போர்க்களமும் திருவாசகமும் - 3

Copyright: இப்பாடல் இயக்குநர் ராஜ்மோகனின் 'போர்க்களம்' படத்துக்காக 2005ல் எழுதப்பட்டது. வரிகள் முழுக்க முழுக்க என்னுடையவை. வேறு இடங்களில் பயன்படுத்தும் உரிமையும் என்னையே சாரும். வேறு படங்களில் பயன்படுத்த விரும்புபவர்கள் என் முறையான அனுமதியை முன்கூட்டியே பெற வேண்டும்.

**************

Situation: கதாநாயகன் கதாநாயகியைப் பார்த்து முதன் முதலில் காதல் வசப்படுகையில் அவனுக்குள் நிகழும் மற்றங்களைச் சொல்லும் பாடல்.

பல்லவி:
காதல் என்னைக் கொல்கிறதே
கன‌வுகள் உயிரைத் தின்கிறதே
நெஞ்சம் கொஞ்சமாய் வலிக்கிறதே
இது என்ன இதயத்தின் போர்க்களமா?

அனுபல்லவி:
குருதிப்புனலாடிக் கவிதைகள் கசிகிறதே
உயிரைத்திருடுமோர் இசையும் வழிகிறதே
தீயச்சுடுமொரு நிலவும் பொழிகிறதே
ஆயுதமின்றியே உயிர் மெய் அழிகிறதே.

சரணம் 1:
சாலையில் நடக்கையில் கூட்டம் பிடிக்கலை
மாலையில் படுக்கையில் தனிமை பிடிக்கலை
கண்கள் மூடினால் தூக்கம் பிடிக்கலை
பெண்கள் கடந்தால் பார்க்கப் பிடிக்கலை
வயிற்ருக்கு ஏனோ பசிக்கப் பிடிக்கலை
நாக்கில் எதையும் ருசிக்கப் பிடிக்கலை
சிகரெட் வாசனை சுத்தமாப் பிடிக்கலை
நண்பர்கள் கண்டால் பேசப் பிடிக்கலை
அம்மா பிடிக்கலை அப்பா பிடிக்கலை
அவளைத் தவிர எதுவும் பிடிக்கலை.

சரணம் 2:
மழயில் முழுசாய் நனையப் பிடிக்குது
அலையில் நுரையாய்க் கரையப் பிடிக்குது
சுவாசக்காற்றுக்குள் பூக்கள் பிடிக்குது
பட்டாம் பூச்சிகள் ரசிக்கப் பிடிக்குது
தலையணை அணைத்துத் தூங்கப் பிடிக்குது
தனக்குத் தானே பேசப் பிடிக்குது
கடைசிச்சொட்டு தேநீர் பிடிக்குது
தமிழே மறக்குது மெளனம் பிடிக்குது
எனக்குள் நிகழும் அவஸ்தைகள் பிடிக்குது
எனக்கே என்னை ரொம்பப் பிடிக்குது.

**************

இதே பாடலுக்கு நான் எழுதிய‌ வேறு சில பல்லவிகள்:

1:
கனவுகள் செல்லமாய்க் கொல்லுது
உயிரை மெல்லமாய்த் தின்னுது
உடம்புக்குள் என்னவோ பண்ணுது
அட! இது தான் காதல் என்பதா?

2:
மனசுக்குள் அணையொன்று உடையுது
உதயத்தில் புதுவெள்ளம் பாயுது
இமைக்கையில் அவள் முகம் தெரியுது
உயிர் மெய்யில் ஒரு வேகம் பரவுது

3:
நரம்பின் முனைகளில் பூக்கள் பூக்குது
நாளத்தில் சுவர்களில் ஸ்வரங்கள் கேட்குது
குருதிக்குள் டால்பி ஸ்டீரியோ அதிருது
உலகின் ஓரம் வரை ஜீவன் சிதறுது

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்