ராஜ்கமல் ஃபில்ம்ஸ் இண்டர்னேஷனல் சார்பில் சென்னை ஐ.ஐ.டி.யில் ஆங்கில வழியில் நடத்தப்பட்ட சர்வதேச திரைக்கதை பயிற்சிப் பட்டறையின் official siteல் மேற்கண்ட குறிப்புடன் கமல்ஹாசன் தந்திருக்கும் பதினேழு தமிழ் படங்களின் பட்டியல் இது:
- என்ன தான் முடிவு - கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்
- சாது மிரண்டால் - திருமலை / மகாலிங்கம்
- காவல் தெய்வம் - ஜெயகாந்தன் / கே.விஜயன்
- யாருக்காக அழுதான் - ஜெயகாந்தன்
- அவர்கள் - கே. பாலசந்தர்
- மன்மத லீலை - கே. பாலசந்தர்
- அவள் அப்படித்தான் - அனந்து / ருத்ரையா
- நாயகன் - மணிரத்னம்
- கல்லுக்குள் ஈரம் - செல்வராஜ் / பாரதிராஜா
- தேவர் மகன் - கமல்ஹாசன் / பரதன்
- மகாநதி - கமல்ஹாசன் / சந்தான பாரதி
- அலைபாயுதே - மணிரத்னம்
- ஹே ராம் - கமல்ஹாசன்
- அன்பே சிவம் - கமல்ஹாசன் / சி. சுந்தர்
- மும்பை எக்ஸ்பிரஸ் - கமல்ஹாசன் / சிங்கிதம்
- விருமாண்டி - கமல்ஹாசன்
- பருத்தி வீரன் - அமீர்
- இவற்றில் ஆறு படங்கள் நான் பார்த்ததில்லை (என்ன தான் முடிவு, சாது மிரண்டால், காவல் தெய்வம், யாருக்காக அழுதான், மன்மத லீலை, அவள் அப்படித்தான்). அவை பற்றி இப்போதைக்கு சொல்ல முடியாது.
- இவை தவிர பிற படங்கள் கணிசமான அளவில் இப்பட்டியலில் இணையும் தகுதியுடன் கமலின் தேர்வுக்கு நியாயம் சேர்ப்பவையே. எல்லோரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படங்கள் என்பேன்.
- இந்தப் பதினேழு படங்களில் ஒன்பதில் - அதாவது பாதிக்கு மேல் - கமல் ஒரு நடிகராகவோ, திரைக்கதையாசிரியராகவோ, இயக்குநராகவோ பங்காற்றியிருக்கிறார். அதனால் இப்பட்டியல் biased ஆக தோன்றுகிறது.
- எல்லாப் பேட்டிகளிலும் கலைஞரின் திரைக்கதை கைப்பிரதிகளைப் பார்த்து வளர்ந்தவன் என்று சொல்லும் கமலின் பட்டியலில் கலைஞரின் ஒரு படம் கூட இல்லாமல் போனது ஆச்சரியமில்லை.
- மும்பை எக்ஸ்பிரஸ் இப்பட்டியலுக்கிழைக்கப்பட்ட ஓர் அநியாயம் (என் நண்பனொருவன் இப்படத்தை பதினைந்து முறைக்கு மேல் பார்த்து விட்டு அற்புதமென்கிறான். எனக்கு அவ்வளவு மன தைரியமில்லை).
- அன்பே சிவமும் அப்படியே (நிறையப்பேர் அதன் concept நன்றாயிருந்தது என்கிறார்கள். மன்னிக்கவும். நான் திரையரங்கு செல்வது பாடம் கற்க அல்ல. அதற்கு புத்தகங்களும் அனுபவங்களும் இருக்கின்றன).
- பட்டியலின் ஆச்சரியம் அலைபாயுதே. அது எனக்கும் மிகப்பிடித்த படம். அவரது படைப்புகளிலிருந்து நோக்குங்கால் கமலுக்குள் இது போன்றதொரு மென்ரசனைக் கலைஞன் இருப்பது ஆச்சரியமளிக்கிறது.
- மிகுந்த சந்தோஷத்திற்குரிய விஷயம் பருத்திவீரன் படத்தை சேர்த்திருப்பது. அமீர் போன்ற இளம் தலைமுறை படைப்பளிகளுக்கு கமல் தரும் அங்கீகாரத்தின் குறியீடாகவே இதைப் பார்க்கிறேன்.
2 comments:
I differ with u on Anbe Sivam...I wud hav gladly included Kurudhi Punal instead of that poor Mumbai Express...Infact I enjoyed it better than Khakka Khakka
@Keerthi,
I replied u at http://www.writercsk.com/2009/06/blog-post_13.html
Post a Comment