தேசிய விருதுகள் - ஓர் அவசர‌ப் பதிவு

56வது தேசியத் திரைப்பட விருதுகள் சற்று முன் அறிவிக்கப்பட்டுள்ளன.

Highlights:
  • சிறந்த இயக்குநர் - பாலா [நான் கடவுள்]
  • சிறந்த ஒப்பனை - வி.மூர்த்தி [நான் கடவுள்]
  • சிறந்த பிராந்திய மொழித் திரைப்படம் (தமிழ்) - வாரணம் ஆயிரம்
  • சிறந்த அறிமுக இயக்குநர் - நீரஜ் பாண்டே [A Wednesday]
  • சிறந்த நடிகை - ப்ரியங்கா சோப்ரா [Fashion]
  • சிறந்த துணை நடிகை - கங்கணா ரணாவத் [Fashion]
  • சிறந்த படத்தொகுப்பு - ஸ்ரீகர் ப்ரசாத் [Firaaq]
  • சிறந்த கலை இயக்கம் - கௌதம் சென் [Firaaq]
  • சிறந்த ஜனரஞ்சக திரைப்படம் - Oye Lucky! Lucky Oye!
  • சிறந்த அனிமேஷன் திரைப்படம் - Roadside Romeo
  • சிறந்த பிராந்திய மொழித் திரைப்படம் (இந்தி) - Rock On
  • சிறந்த துணை நடிக‌ர் - அர்ஜுன் ராம்ப்பால் [Rock On]
  • சிறந்த ஆடை அலங்காரம் - நீது ல‌ல்லா [Jodhaa Akbar]
  • சிறந்த நடன அமைப்பு - சின்னி பிரகாஷ் & ரேகா பிரகாஷ் [Jodhaa Akbar]
  • சிறந்த Special Effects - Mumbai Meri Jaan
  • மராத்திய திரைப்படம் Jogvaவிற்கு ஐந்து விருதுகள்
  • வங்காளப் படமான Antaheenக்கு மூன்று விருதுகள்
  • ஸ்ரேயா கோஷல், ஹரிஹரனுக்கு சிறந்த பின்னணி பாடகர்கள் விருது
  • தசாவதாரம் கமல்ஹாசனுக்கு சிறந்த நடிகர் விருது இல்லை
விரிவான பதிவு விரைவில்...

Comments

kalakitinga sarvana karthikeyan particularly That last sentence is really super "THASAVATHARAM KAMALUKU VIRUDHU ILLAI"
Gol said…
I dont know about the best actor but Priyanka Chopra deserved for Fashion a fine performance.I think she'll again get it for Kaminey for last year
viki said…
தசாவதாரம் கமல்ஹாசனுக்கு சிறந்த நடிகர் விருது இல்லை////


அது நான் எதிர்பார்த்ததுதான் .ஏனெனில் இதற்கு முன் கமல் தேசிய விருது வாங்கிய மூன்று படங்கள்(மூன்றாம் பிறை ,நாயகன்,இந்தியன் )ஆழமான உணர்வுகளின் வலியையும் வேதைனைகளையும் வெளிப்படுத்திய படங்கள் (இந்தியனில் தாத்தா வேடதிற்குதான் முக்கியமாக விருது வழங்க பட்டது)ஆனால் தசாவதாரத்தில் மூன்று மணி நேரத்தில் பத்து வேடங்களையும் காட்டி விட வேண்டும் என்ற அவசரம்தான் தொநித்ததே தவிர எந்த ஒரு வேடமும் உணர்வுகளின் ஆழத்தை வெளிப்படுத்தவில்லை என்பதே உண்மை(பூவராகன் சிறிது நேரமே வருவதால் அதை மட்டும் கணக்கில் எடுத்து கொள்ள மாட்டார்கள்).நான் கமலுக்கு தேசிய விருது எதிர்பார்த்த படங்கள் மூன்றுகுணா மகாநதி மற்றும் அன்பே சிவம்.இவற்றிற்கு கிடைக்கவில்லை என்பது மிகவும் ஏமாற்ற மளித்தது.நான் இன்னும் அந்த மராத்தி படம் பார்கவில்லை பார்த்தால் இன்னும் விளக்க முடியும் என நினைக்கிறேன்.
viki said…
கமல் குறித்து சாரு விவரமாக எழுதி விட்டார் என்றாலும் இன்னும் சில தகவல்கள்.(நிற்க நானும் கமல் ரசிகன்தான் அதனாலேயே இதை எழுதினேன்.


தோள்களை குலுக்கி
கொள்வது புருவத்தை உயர்த்தியதை போல் பேசுவது இரண்டும் Al Pacino வின்
பிரதிகள்.மேலும் நாயகன் என்ற படத்தில் The Godfather படத்தின் இரண்டு
பாகங்களையும்குழப்பி அடிக்கிறேன் என்று ஒரு வழி செய்திருப்பார் மணி
ரத்னம் .அப்படத்தில் Marlon Brando (வயதான பின் கமல்) மற்றும் Al Pacino
(இளம் கமல்) இரண்டு கதாபதிரங்களையும் செய்கிறேன் பேர்வழி என்று கமல்
அவ்விருவர் அபாரமாக நடித்த வேடங்களில் ஒன்றை கூட ஒழுங்காக செய்யவில்லை
என்பது உண்மை.
மேலும் அவர் முகத்தில் ரப்பர் ஒட்டி கொண்டு நடித்த பல வேடங்கள் ஆங்கில
படங்களின் காப்பி.
(உம).ஆளவந்தான் மொட்டை கதாபாத்திரம் 1997 இல் வெளிவந்த Batman &Robin
படத்தில் Uma Thurman இன் அடியாள் போல் இருக்கும் மொட்டை தலையின் அட்ட
காப்பி.மேலும் தசாவதாரத்தில் Fletcher கதாபாத்திரம் Sin City(2005) இல்
இடம்பெறும் ஒரு கதாபாத்திரத்தின் ஒப்பனையை அப்படியே அட்ட காபி
அடித்திருப்பார்.

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்