பழையன புகுதலும் - 2

வாஞ்சையுடன் விரல்பிடித்து நடக்கவோ
கடற்கரையோரம் கிளிஞ்சல் பொறுக்கவோ
பஞ்சுத்துகள் பறக்க தலையணைப்போரிடவோ
சண்டையிட்டு கிள்ளி அழவைக்கவோ
பொறாமைப்படவோ பெருமைப்படவோ
பால்யநதியின் அறியாமையினூடே
இருந்திருக்க வேண்டுமெனக்கு
மலர்மழை பனியன்ன தங்கையொருத்தி.

குறிப்பு: என் ராக்கி சகோதரி காயத்ரியின் பிறந்த நாளில் எழுதியது [2006]

Comments

என்னை மறந்துட்டீங்களே?

Popular posts from this blog

சக எழுத்தாளர்களுக்கு ஒரு திறந்த மடல்

Pen to Publish - 2019: சில‌ முக்கியச் செய்திகள்

புத்தம் புதுமைப் பெண்