மெல்லினம் இதழில்

ஆஸ்திரேலியாவிலிருந்து கடந்த இரு மாதங்களாக வெளியாகும் புதிய மாத இதழ்; ஆனந்த விகடன் சைஸில் அதே டெம்ப்ளேட்டில் 64 தளதள பளபள பக்கங்க‌ள்; இரா.முருகன், கல்யாண்ஜி, பாவண்ணன், பத்ரி சேஷாத்ரி ஆகியோரின் படைப்புகள்; ஓரிதழின் விலை 2 ஆஸ்திரேலிய டாலர்கள் (இந்திய மதிப்பில் கிட்டதட்ட ரூ.100). இது தான் மெல்லினம்.

வெகுஜன இதழ்களில் திரைவிமர்சனம் என்பது முற்றிலும் வேறு ஜாதி - சுருக்கமாக எழுத வேண்டும்; சுவாரஸ்யமாக எழுத வேண்டும்; நடுநிலைமையாக எழுத வேண்டும். மெல்லினம் பத்திரிக்கையின் நவம்பர் 2011 இதழில் 7ஆம் அறிவு திரைப்படத்திற்கு நான் எழுதிய விமர்சனத்தின் எடிட் செய்யப்பட்ட வடிவம் ஒரு பக்க அளவில் வெளியாகி இருக்கிறது.

வாய்ப்பும் விருப்பமும் இருப்பவர்கள் வாங்கி வாசிக்கலாம். விமர்சனம் எழுத சந்தர்ப்பமளித்த நண்பருக்கு நன்றிக‌ள்.

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்