Posts

CSK Diet

இவை உணவுக் கட்டுப்பாட்டுக்கான என் ஏழு கட்டளைகள். இது எந்தக் குறிப்பிட்ட டயட்டின் பிரதியும் அல்ல. நான் இத்தனை நாள் கண்டும் கேட்டும் உணர்ந்தும் கொண்ட பல விஷயங்களின் அடிப்படையில் நான் வந்தடைந்திருக்கும் ஒரு பட்டியல். (இதில் நான் பால், தயிர், டீ, காஃபி, மது போன்றவற்றைப் பற்றி ஏதும் சொல்லவில்லை. ஏனெனில் அவற்றை நான் எடுப்பதில்லை. அதனால் அவை தேவையா, இல்லையா, தேவையெனில் என்ன அளவில் எடுக்கலாம் என்பது பற்றிய அனுபவ அறிவு ஏதும் எனக்குக் கிடையாது. அதனால் அதைப் பேசுவது சரியல்ல.) 1) இந்த‌ உணவுப் பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்: இனிப்புகள் (தின்பண்டங்கள், சாக்லேட், ஐஸ்க்ரீம் முதலியன‌) குளிர்பானங்கள் (சோடா கலந்தவை, அடைக்கப்பட்ட ஜூஸ்கள்) பேக்கரி உணவுகள் (ப்ரெட், பிஸ்கெட், குக்கீஸ், கேக் முதலியன) மைதா உணவுகள் (பரோட்டா, பஃப்ஸ், மேகி முதலியன) எண்ணெயில் பொரித்த உணவுகள் (முறுக்கு, பூரி, சிக்கன் 65 முதலியன‌) எண்ணெய் மிதக்கும் உணவுகள் (பிரியாணி முதலியன)  சிவப்பு மாமிசங்கள் (Red Meat - ஆட்டுக் கறி முதலியன‌) சர்க்கரை மிகுந்த பழங்கள் (மா, பலா, வாழை முதலியன) உலர்கனிகள் (பேரிச்சை, திராட்சை முதலியன) பழச்ச...

மீயழகி

Image
கே: உலகின் அழகான பெண்ணைச் சந்தித்திருக்கிறீர்களா? ப: ஆம். 1984ம் ஆண்டு. ஒரு நகைக் கடையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். என்னைத் தவிர வேறு யாரும் கடையில் இல்லை. நல்ல உயரமும் திடகாத்திரமான உடல்வாகும் கொண்ட ஓர் இந்துப் பெண் கடைக்குள் நுழைந்தார். அவரிடம் இலத்தீன் அமெரிக்க சாயல் கொஞ்சம் இருந்தது. ஓர் இளவரசிக்கான தோரணையுடன் நடந்துகொண்டார். யார் கண்டது? உண்மையிலேயே இளவரசியாக இருக்கக்கூடும். அவரது தோலில் ஒருவித மினுமினுப்பு இருந்தது. செம்பு நிறம், நீண்ட கூந்தல், மற்ற அங்கங்கள் அத்தனையும் கச்சிதமாக இருந்தன. எல்லா பருவங்களிலும் அழகாக இருக்கக்கூடிய பெண் என நினைத்தேன். ஏதோவொரு அட்டிகையை வாங்கியதாக நினைவு. அதற்கு பில் போடுவதற்கே எனக்கு கூச்சமாக இருந்தது. இளவரசியிடம் பணம் பெறுவதா? அதைப் புரிந்துகொண்டவர் போல புன்னகைத்தார். எனக்குக் கிறக்கமாக இருந்தது. அவரைப் போன்றதொரு அழகியை பிறகெப்போதும் நான் சந்திக்கவில்லை. இப்போது நினைவுகூர்கையில் அவரை மகா காளியின் வடிவுடன் பொருத்திக்கொள்ள முடிகிறது. ஆனால், உக்கிரம் தணிந்தவர். இனிமையானவர். நளினமானவர். (பொலான்யோ Playboy-க்கு அளித்த பேட்டியிலிருந்து. மொழிபெயர்ப்பு:...

நுளம்பு [சிறுகதை]

Image
அபர்ணா சிலை மாதிரி அந்த நெகிழி நாற்காலியில் அமர்ந்திருந்தாள். சிலை என்ற சொல் அவளது தோற்றம், அசைவின்மை இரண்டுக்கும் கச்சிதமாய்ப் பொருந்தியது. ‘நம் ரகசியமெல்லாம் யாருக்கும் தெரியாது என்பதை விட நம் எல்லா ரகசியமும் தெரிந்தவர் யார் என்பது எவருக்கும் தெரியக்கூடாது என்பதே மிக முக்கியமானது.’ ஹெச்எஸ்ஆர் லேஅவுட் காவல் நிலையம் புதன்கிழமையின் மந்தத்தன்மைக்குள் ஒளிந்து கொண்டிருந்தது. தவிர, அருகில் ஒரு நகைக்கடையைத் திறந்து வைக்க நடிகை ரச்சிதா ராம் வருவதாக இருந்தது என்பதால் போலீஸ்காரர்களுக்கு அங்கே ஜோலியிருந்தது. நடிகையைப் பார்க்கப் போகிறார்களா பாதுகாக்கப் போகிறார்களா என்பதில் தெளிவில்லை என்றாலும் கடமையுணர்வுடன் திரண்டு போயிருந்ததனர். ஸ்டேஷனில் புகார்களை எடுத்துக் கொள்ள ஒரு ரைட்டர் மட்டும் அமர்ந்திருந்தார். அபர்ணாவுக்கு முன்பாகப் புகாரளிக்க ஒரு கிழவர் காத்திருந்தார். தன் பேத்தியைப் பன்னிரண்டு மணி நேரமாகக் காணவில்லை என நடுங்கியபடி சொன்னார். முந்தின ராத்திரியில் நண்பர்களோடு கிளம்பி பார்ட்டி என்று போனவள் வீடு திரும்பவில்லை; அருகேயுள்ள நேஷன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பேஷன் டெக்னாலஜியில் படிக்கிறாள்; கடைசியாக அண...

யமி [சிறுகதை]

Image
நூதனாவின் பிறவிப் புழையில் மிக உச்ச வலியொன்று விட்டு விட்டுத் தெறித்தது. திறமையான திரைப்பட எடிட்டர் செய்த ஹிப்ஹாப் மான்டேஜ் போல் கலவையான காட்சிகள் தோன்றின: இளஞ்சிவப்புக் கோடுகள், மெரீனா பீச், ராபியா ஆன்ட்டி, ரிக் வேதம், அம்மாவின் பிணம், டார்க் சாக்லேட், டிவி ரிமோட் அப்புறம் நவீனின் முகம்… லோக்கல் அனஸ்தெடிக் செலுத்திக் கொண்டு உடல் மரத்துப் போகக் காத்திருந்தாள். மெல்ல வலது காலைத் தூக்கிப் பார்த்தாள். தூக்க முடிந்தது. அப்புறம் இடது காலை. பாதி வரை முடிந்தது. அப்புறம் இரண்டு கால்களையுமே அசைக்க முடியவில்லை. தட்டுத் தடுமாறித் துருவற்று மின்னிய கத்தியைக் கையிலெடுத்து நடுக்கத்துடன் தனது வயிற்றில் வைத்தாள். மானசீகமாய் நீள அகலம் கணித்து விரிவுற்றிருந்த தொப்புளுக்கு மூன்று அங்குலம் கீழே கீறினாள். புதிய ரத்தம் அவசரமாய் எட்டிப் பார்த்தது. முகத்தைச் சுழித்து, பல்லைக் கடித்து வலியை அடக்கிக் கோடிழுத்தாள். அவள் படுத்திருந்த கட்டிலினருகே குனிந்து நின்று அவள் கைகளைப் பற்றியிருந்த நவீன் கண்களை மூடிக் கொண்டான். விடியல் விழிகளைத் திறக்கத் தொடங்கியது. * மொத்த நட்சத்திரங்களையும் உதிர்த்துப் பூரண ந...