படித்தது / பிடித்தது - 2

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ

கச்சணிந்த கொங்கை மாந்தர் கண்கள் வீசும் போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
நச்சை வாயிலே கொணர்ந்து நண்பரூட்டும் போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ
சொல்லடி சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
வல்லமை தாராயோபட்ட - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே

-மகாகவி சுப்ரமணிய பாரதி

பின்குறிப்புக‌ள்:
1. இன்று மகாகவியின் 127வது ஜனன தினம்.
2. வருங்கால சந்ததியினர் இதை எளிதில் ஞாபகம் வைத்துக்கொள்ள வழி ‍- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளுக்கு முந்தைய தினம்.
3. வந்தே மாதரம்!

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்