நெருப்பின் குரல்

அருண்ராஜா காமராஜ் - பெயர் சொன்னால் தெரியுமளவு இன்னும் பிரபலமாகவில்லை. கபாலியில் 'நெருப்புடா' பாடலைப் பாடியவர் என்றால் எல்லோருக்கும் தெரியும். சந்தோஷ் நாராயணன் இசையில் அருண்ராஜா காமராஜ் எழுதிப் பாடிய பாடல்கள் எல்லாமே ஒரே மாதிரியானவை எனக் குற்றம் சொல்ல இடமுண்டு என்றாலும் அவை தனித்துவமானவை; நல்ல ரசிப்புக்குரியவை; எனக்குப் பிடித்தமானவை. சொல்லப் போனால் அவர் குரலே ஒரு மெய்நிகர் நெருப்பு தான். (இதே போல் சந்தோஷ் நாராயணன் அறிமுகம் செய்த பாடகர்களுள் இன்னொரு முக்கியமானவர் ப்ரதீப் குமார்.)


இப்பாடல்களை பொதுவாய் ஹீரோயிசப் பாடல்கள் என வகைப்படுத்தலாம். ஆனால் பாடல் இடம்பெறும் சூழல் தாண்டி அதற்குப் பயன்படுத்திய இசை, வரி மற்றும் குரலையொட்டி தனி genre-ஆகவே பிரிக்கலாம். ஒரு மாதிரி raw-ஆன பாடல்கள். இதற்கு முன்னோடி என்றால் சிவாஜி படத்தில் நரேஷ் ஐயர், ப்ளாசே உள்ளிட்டோர் பாடிய வாடா வாடா பாடலைச் சொல்லலாம். அதற்கும் முன்பு இதைத் தொடங்கி வைத்தது கமல்ஹாசனும் இளையராஜாவும். தேவர் மகனின் சாந்துப் பொட்டு பாடலின் மூலம். ஆனால் சந்தோஷ் நாராயணனும் அருண்ராஜா காமராஜாவும் அதற்கு வேறொரு பரிணாமம் தந்திருக்கிறார்கள். இந்த‌ ஜோடியியில் உருவான‌ பாடல்களை இங்கே பட்டியலிடுகிறேன்.

1) டிங் டாங் (ஜிகர்தண்டா)



2) பங்காளி (காதலும் கடந்து போகும்)



3) நெருப்புடா (கபாலி)



4) கொடி பறக்குதா (கொடி)



5) வர்லாம் வர்லாம் வா (பைரவா)



*

Comments

நம் அனைவர்மீதும் அந்த ஓர் இறையின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.
நண்பரே ஜியோனிசம் மற்றும் பார்ப்பனீயத்தின் எழுச்சி உலகெங்கும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது பெரும் அச்சுறுத்தலாய் வளர்ந்து நிற்கிறது.டிரம்பின் வெற்றி அதற்கொரு சான்று.இங்கே மோதியின் வெற்றியும் அவ்வாறே நிகழ்ந்தது.தொடர்ந்து இஸ்லாமியர்களை அடக்கி ஒடுக்குவதன் மூலமே தாங்கள் ஆட்சிக்கு வரமுடியும் என நம்புகிறார்கள்.அமைதி ஒன்றையே விரும்பி வாழும் இஸ்லாமியர்கள் மீது தொடர்ந்து வன்முறையை திணிப்பதன் மூலம் அவர்களை அடையாளம் அற்றவர்களாய் மாற்றிவிடவே இவர்கள் முயலுகிறார்கள்.இதற்கு ஒரேவழி இஸ்லாமியர்களின் ஒற்றுமை,மதசார்பற்ற சக்திகள் ஒன்றுகூடி போராடுவது மட்டுமல்ல.அன்பு ஒன்றையே போதிக்கும் இஸ்லாத்தில் தொடர்ந்து பலர் குறிப்பாக உங்களை போன்று பார்ப்பனீயத்தின் விஷ வேர்களை அறுக்க முயல்வோர் சேர்வது மட்டும்தான்.அப்போதுதான் நமது கை வலுக்கும்!பார்ப்பனீய யூதவெறி கும்பலின் கொட்டத்தை அடக்க அப்போதுதான் முடியும்.இன்ஷா அல்லாஹ் அது நடக்கும்!உங்களை போன்றோர் அதற்கு உதவ வேண்டும்!

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்