குமுதம் - சிறுகதை

குமுதம் 15.8.2012 இதழில் எனது சிறுகதை வெளியாகி உள்ளது. வலைதளங்களில் என் இரு சிறுகதைகள் வெளியாகி இருந்தாலும் அச்சுக் காணும் என் முதல் சிறுகதை இது. "ஹேர் ஸ்டைல்!" என்ற பெயரில் கதை வெளியாகி இருக்கிறது (கதைக்கு நான் வைத்திருந்த‌ தலைப்பு "மயிரு"!). இன்னும் நானே பார்க்கவில்லை - இங்கே பெங்களூரு கடைகளில் குமுதம் நாளைக்குத் தான் கிடைக்கும். வாழ்த்திய / வாழ்த்தும் / வாழ்த்தவிருக்கும் அனைவருக்கும் என் ப்ரியங்கள்.

46 லக்ஷம் வாசகர்களை என் எழுத்து சென்றடைய வழிவகுத்த குமுதம் ஆசிரியர் குழுவுக்கு நன்றிகளைப் பதிகிறேன்.

Comments

Siva Subramani said…
வாழ்த்துகள் அண்ணா... !!!
சிறுகதை முதல், திரைக்கதை, புதினங்கள் என்னும், அடுத்த இலக்குகளைத் தொட வாழ்த்துகிறேன்.....
Arunvetrivel said…
மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்.
Arunvetrivel said…
மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்.
Anonymous said…
1. அப்பெண் சுடலையை தான் விரும்புகின்றோமா இல்லையா என்பதில் ஆரம்பத்தில் கொஞ்சம் சந்தேகம் கொண்டிருக்கின்றாள். எனக்கோ கதை படிக்க நன்றாக இருந்த போதும்-எனக்கு விமர்சன அறிவெல்லாம் இல்லை என்பதினால்- கதை சிறப்பானதா சுமாரானதா என்ற சந்தேகம்.

2. அவன் ஹேர் ஸ்டைல் பிடித்துள்ளது என்கின்றாள். வலுக்கையில் ஆங்காங்கே மயிர் வளர்ந்துள்ளவனை பெண்ணுக்கு எப்படி பிடிக்கும்? (துலுக வைத்தியரிடம் சென்றதால் முடி வளர்ந்து விட்டது என்ற பொய்யை சும்மா ஜாலிக்கு என எடுத்துக் கொண்டேன். ஆனால் இதை ஏற்க முடியவில்லை)

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்