கடிதம்: வாசகர் கடிதம்

அன்புள்ள சரவணன் அவர்களுக்கு

தங்களுடைய பதிவை வேறு ஒரு பதிவின் மூலம் அறிந்து படிக்க ஆரம்பிதேன் ...தங்களுடைய எழுத்துக்கள் படிக்க சுவாரஸ்யமாக உள்ளது .
மேலும் அவற்றிற்கான பின்னூட்டம் மற்றும் அதற்கு நீங்கள் அளிக்கும் பதில்களும் ரசிக்க வைக்கிறது.

SARKAR பதில்கள் - 8 கேள்வி பதில் 1 திரு அளித்த பின்னூட்டம் மற்றும் அதற்கு நீங்கள் அளித்த பதில் போன்றவற்றை தவிர்கலாமே!!!

நான் உங்களுடைய தீவிரமான வாசகனாக, நேர்மையான விமர்சகனாக, எளிமையான சினேகிதனாக இருக்க விரும்புகிறேன். அவ்வளவே. மற்றபடி "தல! சூப்பர்" என்று 'கைப்புள்ள'யின் அடியாட்கள் போலெல்லாம் சொல்ல எனக்கு ஆர்வமில்லை.

அது உங்களுக்கும் பிடிக்காது எனறே நம்புகிறேன்.

தங்கள் நட்பை நாடும்

மணி

பி . கு : நீங்கள் கார்த்திகா ரஞ்சன் அவர்களுக்கு அளித்த பதில் படித்த பின்பு நான் தமிழில் எழுதும் முதல் மடல் இது ...

############

மணி,

நன்றி.

அது போன்ற விஷயங்களைத் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை என்பது என் தாழ்மையான கருத்து. மிக முக்கியக் காரணம் அந்த பின்னூட்டங்கள் இரண்டுமே வெறுப்பினாலோ விரோதத்தினாலோ உமிழப்பட்டதல்ல.

அது எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் இடையேயான ஒரு விதமான சீண்டல் விளையாட்டு. அது அவருக்கான பதில் மட்டுமல்ல; அக்கேள்வியை மனதில் வைத்துக் கொண்டு என்னை வாசிக்கும் அத்தனை பேருக்குமானது.

இது போன்ற விஷயங்கள் எழுதுபவன் பற்றிய புரிதலை இன்னமும் அதிகமாக படிப்பவருக்கு அளிப்பதாகத் தோன்றுகிறது. அவனைத் தொடர்ந்து படிக்கலாமா வேண்டாமா என்று தீர்மானிக்கிற தெளிவைத் தருகிறது.

உதாரணத்திற்கு நீங்கள் குறிப்பிடும் திரு - எங்கோ அமெரிக்காவில் வசிக்கும் அவரை என்னுடன் நட்பு கொள்ள வைத்ததற்கு நீங்கள் "தவிர்க்கலாமே" எனக்குறிப்பிடும் பின்னூட்டங்களும் ஒரு முக்கியக்காரணம்.

அவருடன் பேசிக்கொண்டிருக்கையில், "வாகனங்களில் பயணிக்கும் போது ஹெல்மெட் அணிந்து கொள்ளுங்கள் உங்களைப் போன்றவர்கள் உங்கள் குடும்பத்துக்கு மட்டுமல்ல இந்த சமுதாயத்துக்கும் முக்கிம்" என்றார்.

இந்த 24 வயதில் எனக்கு சாகித்ய அகாடமி அறிவிக்கப்பட்டிருந்தால் கூட அதை விட அதிக மகிழ்ச்சியும் திருப்தியும் தருபவை வாஞ்சை தடவிய அந்த‌ வார்த்தைகள். ஒரே வரியில் சொல்வதென்றால், I am honoured.

சம்பந்தப்பட்டவர்கள் தவிர மற்றவர்களுக்கு அது வேறு மாதிரி தெரிந்தால் அது என் எழுத்தின் பலவீனம் - சரி செய்யப்பட வேண்டியது. அப்புறம், ஜால்ரா அடிப்பது மட்டுமல்ல; காப்பி அடிப்பதும் எனக்குப் பிடிக்காது.

அது உங்களுக்கும் பிடிக்காது எனறே நம்புகிறேன்.

-CSK

பி . கு: உங்கள் பி . கு நிஜமென்றால் சந்தோஷம். கார்த்திகாவுக்கு தெரித்தால் என்னை விட அதிகம் சந்தோஷப்படுவார்.

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்