எக்ஸைல் : ஏமாற்றம்

சாரு நிவேதிதாவின் ஆறாவது நாவலான எக்ஸைல் குறித்த எனது கட்டுரை இன்றைய தமிழ்பேப்பர்.நெட் இதழில் வெளியாகி உள்ளது. நாவலைப் பற்றி ஒற்றை வார்த்தையில் என் கருத்து கேட்டால் "disappointing" என்று சொல்வேன். காசும், நேரமும், சிந்தனையும் விரயம் செய்து படிக்கும் வாசகனை சாரு மதிக்கவில்லையே என்பதே எனது ஆதங்கம்.

சாரு நிவேதிதாவின் எக்ஸைல் – ஒரு பின்நவீனத்துவ விமர்சனம் : http://www.tamilpaper.net/?p=5024

எனது வாழ்வின் ஆகச்சிறந்த வசவுச்சொற்களை பெற்றுத்தரும் வல்லமை வாய்ந்தது இக்கட்டுரை எனத்தோன்றுகிறது!

Comments

Omakuchchi said…
ஒரு சில ப்ளாக்ல நாவல தலைல வச்சு கொண்டாடுறாங்களே, எனக்கு மட்டும் ஏன் பிடிக்கல, நல்லாயில்லன்னு தோனுதுன்னு ஒரு குழப்பத்துலையே இருந்தேன். இப்போ கொஞ்சம் தெளிவாகிட்டேன். நன்றி
ஹா ஹா ஹா!!நாவலை விட விமர்சனம் செம காரம்(கும்மாங்கோ: ஸ்வீட் எங்க?)மிகவும் ரசித்தேன்!அப்புறம் அந்த விந்து படம் ராசலீலாவிலும் இருக்கும்!இதில் கொஞ்சம் அதிகம்!
Anonymous said…
http://pitchaipathiram.blogspot.com/2010/07/blog-post.html
Kapalee said…
ஒரு புத்தகம் / கதை என்றால் பல விதமான விமர்சனங்கள் வரத்தான் செய்யும். சிலருக்குப் பிடிக்கும். சிலருக்கப் பிடிக்காது . ஆனால், சாருவின் சகிப்பின்மை அவரின் சில புத்ததகங்களை படிக்க முயன்ற எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை . சுஜாதா போன்றவர்களுக்கும் சாரு போன்றவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை நன்கு காட்டுகிறது.

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்