன், ஒரு கவிஞருக்கு ஒரு நூல் என்ற அடிப்படையில் (மனுஷ்யபுத்திரனை மட்டும் அச்சட்டகத்துள் அடைக்கமுடியவில்லை).
டிவிட்டரில் நண்பர் ஒருவர் வரும் சென்னைப் புத்தககாட்சியில் வாங்க நல்ல கவிதை நூல்களைச் சிபாரிசு செய்யச் சொல்லி இருந்தார். நான் வாசித்தவற்றில் எனக்கு உவப்பாகத் தோன்றிய நூல்களை இங்கே சிபாரிசு செய்திருக்கிறேன், ஒரு கவிஞருக்கு ஒரு நூல் என்ற அடிப்படையில் (மனுஷ்யபுத்திரனை மட்டும் அச்சட்டகத்துள் அடைக்கமுடியவில்லை).
- அதீதத்தின் ருசி - மனுஷ்ய புத்திரன் [உயிர்மை]
- இதற்கு முன்பும் இதற்குப் பிறகும் - மனுஷ்ய புத்திரன் [உயிர்மை]
- பசித்த பொழுது - மனுஷ்ய புத்திரன் [உயிர்மை]
- காமக்கடும்புனல் - மகுடேசுவரன் [தமிழினி]
- நகுலன் கவிதைகள் [காவ்யா]
- பிரமிள் கவிதைகள் [அடையாளம்]
- ஆத்மநாம் கவிதைகள் [காலச்சுவடு]
- சுந்தர ராமசாமி கவிதைகள் [காலச்சுவடு]
- விக்ரமாதித்யன் கவிதைகள் [சந்தியா]
- கல்யாண்ஜி கவிதைகள் [சந்தியா]
- கலாப்ரியா கவிதைகள் [தமிழினி]
- தேவதேவன் கவிதைகள் [தமிழினி]
- தேவதச்சன் கவிதைகள் [தமிழினி]
- ஞானக்கூத்தன் கவிதைகள் [ஆழி]
- பிரம்மராஜன் - தேர்ந்தெடுத்த கவிதைகள் [காலச்சுவடு]
- ஒவ்வொரு புல்லையும்... - இன்குலாப் [பொன்னி]
- அகி - முகுந்த் நாகராஜன் [உயிர்மை]
- பூமியை வாசிக்கும் சிறுமி - சுகுமாரன் [உயிர்மை]
- முகவீதி - ராஜசுந்தரராஜன் [தமிழினி]
- நீ இப்பொழுது இறங்கும் ஆறு - சேரன் [காலச்சுவடு]
- இரவுகளின் நிழற்படம் - யூமாவாசுகி [தமிழினி]
- முலைகள் - குட்டிரேவதி [தமிழினி]
- நீரின்றி அமையாது உலகு - மாலதி மைத்ரி [காலச்சுவடு]
- வெறும் பொழுது - உமா மகேஸ்வரி [தமிழினி]
- கருவறை வாசனை - கனிமொழி [வ.உ.சி.]
- இரவு மிருகம் - சுகிர்தராணி [காலச்சுவடு]
- பச்சை தேவதை - சல்மா [காலச்சுவடு]
- இக்கடல் இச்சுவை - பெருந்தேவி [காலச்சுவடு]
- ஒற்றையிலையென - லீனா மணிமேகலை [கனவுப்பட்டறை]
- மஞ்சணத்தி - தமிழச்சி தங்கபாண்டியன் [உயிர்மை]
- மல்லிகைக் கிழமைகள் - ஜெ.பிரான்சிஸ் கிருபா [விகடன்]
- சொல்லக் கூசும் கவிதை - வா.மு.கோமு [உயிர்மை]
- ஏரிக்கரையில் வசிப்பவன் - ஸ்ரீநேசன் [ஆழி]
- ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில் - செல்வராஜ் ஜெகதீசன் [அகநாழிகை]
- பாரதியார் கவிதைகள் [மெய்யப்பன்]
- காதல் - பாரதிதாசன் [பூம்புகார்]
- கண்ணதாசன் கவிதைகள் - 6 தொகுதிகள் [கண்ணதாசன்]
- கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் - மீரா
- குரோட்டன்களோடு கொஞ்ச நேரம் - பழமலய்
- பித்தன் - அப்துல் ரகுமான்
- பொய்க்கால் குதிரைகள் - வாலி
- வைரமுத்து கவிதைகள்
- கனவுகளைப் பேச வந்தவன் - ஜோசப்-டி-சாமி
- நட்புக்காலம் - அறிவுமதி
- குழந்தைகள் நிறைந்த வீடு - நா.முத்துக்குமார்
- அனுபவச் சித்தனின் குறிப்புகள் - ராஜா சந்திரசேகர்
- இசைத் தட்டின் மேலொரு முள் விழுந்தது - வஸந்த் செந்தில்
- நைலான் ரதங்கள் - சுஜாதா
- வெட்டவெளிதனில் கொட்டிக் கிடக்குது - இளையராஜா
- கொங்குதேர் வாழ்க்கை - 2 [தமிழினி]
- காலச்சுவடு கவிதைகள் [காலச்சுவடு]
- அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் [காலச்சுவடு]
- மயிரு - யாத்ரா [அகநாழிகை]
- கருவேல நிழல் - பா.ராஜாராம் [அகநாழிகை]
- முடியலத்துவம் - செல்வேந்திரன் [பட்டாம்பூச்சி]
- நீர்க்கோல வாழ்வை நச்சி - லாவண்யா சுந்தரராஜன் [அகநாழிகை]
- ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை - பொன்.வாசுதேவன் [உயிர்மை]
- உறங்கி விழித்த வார்த்தைகள் - மதன் [அகநாழிகை]
- கோவில் மிருகம் - என்.விநாயகமுருகன் [அகநாழிகை]
- கூர்தலறம் - TKB காந்தி [அகநாழிகை]
- மரங்கொத்திச் சிரிப்பு - ச.முத்துவேல் [உயிர் எழுத்து]
- இவளுக்கு இவள் என்று பெயர் - கார்த்திகா [உயிர்மை]
- கார்ட்டூன் பொம்மைக்குக் குரல் கொடுப்பவள் - நேசமித்திரன் [உயிர்மை]
- தீக்கடல் - நர்சிம் [உயிர்மை]
Comments
a) Kalapria Poems collection is from Sandhiya.
b) Lavanya Sundararajan's second book also came in Kalachuvadu last year.
c) Nylan Radhangal is Poems collection?
உணர்ந்ததைச் சொல்லி இருக்கிறீர்கள். பிரமிள், தமிழின் தலைசிறந்த கவிஞராக அங்கீகரிக்கப் பட்டுவிடுவாரோ என்னும் படபடப்பில் ந.பிச்சமூர்த்தி முன்இருத்தப் பட்டார். அவ்வளவுதான்.
சி.மணி, நாரணோ ஜெயராமன் முதலிய இன்னும் சில கவிஞர்களும் கூட மங்கிவிட்டார்கள் போல் தோன்றுகிறதே!