மலையாளப் பெண்கள் மீது எப்போதும் எனக்கு தனித்த பிரேமையும் மயக்கமும் உண்டு. இதைப் பற்றி சில ஆண்டுகள் முன் விரிவாய்ப் பதிவு செய்திருக்கிறேன்: http://www.writercsk.com/2017/12/blog-post.html 'யட்சி' என்ற சிறுகதையில் ஜெயமோகன் இப்படி எழுதி இருப்பார்: " எத்தனை அழகான பெண்ணாக இருந்தாலும் வாழ்வின் ஒரு பருவத்தில் மட்டும்தான் அழகாக இருக்கமுடியும். அப்பருவத்தில் கூட சில தருணங்களில்தான் அவள் அழகு முழுமையாக வெளிப்படும். அத்தருணத்தில் கூட சில கோணங்களில் சில அசைவுகளில்தான் அவள் அழகின் உச்சம் நிகழ்கிறது. ஒவ்வொரு அழகிக்கும் அவள் ஒரு உச்சமுனையைத் தொடும் ஒரு கணம் வாழ்வில் உண்டு. ஒரே ஒரு கணம். அவ்வளவுதான். அந்தக்கணங்களையே நீட்டிக் காலமாக்கினால் அதில் வாழ்பவள் யட்சி. " இந்த அளவுகோலின்படி பார்த்தால் மலையாளத் திரைப்பட நடிகை அனு சித்தாரா ஓர் யட்சி; ஒரே யட்சி. அதிரூபசுந்தரி, பெரும்பேரழகி என்பதெல்லாம் தாண்டி இன்றைய தேதியில் இந்த நீலப்பந்தில் வாழும் பெண்டிருள் மிக அழகு யாரெனக் கேட்டால் இந்த வயநாட்டுக்காரியையே கைகாட்ட முடிகிறது. அப்படியானவருடன் தினமொரு இனிப்புத் தின்பண்டத்தை ஒப்பீடு செய்த
தமிழில், நான் படித்தவற்றில், மிக முக்கியமான நூறு புத்தகங்களை இங்கே பட்டியலிட்டிருக்கிறேன். அதாவது - என் பார்வையில், தமிழில் வாசிக்கும் பழக்கமுடையோர் அனைவரும் கட்டாயமாய் படித்தே ஆக வேண்டிய புத்தகங்கள் இவை. புத்தகக் கண்காட்சிக்கு செல்பவர்களுக்கும், புத்தகம் படிக்கத் தொடங்குபவர்களுக்கும் இது பயன்படலாம். திருக்குறள் - மு.வ. உரை பட்டினத்தார் பாடல்கள் பாரதியார் கவிதைகள் பாரதிதாசன் கவிதைகள் கண்ணதாசன் கவிதைகள் வைரமுத்து கவிதைகள் சுந்தர ராமசாமி கவிதைகள் கலாப்ரியா கவிதைகள் கல்யாண்ஜி கவிதைகள் அசோகமித்திரன் கட்டுரைகள் புதுமைப்பித்தன் சிறுகதைகள் லா.ச.ரா. சிறுகதைகள் சுந்தர ராமசாமி சிறுகதைகள் ஜி.நாகராஜன் ஆக்கங்கள் அ.முத்துலிங்கம் கதைகள் ஜெயமோகன் சிறுகதைகள் அம்பை சிறுகதைகள் ஆதவன் சிறுகதைகள் யுவன் சந்திரசேகர் சிறுகதைகள் பட்டுக்கோட்டை பிரபாகர் சிறுகதைகள் ஜெயமோகன் குறுநாவல்கள் சுஜாதாவின் நாடகங்கள் சுஜாதாவின் மர்மக்கதைகள் நாட்டுப்புறக்கதைகள் - கி.ராஜநாராயணன் விஞ்ஞான சிறுகதைகள் - சுஜாதா ஸ்ரீரங்கத்துக்கதைகள் - சுஜாதா தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - சுஜாதா பீக்கதைகள் - பெருமாள்முருகன் விசும்பு - ஜெயமோகன் என் வீட
அபர்ணா சிலை மாதிரி அந்த நெகிழி நாற்காலியில் அமர்ந்திருந்தாள். சிலை என்ற சொல் அவளது தோற்றம், அசைவின்மை இரண்டுக்கும் கச்சிதமாய்ப் பொருந்தியது. ‘நம் ரகசியமெல்லாம் யாருக்கும் தெரியாது என்பதை விட நம் எல்லா ரகசியமும் தெரிந்தவர் யார் என்பது எவருக்கும் தெரியக்கூடாது என்பதே மிக முக்கியமானது.’ ஹெச்எஸ்ஆர் லேஅவுட் காவல் நிலையம் புதன்கிழமையின் மந்தத்தன்மைக்குள் ஒளிந்து கொண்டிருந்தது. தவிர, அருகில் ஒரு நகைக்கடையைத் திறந்து வைக்க நடிகை ரச்சிதா ராம் வருவதாக இருந்தது என்பதால் போலீஸ்காரர்களுக்கு அங்கே ஜோலியிருந்தது. நடிகையைப் பார்க்கப் போகிறார்களா பாதுகாக்கப் போகிறார்களா என்பதில் தெளிவில்லை என்றாலும் கடமையுணர்வுடன் திரண்டு போயிருந்ததனர். ஸ்டேஷனில் புகார்களை எடுத்துக் கொள்ள ஒரு ரைட்டர் மட்டும் அமர்ந்திருந்தார். அபர்ணாவுக்கு முன்பாகப் புகாரளிக்க ஒரு கிழவர் காத்திருந்தார். தன் பேத்தியைப் பன்னிரண்டு மணி நேரமாகக் காணவில்லை என நடுங்கியபடி சொன்னார். முந்தின ராத்திரியில் நண்பர்களோடு கிளம்பி பார்ட்டி என்று போனவள் வீடு திரும்பவில்லை; அருகேயுள்ள நேஷன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பேஷன் டெக்னாலஜியில் படிக்கிறாள்; கடைசியாக அண
Comments