சுதந்திரம் பற்றி ஸக்கரியா - 2

"Rediff"ல் வெளியான‌ மலையாள எழுத்தாளர் பால் ஸக்கரியாவுடனான நேர்காணலின் இரண்டாம் பகுதியின் தமிழாக்கம் இது.

############

இந்திரா காந்தி அல்லது ராஜீவ் காந்தி
செய்த ஊழலில் கால் பங்கு தான் நரசிம்மராவ் செய்தார்தனி மனிதனின் சுய நலம் பற்றிச்சொன்னீர்கள். அவன் ஏழையாய் இருக்கும் போது அவன் கேரளாக்காரனா, தமிழனா, கன்னடனா அல்லது வெறும் இந்தியனா? தனி மனிதனாக பிழைத்திருத்தல் பற்றி மட்டுமே அவன் கவலைப்படுகிறான், அத‌ற்கு மேலான‌ எதைப்பற்றியும் அல்ல‌. அப்படித்தானே?

ஒரு எல்லை வரை, ஆம். அதை விட‌ துணைக்கலாசாரங்களே சிறப்பான அடையாளத்தைத் தருகின்றன‌ - தேசிய உணர்வை விட நிர்வாக ம‌ற்றும் கலாசார அளவை. ஒரு கேரளாக்காரனாய் அவனுக்கு கூடுதல் பெருமை இருக்கிறது. ஒரு தமிழனாய் அவனுக்கு கூடுதல் பெருமை இருக்கிறது. தமிழ்நாடு மேலே வர அவன் ஏதாவது செய்ய விரும்புகிறான். எல்லா விஷயங்களுமே தில்லி என்கிற யாரும் நெருங்க‌ முடியாத, தொலைவிடத்தில் நடக்கிறது. அது மிக தூரத்தே நடக்கும் ஒரு நிழல் நாடகம் போன்றது.


ஆட்சி தில்லியில் மையமிட்டிருப்பதும், பலமான தேசிய உணர்வைக் கொண்டு வர முடியாத அளவில் மத்திய மாநில உறவு நிலவுவதும் தான் இதற்குக் காரணமா?

அது பல காரணங்களுள் ஒன்று. இந்திரா காந்தி போன்றவர்கள், இருந்த எல்லா நம்பிக்கைகளையும் தகர்த்து, தில்லியிலிருந்து நடக்காவிட்டால், எதுவுமே நடக்காது என மக்களை நம்ப‌ வைத்து விட்டனர். உண்மையில், மத்தியில் கூட்டாட்சி அமைச்சரவை வந்த பின் நிஜ சமஷ்டித்துவம், நிஜ குடியரசு வருவதற்கு இப்போது மிக நல்ல வாய்ப்பிருக்கிறது. ஆனால் நடுத்தர வர்க்க, உயர் நடுத்தர வர்க்க இந்தியன் கூட்டணிகளையும் அவை செயல்படும் விதத்தையும் கண்டு பயப்படுகிறான். மதத்தைப்போலவும், அது போன்ற வேறு சில விஷயங்களைப்போலவும், தான் அணுகுவதற்கு எளிய‌ ஒருமையான நிலைப்பொருள் ஒன்று இருக்க வேண்டும் என விரும்புகிறான். குடியரசு என்பது கூட்டுத்தன்மை வாய்ந்தது. கேரளாவில் அதை கடந்த முப்பது வருடங்களாக வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.


அதனால் மத்தியிலும் கூட்டாட்சியே இருக்க வேண்டும் என சொல்கிறீர்கள்?

கூட்டாட்சி வந்தால் நல்லது. அப்படி இல்லையென்றால் நாம் பிரச்சனையில் இருக்கிறோம். இப்போது யாராவது தில்லியிலிருந்து இருப்புக்கரம் கொண்டு மறுபடியும் ஆட்டுவிக்க முயன்றால், காந்திஜியின் கனவு தேசம் நாய்களுக்கு இரையாகும்.


ஆனால் இது போன்ற கூட்டாட்சியில் இருக்கும் கட்சிகள் தங்களின் இடம் சார்ந்து தான் சிந்திப்பார்க்ளே ஒழிய இந்தியா முழுமைக்கும் சிந்திக்கமாட்டார்கள் எனத் தோன்றவில்லையா?

இந்தியா முழுமைக்கும் என்கிற விஷயம் இப்போது கூட இன்னும் வேர்விடவில்லை. நீங்கள் எந்த எட‌த்திலிருந்து வந்தீர்களோ அதைப்பற்றிச் சிந்தித்தாலே போதுமானது. 25 பேர் தில்லியில் உட்கார்ந்திருக்கிறார்கள் என்றால் அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் சொந்த மாநிலம் பற்றிச்சிந்தித்தாலே நீங்கள் காப்பாற்றப்பட்டுவிட்டீர்கள் என நினைக்கிறேன்.


அப்படியென்றால் எல்லா மாநிலங்களிலிருந்தும் நமக்கு ஆட்கள் வேண்டுமா?

நமக்கு நல்ல பிரதிநிதித்துவம் மிக்க மத்திய அரசு தேவை. இந்த அமைப்பை அழித்தவர் திருமதி காந்தி. ஏனெனில் அவருடைய நோக்கம் குடும்ப அரசியலாக இருந்தது. சிக்கிம் மக்களுக்கு, மலையாளிகளைப்போல், தமிழர்களைப்போல், காந்தியின் தலைமையின் கீழ் இருக்கும் கனவு இருந்திருக்குமா என ஆச்சர்யப்படுகிறேன். ஓர் இந்தியப்படை அவர்களை நம் தேசத்துடன் சேர்த்த போது என்ன உணர்ந்திருப்பார்கள்?

ஒரு விஷயத்தை மிக விரும்புவதைப் போன்ற‌ தேசிய உண‌ர்வை மக்கள் மனங்களில் ஊட்டுவதில் நாம் எங்கோ தவறிவிட்டோம். நீங்கள் ஐரோப்பாவுக்கோ அமெரிக்காவுக்கோ போனால், உற்சாகமற்ற சம‌யங்களில் கூட மக்கள் தேசம் என்பதன் மீது திடமான நம்பிக்கை வைத்திருப்பதைக் காணலாம். தேசம் என்பதற்கு, அதன் நல‌னுக்கு, அதன் மரியாதைக்கு நீங்கள் செய்ய வேண்டியது அது தான். தேசத்துக்கான அர்ப்பணிப்பு என்பது இங்கு குறைவு. ஐம்பது வருடங்கள் அதை அடைவதற்கு குறைவான காலமாக இருக்கலாம். நம்மிடையே கிட்டதட்ட ஐம்பது வெவ்வேறான கலாசாரங்கள் இருக்கின்றன - ஒவ்வொன்றும் அவற்றின் சொந்த நலனைப்பேணுவதில் முனைப்பாய்.


நாம் மொழிகளால் வேறுபட்டிக்கிடந்தது தான் மக்களின் இந்த பிரிவினை தொடங்கக் காரணமாய் அமைந்ததா?

பிரிவினை என்கிற கேள்வி எங்கே இருக்கிறது? யார் நம்மைப்பிரித்தார்கள். யாரும் நம்மைப்பிரிக்கவில்லை. இந்தியா எங்கே இருந்தது? எந்த தேசத்தைப்பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கிறோம்? பிரிட்டிஷ் வருவதற்கு முன்னால் இருந்த ஒரு நாட்டையாவது உங்களால் எனக்கு சுட்டிக்காட்ட முடியுமா? மௌரியப்பேரரசும், குப்தப்பேரரசும், மொகலாயப்பேரரசும் இருந்தன. பாண்டியப்பேரரசும், சோழப்பேர‌ரசும் இருந்தன. பல ராஜ்யங்கள் இருந்தன. இந்தியா என்கிற நாட்டைப்பற்றி எனக்குத்தெரியாது. இந்தியாவின் வரலாற்றை வார்த்தைக்கு வார்த்தை ஆராய்ந்து சொல்லுங்கள், இந்தியா என்கிற தேசம் எங்கே என்று. சிலர் இவற்றையெல்லாம் ஒன்றாய்ப்போட முயற்சித்து, தேசம் என்று அழைத்தனர். அது நடக்கலாம்; நடக்காமலும் போகலாம்.


அமெரிக்கா போன்ற நாடுகளில் மக்கள் மத்தியில் தீவிரமாக தேசபற்றை விதைக்க‌ச் செய்வதற்கு தலைவர்கள் இருக்கிறார்கள் என்பது தான் இதற்கு காரணமா? நான் பில் கிளின்டனின் ஓர் உரையைப்பார்த்தேன். மொத்த தேசத்தையும் எழுச்சி கொள்ள வைக்கும் வகையில் அமைந்த அது, அத்தனை அற்புதமாக இருந்தது.

தேசம் என்றே ஒன்று இல்லாத போது மகாத்மா காந்தி இதை இந்தியாவுக்குச்செய்தார். அவரால் தேசம் என்று ஒன்று இருக்கிறது என மக்களிடம் சொல்ல முடிந்தது. எல்லாத் தலைவர்களும் காந்தியைப் போலிருப்பார்கள், எல்லா விஷயங்களும் நல்லபடியாய் நடக்கும் என‌ ஒரு பெரும் கனவை காந்திஜி அவர்களுக்கு அளித்தார்.


யாராலும் தங்களுக்கு ஒரு கனவைக் கொடுக்கமுடியவில்லை என்பதற்காக மக்கள் விரக்தியடைந்துவிட்டார்களா?

ஆம். யாராலும் எந்தக்கனவையும் கொடுக்கமுடியவில்லை. கொடுக்கப்பட்ட கனவுகளும் பாழ்படுத்தப்பட்டுவிட்டன.


மக்களின் கனவுகள் சீரழிக்கப்பட யார் காரணம்?

சீரான, ஊழலற்ற ஆட்சியை உறுதிபட வழங்கக்கூடிய ஒரு நல்ல தலைமை நமக்கு இருந்திருக்குமானால், கதையே வேறு. அதனால் ஆட்சித் தலைமையேற்றவர்களே சீரழித்தவர்கள். நேரு காலம் வரைக்கும் மாநிலங்களில் கூட நல்லதொரு தலைமை இருப்பதாய் ஒரு தோற்றம் இருந்தது. இந்திரா காந்தி தான் சுயநலம், கொடூரம், தீய அரசியல் ஆகியவற்றை அறிமுகப்படுத்தினார். அங்கே கொள்கைகளுக்கு இடமில்லை - பொது நிறுவனங்களை அழித்தும் சுரண்டியும் கணக்குச் செய்யும் எண்களுக்குத்தான் இடம். அங்கே தான் சரிவு தொடங்கியது, அதற்குப்பின் நாம் மீளவே இல்லை.


ராஜீவ் காந்தி ஆட்சிக்கு வந்த போது மக்கள் மனதில் ஒரு நம்பிக்கை இருந்தது என நினைக்கிறீர்களா?

இல்லை. ராஜீவ் ஒரு முட்டாள். அவர் எதையும் அடைந்திருப்பார் என நான் நினக்கவில்லை. அதைவிட, அவர் நல்லவராகவும், இளையவராகவும் இருந்ததால் கூட்டத்தின் கலவரத்திற்கு ஆளாகியிருப்பார்.


நாட்டிற்கு ஏதாவது செய்யமுடிந்த ஒரு தூய்மையான இளைஞர் என அவர் தன் பிம்பத்தைக் கட்டமைத்தார்.

ஆம். ஆனால் அந்தக் குடும்பத்திலிருந்து, அந்த சூழலிலிருந்து வந்த யாரும் தூய்மையாய் இருப்பார்கள் என எனக்குத்தோன்றவில்லை.


வாரிசு அரசியல் நாட்டை அழித்துவிட்டதா?

நம்முடைய வீழ்ச்சிக்கு ஒரே ஒரு காரணத்தை நீங்கள் தேடுவீர்களானால், அது இந்திரா காந்தியின் கொள்கையற்ற அரசியலுடன் நேரடியாகத் தொடர்புடையது.


நரசிம்மராவின் ஆட்சி ஊழலால் நிறைந்திருந்த போதிலும் அவர் மக்கள் மனதில் நேரு மற்றும் காந்தி குடும்பத்தார் தவிர வேறு ஆள் நம்மை ஆள‌லாம் என்கிற உண்மையை மக்களை ஏற்க வைத்தார்.

நிச்சயமாக. நரசிம்மராவின் ஆட்சியை அதற்கு முந்தைய ஆட்சியைவிட ஊழல் நிறைந்ததாய் நான் நினைக்கவில்லை. வடக்கிலிருந்து இயங்கிய பாரம்பரியமான ஆளும் குடியிலிருந்து வராமல், நாட்டின் வேறோர் இடத்திலிருந்து வந்தவர் என்பதால் அவர் சிறப்பு பலிகடா ஆக்க‌ப்பட்டார். அப்படியில்லையென்றால், அவர் இந்திரா காந்தி அல்லது ராஜீவ் காந்தியை விட நாலில் ஒரு பங்கு தான் ஊழல் செய்தவர்.


திரும்பிப்பார்க்கையில் ராவின் காலத்தை இந்திய சரித்திரத்தில் நீங்கள் எப்படி மதிப்பிடுவீர்கள்?

ஆசுவாசம் மிக்க ஒரு பெருங்காலம் என‌க்கருதுகிறேன். சுந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவில் அது மாற்றத்திற்கான ஒரு தொடக்கப்புள்ளி.


எந்த அடிப்படையிலான மாற்றம்? வாரிசு ஆட்சி முடிந்ததா?

ஆம். வாரிசு ஆட்சியின் முடிவு. நிச்சயமாக, நிச்சயமாக. நாம் மீண்டும் அதற்குத் திரும்பலாம். ஆனால் தெரித்தோ தெரியாமலோ அவர் பாபர் மசூதி பிரச்சனையை மிகவும் சிக்கலாக்கி விட்டர். பாபர் மசூதியை இடிப்பதை அவர் எப்படி அனுமதித்தார் என்கிற விபரங்கள் நமக்குத் தெரியாது - அவருடன் ஒட்டிக்கொண்டிருந்த பழைய ஆர்.எஸ்.எஸ். வாழ்க்கையிலிருந்து வெளியே வர முடியவில்லையா. அல்லது இந்தப்பிரச்சனை வந்த போது, கட்டிடம் இடிந்து விழும் வரை கண்களை மூடிக்கொண்டிருந்தாரா, அல்லது வேறு ஏதாவது சூழ் நிலைகள் அவரை அவ்வாறு இருக்க‌ வைத்தனவா. அவர் காலத்தில் நடந்த மிக முக்கிய‌க் குற்றமாக இது நிற்கும் என நினைக்கிறேன்.

############

(தொடரும்)

Comments

//ராஜீவ் காந்தி ஆட்சிக்கு வந்த போது மக்கள் மனதில் ஒரு நம்பிக்கை இருந்தது என நினைக்கிறீர்களா?

இல்லை. ராஜீவ் ஒரு முட்டாள். அவர் எதையும் அடைந்திருப்பார் என நான் நினக்கவில்லை. அதைவிட, அவர் நல்லவராகவும், இளையவராகவும் இருந்ததால் கூட்டத்தின் கலவரத்திற்கு ஆளாகியிருப்பார்.நாட்டிற்கு ஏதாவது செய்யமுடிந்த ஒரு தூய்மையான இளைஞர் என அவர் தன் பிம்பத்தைக் கட்டமைத்தார்.

ஆம். ஆனால் அந்தக் குடும்பத்திலிருந்து, அந்த சூழலிலிருந்து வந்த யாரும் தூய்மையாய் இருப்பார்கள் என எனக்குத்தோன்றவில்லை.


வாரிசு அரசியல் நாட்டை அழித்துவிட்டதா?

நம்முடைய வீழ்ச்சிக்கு ஒரே ஒரு காரணத்தை நீங்கள் தேடுவீர்களானால், அது இந்திரா காந்தியின் கொள்கையற்ற அரசியலுடன் நேரடியாகத் தொடர்புடையது.


நரசிம்மராவின் ஆட்சி ஊழலால் நிறைந்திருந்த போதிலும் அவர் மக்கள் மனதில் நேரு மற்றும் காந்தி குடும்பத்தார் தவிர வேறு ஆள் நம்மை ஆள‌லாம் என்கிற உண்மையை மக்களை ஏற்க வைத்தார்.

நிச்சயமாக. நரசிம்மராவின் ஆட்சியை அதற்கு முந்தைய ஆட்சியைவிட ஊழல் நிறைந்ததாய் நான் நினைக்கவில்லை. வடக்கிலிருந்து இயங்கிய பாரம்பரியமான ஆளும் குடியிலிருந்து வராமல், நாட்டின் வேறோர் இடத்திலிருந்து வந்தவர் என்பதால் அவர் சிறப்பு பலிகடா ஆக்க‌ப்பட்டார். அப்படியில்லையென்றால், அவர் இந்திரா காந்தி அல்லது ராஜீவ் காந்தியை விட நாலில் ஒரு பங்கு தான் ஊழல் செய்தவர்
//
காங்கிரசார் கோயிலே கட்டத் தயாராக இருக்கும் ஒருவரைப் பற்றி; இப்படி விமர்சிக்க ஒரு "தில்" வேண்டும்.
ஊழலில் ஆரம்பம் ; நேரு காலம்...இவர் கூற்றில் தவறில்லை. குடும்ப ஆட்சிக்கு வித்திட்ட காலமே அதுதானே!!
பலர் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்...மூடி மறைப்பார்கள்.

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்