அணுசக்தியும் எதிர்காலமும்

கூடங்குளம் அணு உலை விவகாரம் உச்சகட்டத்தை எட்டியிருப்பதை ஒட்டி மக்களுக்கு அது குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு முன்னாள் ஜனாதிபதியும் ஒரு கட்டத்தில் இந்திய அணுகுண்டு பரிசோதனைகளைத் தலைமை தாங்கியவருமான ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் இரு கட்டுரைகளை சமீபத்தில் (நவம்பர் 6, 7 தேதிகள்) எழுதி வெளியிட்டார்.

ஒன்று ஸ்ரீஜன் பால் சிங் என்பவருடன் இணைந்து எழுதிய இந்தியாவின் எதிர்காலத்திற்கு அணுசக்தியின் அவசியம் பற்றிப் பேசும் விரிவான தி இந்து நாளிதழ் கட்டுரை. மற்ற‌து வெ. பொன்ராஜ் என்பவருடன் எழுதிய கூடங்குளம் அணு உலையின் பாதுகாப்பு மற்றும் முக்கியத்துவம் பற்றிய 40 பக்க ஆய்வறிக்கை. இந்த இரண்டாவது கட்டுரையின் தமிழ் வடிவம் ஏற்கனவே அப்துல் கலாமின் வலைதள‌த்திலும், விகடன், தினமலர் செய்தித்தளங்களிலும் கிடைக்கிறது.

முதலாவது கட்டுரையை நான் மொழிபெயர்த்து இன்றைய தமிழ் பேப்பரில் மூன்று பகுதிகளாக‌ வெளியாகி உள்ளது.

அணுசக்தியும் எதிர்காலமும் – அப்துல் கலாம் : 1 http://www.tamilpaper.net/?p=4793
அணுசக்தியும் எதிர்காலமும் – அப்துல் கலாம் : 2 http://www.tamilpaper.net/?p=4840
அணுசக்தியும் எதிர்காலமும் – அப்துல் கலாம் : 3 http://www.tamilpaper.net/?p=4810


என்னளவில் இவை இரண்டுமே முக்கியமான கட்டுரைகள். ஒரு நல்ல‌ வெகுஜனப் புரிதலுக்கான‌ தொடக்கம். ஏற்கனவே ரோசா வசந்த் இக்கட்டுரைகளை முன்வைத்து கடுமையான‌ விமர்சன‌ங்களை த‌ன் எதிர்வினையாகப் பதிவு செய்துள்ளார்.

சாரு நிவேதிதாவிற்காக பால் ஸக்கரியாவின் நீண்ட நேர்காணலை 2009ன் ஆரம்பத்தில் மொழிபெயர்த்தற்குப் பின் இது எனது பெரிய மொழியாக்க முயற்சி. எம்எஸ் வேர்டில் 22 பக்கங்களுக்கு மேல் வந்த பெரும் உழைப்பைக் கோரிய பணி.

விஷயத்தின் அடிப்படையே புரியாமல் போராட்ட ஷாமியானாக்களில் உட்கார்ந்திருக்கும் ஒருவருக்கு உளமாற்றத்தை ஏற்படுத்தினால், குறைந்தபட்சம் யோசிக்கத் தூண்டினாலே அது எனது உழைப்பிற்குக் கிட்டிய வெற்றி எனக் கொள்வேன்.

Comments

Anonymous said…
http://www.oldindianphotos.in/view/flipcard
தனுசின் பொறுக்கி கதாபாத்திரங்களும் கொலைவெறி பாட்டை பிரபலமடைய வைத்த ஏமாற்று வித்தையும்
http://gnani.net.in/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF/?cat=8
http://vadakkupatti.blogspot.com/2011/11/blog-post.html

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

CSK Diet