சகா : சில குறிப்புகள் - 14

நான் என்னைப்பற்றி எழுதுவதாக
எல்லோரும் சொல்கிறார்கள்
நான் உங்களைப் பற்றி எழுதுகிறேன் என்பது
உங்களுக்கு மட்டும்தான் தெரியும்.


- ரமேஷ் பிரேதன்

*******

"உன்னைப் பற்றி என் வலைதளத்தில் எழுதுவதால், சகா என்பது நான் தான் என்று பல புத்திஜீவிகள் - என் நெருங்கிய சுற்றமும் நட்பும் கூட‌ - நினைத்துக் கொள்கின்றனர். இதனால் எனது தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கப்படுமோ என அஞ்சுகிறேன். அதனால் 'சகா குறிப்புகள் இனி வெளிவராது' என அறிவிக்கப்போகிறேன்" என சகாவிடம் - அவன் இதற்கெல்லாம் அசந்து விடுகிறவன் இல்லையெனினும் - ஒப்பாரி வைத்தேன்.

பின் எங்களிடையே நடந்த சம்பாஷணை இது (குறிப்பு: இவற்றில் இந்த மூன்று புள்ளிகளை ["..."] மட்டும் கொண்ட வசனங்கள் எல்லாம் அடியேன் பேசியவை):

"அது உன் இஷ்டம். நீயில்லாவிட்டால் நான் வேறு ஆள் பார்த்துக் கொள்கிறேன்."

"..."

("என்னைத் தவிர வேறெந்த இளித்தவாயன் உன் குப்பைக‌ளை எழுத முன்வருவான்?" என்ற கேள்வியை எங்கள் "நண்பேன்டா" நட்பின் பொருட்டு அடக்கிக்கொண்டேன்.)

"கூரை மேல் சோற்றைப் போட்டால் ஆயிரம் காக்கை. "

"..."

(தன் சினேகிதிகளைப் பற்றிப் பேசும் போதும் சகா என்கிற அந்தக் கிராதகன் இதே பழமொழியை அடிக்கடி பிரயோகிக்கக் கண்டிருக்கிறேன் - பெண்ணியவாதிகள் கவனிக்க‌!)

"யாருமே எழுதாவிட்டால் கூட பிரச்சனையில்லை."

"..."

(அப்போது அவன் தனது முகத்தை மிகவும் சீரியஸாக்கைக் கொண்டு "வரலாற்றை நம்பி எந்த யுகபுருஷனும் இருந்ததில்லை; மாறாக அவன் தானே அதை சிருஷ்டிக்கிறான்" என்பது மாதிரியான பாவனையில் வைத்துக் கொண்டான் என்பது குறிப்பிடத்தக்கது.)

"மூட் இருந்தால் நானே ஒரு வலைப்பூ தொடங்கி எழுதுவேன் - அது வேறு விஷயம்."

"..."

(அக்கொடுமை நிகழ்ந்தாலும் இக்கொடுமை நிகழாதிருக்க யாரேனும் பிராத்தியுங்கள்.)

"வேண்டுமானால் இதையே ஒரு தனிப்பதிவாகப் போட்டுக்கொள் - I really don't care."

"..."

(That's all! இதோ இப்போது 'சகா : சில குறிப்புகள் - 14' நானே எழுதிக் கொண்டிருக்கிறேன்.)

Comments

Anonymous said…
http://www.anshuldudeja.com/2009/03/show-only-post-title-in-blogger-label.html


use the above link to show just post titles instead of showing both title and its content...
Natraj.P said…
என்னாச்ச்சு சகா?

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்