கடிதம்: மனித குல எதிரிகள்

மீண்டும் ஒரு பின்னூட்டதிற்கு பதிலாய் ஒரு தனிப்பதிவு - பி.ஜே.பி.யும் நானும் என்ற பதிவுக்கு பாலகிருஷ்ணா இட்ட பின்னூட்டதிற்கு.

############

பாலகிருஷ்ணா said...

மனித குல எதிரிகள் இரு வகையினர். ஒருவர் நேரடியாக மனிதர்களை அழிப்பவர்கள். மற்றொருவர் மறைமுகமாக மக்களை அழிப்பவர்கள். இவர்களில் எவர் சிறந்தவர்கள் என்று பதிலிடுங்களேன் சரவணன்.

உதாரணமாக :
டேய் நீ அந்த மதக்காரன் அதனால் சாப்பிடக்கூடாது. - நேரடியான தாக்குதல்

சாப்பிடு சாப்பிடு நன்றாக சாப்பிடு என்று சொல்லி விட்டு முன்பே சோற்றில் விஷத்தைக் கலந்து வைப்பவர்கள் - மறைமுக தாக்குதல்.

Saturday, April 4, 2009 3:23:00 PM IST

############

பாலகிருஷ்ணா,

இரு சாரருமே மிக மோசமானவர்கள் தான். சந்தேகமேயில்லை. If I am right, நீங்கள் காங்கிரஸைத்தான் இரண்டாவது வகையாகக் குறிப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன். பி.ஜே.பி.யை எதிர்ப்பதாக எழுதியதற்கு நான் காங்கிரஸுக்கு ஆதரவு என்று அர்த்தம் அல்ல.

இந்திரா படுகொலைக்குப் பிந்தைய காங்கிரஸின் சீக்கியப் படுகொலைகள், இல‌ங்கை தமிழர் பிரச்சனையில் அவர்களின் பழமைவாத‌ நிலைப்பாடு, விவசாயிகள் கடன் தள்ளுபடி போன்ற பல விஷயங்களில் காங்கிரஸை நான் கடுமையாக எதிர்க்கிறேன்.

பி.ஜே.பி. கிரிமினல்களின், மதவாதிகளின், மனிதாபிமானவற்றவர்களின் கூடாரம் என்றால், காங்கிரஸ் முட்டாள்களின், கையாலாகாதவர்களின், பயந்தாங்கொள்ளிகளின் கூடாரம். இந்த இரண்டு கும்பலுமே நாட்டுக்கு நல்லாட்சி கொடுக்க முடியாது.

இரண்டு கட்சிகளிலுமே விதிவிலக்கான ஆளுமைகள் உண்டு என்பது வேறு விஷயம். ஆனால் துரதிர்ஷ்டவசமாய் அதனால் எந்தப்பிரயோஜனமும் இல்லை - ஒரு குடம் விஷத்தில் ஒரு துளி அமிர்தம் கலப்பதால் விஷ‌த்துக்கு எந்த மாற்றமும் இல்லை என்பது போல.

என் நிலைப்பாடு புரிந்திருக்கும் என நம்புகிறேன்.

-CSK

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்