நாவும் காலும்

CSK Diet - http://www.writercsk.com/2020/10/csk-diet.html

டயட்: சில சிந்தனைகள் - http://www.writercsk.com/2021/04/csk.html

எடை பார்த்தல் - http://www.writercsk.com/2021/09/blog-post.html

ஓராண்டின் முடிவில் - http://www.writercsk.com/2021/09/blog-post_18.html 

1) நான் தினசரி நடைப்பயிற்சி தொடங்கி 13 மாதங்களாகிறது. CSK டயட்டில் இறங்கி கிட்டத்தட்ட‌ 10 மாதங்களாகிறது. என்னுடன் நடைப்பயிற்சியும் உணவுக் கட்டுப்பாட்டிலும் இறங்கிய நண்பர்களும், வேடிக்கை பார்க்கும் அன்பர்களும் அவ்வப்போது கேட்கும் கேள்வி எவ்வளவு எடை குறைந்தது என்பது. இடையே ஒரு முறை இது குறித்து எழுதினேன் என்றாலும் இப்போது மறுபடி புதுப்பிக்கிறேன்.

2) அதற்கு முன் சில விஷயங்களைச் சொல்கிறேன். எந்த ஒரு வேலையின் முடிவுகளையும் அளக்க இரண்டு விதமான அளவீடுகள் (Metrics) உண்டு. உள்ளீட்டு அளவீடுகள் (Input Metrics) மற்றும் வெளிப்பாட்டு அளவீடுகள் (Output Metrics). நாம் செய்யும் வேலைகளை அளப்பது உள்ளீட்டு அளவீடுகள்; அதன் முடிவுகளை அளப்பது வெளிப்பாட்டு அளவீடுகள். அதாவது நாம் எடுக்கும் முயற்சிகளை மட்டும் அளந்தால் போதாது, அதற்கான பலன்களையும் அளக்க வேண்டும். அதனால் வெளிப்பாட்டு அளவீடுகளும் உள்ளீட்டு அளவீடுகள் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை. உதாரணமாக இதில் எத்தனை நாள் தொடர்ச்சியாக 10,000 அடிகள் நடந்தேன் என்பதும், எத்தனை நாள் Cheat இல்லாமல் டயட்டில் இருக்க முடிந்தது என்பதும் உள்ளீட்டு அளவீடுகள். எத்தனை கிலோ எடை குறைந்தது, எத்தனை செண்டிமீட்டர் இடுப்புச் சுற்றளவு குறைந்தது என்பவை வெளிப்பாட்டு அளவீடுகள். (சிலர் ரத்தத்தில் சர்க்கரை அளவு சரியாக இருக்கிறதா, கொலஸ்ட்ரால் சரியாக இருக்கிறதா, ரத்தம் அழுத்தம் சரியாக இருக்கிறதா போன்றவற்றையும் அளக்க விரும்பலாம்.)

3) இவை உள்ளீட்டு அளவீடுகள்: இன்றைய தேதிக்கு, நான் தொடர்ச்சியாக இடைவெளியே இன்றி 405 நாட்கள் தலா 10,000 அடிகள் நடந்திருக்கிறேன். கடந்த 293 நாட்களில் 42 நாட்கள் உணவுக் கட்டுப்பாட்டைக் கைவிட்டிருக்கிறேன், மீதி 251 நாள் உணவுக் கட்டுப்பாட்டில் இருந்திருக்கிறேன்.

4) வெளிப்பாட்டு அளவீடுகள்: சுமார் 15 கிலோ எடை குறைந்திருக்கிறது; சுமார் 17 செண்டிமீட்டர் இடுப்பளவு குறைந்திருக்கிறது. ரத்தச் சோதனைகள் இப்போதைக்கு நான் தீவிரமாகக் கணக்கிடும் அவசியம் ஏற்படவில்லை. (ஆனால் சமீப‌ச் சோதனைகளின்படி யாவும் கட்டுக்குள் இருக்கின்றன.) நான் கவனிக்கும் இன்னுமொரு விஷயம் உடற்சோர்வு, மூட்டு வலி, வயிற்றுப் பிரச்சனைகள் முதலான பக்க விளைவுகளேதும் இத்தொடர் நடை மற்றும் உணவுக் கட்டுப்பாட்டின் மூலம் வருகிறதா என்பது (தவறான உத்திகளால் முதலுக்கே மோசமாகி விடக்கூடாது என்பதற்காக‌). அப்படி ஏதும் இல்லை.

5) இப்போது நான் அடுத்த இலக்கை நோக்கி நகர்ந்திருக்கிறேன். பார்ப்போம்.

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்