காதல் புராணம் : கனாக்காதலன்

காதல் புராணம் கவிதைத்தொடர் குறித்து பதிவர் கனாக்காதலன் இங்கே பகிர்கிறார்:

*******

http://kanakkadalan.blogspot.com/2011/03/6.html

*******

ஜன்னல் பக்கங்கள் 6

Posted by கனாக்காதலன் on Wednesday, March 09, 2011

காதலர் தினத்திலிருந்து தமிழ் பேப்பர் டாட் நெட்டில் காதல் புராணம் என்ற குறுங்கவிதைத் தொடர் வெளி வந்து கொண்டிருந்தது. மூன்று நான்கு வரிகளில் ஒரு பெண்ணின் பல்வேறு பருவநிலைக் காதலை அழகாய் அடைத்து வைத்திருந்தார் கவிஞர். அதை எழுதுபவரின் பெயர் வேண்டுமென்றே வெளிப்படுத்தப்படாமல் விடப்பட்டிருந்தது. அக்கவிதைகளின் நடைக்கு நான் ஏற்கனவே பழக்கப் பட்டிருந்தாலும் என்னால் கண்டுபிடிக்க இயலவில்லை. அக்கவிதை தொடரை எழுதியவர் எழுத்தாளர் சரவணக்கார்த்திகேயன் அவர்கள்.

எனக்குப் பிடித்த சில கவிதைகள் :

உன்னைக்கண்டாலே
இடம்வலமாகிற‌தென்
ம்ச‌ஞ்ப‌ர‌பி.

துல்லியமாய் இக்கணம் வரை நீ
தொலைபேசிக்கம்பிவழி தந்த‌
மொத்த முத்த எண்ணிக்கை –
லட்சத்து முப்பத்தாறாயிரத்து
தொள்ளாயிரத்து இருபத்தாறு
தொள்ளாயிரத்து இருபத்தேழு
தொள்ளாயிரத்து இருபத்தெட்டு...

பதினெட்டாம் முறையாக‌ நான்
வேண்டாமென முனகிய போது
என் தேகத்தில் மிச்சமிருந்தவை
ஒரு ஜோடிக்கொலுசுகள் மட்டும்.

No comments: