உல‌கெல்லாம் ஒரு சொல்

இன்று காலை மனைவியுடன் ஒரு சிறிய அல்லது மிகச்சிறிய சண்டை.

திட்டிவிட்டு அலுவலகம் கிளம்பி விட்டேன் - மனது கேட்கவேயில்லை.

போகும் வழியில் "Sorry.. I Love You.." என்று எஸ்.எம்.எஸ். அனுப்பினேன்.

அவளிடமிருந்து எந்த பதிலுமில்லை. அனுப்ப மாட்டாள் எனத் தெரியும்.

சந்தோஷத்தில் என்னைக்கொஞ்சம் திட்டியிருப்பாள் என்பதும் தெரியும்.

மாலையில் கண்ணாடி பார்த்து மெல்லிய ஒப்பனை செய்து கொள்வாள்.

வீடு திரும்பும் எனக்குத்தர ஒரு பிரத்யேகப்புன்னகையுடன் காத்திருப்பாள்.

*******

இதைத்தான் மிகச்சுலபமாய் ஒரே வார்த்தையில் "காதல்" என்கிறார்கள்.

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்