வெள்ளிச் சகசிரம்

இன்று சௌம்யா (@arattaigirl) ௨௰௫௲ (பண்டைத் தமிழில் 25,000 என்பதை இப்படி எழுத வேண்டும்) ஃபாலோயர்களை அடைந்திருக்கிறார். அவர் பற்றி ட்விட்டரில் புழங்கும் 25 பேரின் கருத்துக்களைப் பெற்று இங்கே தொகுத்திருக்கிறேன்:

*

வார்த்தைகளை கோர்க்கும் பொறியியல், அவனதிகார ஆய்வியல், அழகு மொழியியல்,
கனவுகளின் அழகியல், சரிங்க எனும் வேதியியல், No அரசியல். #அரட்டைகேர்ள்
ஆல்தோட்டபூபதி (@thoatta)

* 

(டிஸைன்: மீனம்மா கயல்)
எல்லாருக்கும் பிடித்தமான பெண் என்பதாலேயே எனக்கு சுத்தமா பிடிக்காது அவங்கள,
என்னையும் வசீகரித்து நம்ம சௌம்யாப்பா என்றே சொல்ல வைத்து விட்டார்.
மீனம்மா (@meenammakayal)

*
Heroine of Tamil Twitter!
எண்ணங்களில் மிளிரும் அழகும், வார்த்தைகளில் ஒளிரும் வசீகரமும் கொண்ட ட்விட்டரின் முடிசூடா ராணி.
Kaarthik Arul (@kaarthikarul)

*
இந்த வயதில் இத்தனை முதிர்ச்சியான எண்ணங்கள் சாத்தியமா எனும்
ஆச்சர்யம் எப்போதும் ஏற்படுத்தும் அரட்டையின் பல ட்வீட்ஸ்!
மிருதுளா (@mrithulaM)

*

அச்சு உலகம் தவற விட்ட அச்சு அசல் கவிதாயினி! 
வார்த்தைகளை சொல் நயத்துடன், கவி லயத்துடன் கோர்க்கும் பூக்காரி நீ!
சி.பி.செந்தில்குமார் (@senthilcp)

*
காலம் சற்றே பின்னோக்கி இருந்திருந்தால்
இந்நேரம் ஓலைச் சுவடிகள் சுமந்திருக்கும் அரட்டையின்  ஒவ்வொரு எழுத்துக்களையும்.
சுடர்கொடி (@sudarkodii)

*

அசலா போலியா என்று எழுத்தைப் பார்க்காமல் எழுதியவரை சோதிப்பதில்தான் தோற்கிறோம்.
இவரின் எழுத்துக்களோ எப்போதும் அச(த்த)ல்.
@$#0K (@ashoker_UHKH)

*
அறுசுவை உணவுகள் ஒரு சேரக் கிடைக்கும் அரட்டையின் கீச்சுகள் படித்திட்டால்!
கலைலலிதா (@KalaiLalitha)

*

தமிழ் ட்விட்டரின் பாட்டுடைத்தலைவி!
காக்கைச் சித்தர் (@vandavalam)

*
விட்டில் பூச்சியாய் மாறாமல் பட்டாம்பூச்சியாய் திரியும் 
சூத்திரம் கற்ற எழுதுகோல் தேசத்தின் புன்னகை இளவரசி.
அன்புடன் அனு (@anu_twits)

*

தலைக்கு குளித்து சிறுமுடிச்சாய் ஜடை போட்டுக்கொண்டு,
நெற்றி விபூதியுடன் பஸ்சில் போகும் ஜன்னலோர இளம்பெண் போல் ட்விட்டரில் அரட்டைகேர்ள்.
நாதஸ் (@Rasanai)


வாழ்வை, காதலை, அன்பை அழகியலோடு சொல்லும் செளம்யாவின் ட்விட்கள்,
பட்டாம்பூச்சியை தடவிய விரல்களில் வண்ணத்தைப் போல புன்னகையைப் பூசிச் செல்கிறது.
Pradeesh (@gpradeesh)

*

ட்விட்டர் வருமுன் அரட்டை = வெட்டிபேச்சு என நினைத்திருந்தேன்.
வந்த பின் அதன் மெய்ப்பொருள் மறந்தேன்: அரட்டை = ரசனையான எழுத்து.
BabyPriya (@urs_priya)

*

ராஜ பார்வை கமல் மாதிரி பெயருக்கு முரணான சகலகலாவல்லி.
சொற்களை உடைத்தும், பொருத்தியும் சிற்பமாக்குவதில் பல்லவர் காலத்தின் நீட்சி இவர்.
கானா பிரபா (@kanapraba)

*

எளிமை அழகோடு தோன்றும் நீர்வண்ண ஓவியத்தின் ஒளி ஊடுருவும் வண்ண அடுக்குகளில்
மறைந்து சிரிக்கும் அழகெனச் சிந்தும் அர்த்தங்களாலான கீச்சுக்கள்.
தமிழ்ப்பறவை (@Tparavai) 

(ஓவியம்: Ilya Ibryaev | தேர்வு: தமிழ்ப்பறவை)

*

சௌம்யா எனது பார்வையில் ஒரு தெய்வக்குழந்தை.
யாரும் யோசிக்காத ஒரு கோணத்தில் யோசிப்பதாலோ என்னவோ ஒரு சிறுமியாய் எல்லோர் மனதில் இடம்பிடித்தவர்.
நந்து Talks (@itzNandhu)

*

குழந்தைதனத்திற்கும் லூசுத்தனத்திற்கும் வித்தியாசம் தெரிந்த பெண் ட்வீப்கள் மிக சிலர்.
அந்த அழகியல் மிளிரும் ட்வீட்களில் அரட்டைக்கு முதலிடம்.
பிரம்மன் (@altappu)

*

அரட்டை அஞ்சலி மாதிரி இருப்பாங்களா என்பதிலிருந்து அஞ்சலி அரட்டை போல
சுவாரஸ்யமானவங்களா இருப்பாங்களான்னு யோசிக்க வைத்ததே அரட்டையின் வெற்றி.
கிருஷ்குமார் (@iKrishS)

*

ஒன்லைனரின் பிதாமகள் சௌம்யா!
அண்ணாமலை (@indirajithguru)

*

ஆர்பாட்டமில்லாமல் அசத்தும் அரட்டை(கேர்ளோ பாயோ ஐ டோன்ட் கேர்!)யின்
எழுத்துக்கு ட்விட்டரில் சிலையே வைக்கலாம்!
உத்தம விஜய் (@tekvijay)

*

25,000 ஃபாலோயர்கள் தொட்ட பின்னும் (போலி) பெண்ணியவாதி ஆகாத 'நம்ம வீட்டு பொண்ணு'.
நான் உரிமையுடன் பழகும் பெண் கீச்சர். டிவிட்டர் தேவதை!
திரு (@thirumarant)

*

நாளெல்லாம் ஆழ்த்திச் செல்கிறது மென்கற்பனை, நாளமெல்லாம் உற்சாகத்திலும்.
ஆனால் நாள்தாண்டி நினைவிலேதுமில்லை.
மகி (@veyilooraan)

*

தமிழ் ட்விட்டரின் கனவுக்கன்னி. தன் எழுத்தின் வழியாக மட்டுமே அதைச் சாதித்த கெட்டிக்காரி.
ட்விட்டர் கவர்ச்சி இலக்கணமறிந்த‌ வெற்றிக்காரி. எழுத்துக்கு அடிமைகளை உருவாக்கும் கொடுமைக்காரி.
Naveen Kumar (@navi_n)

*

ட்விட்டர் பெருங்கடல் நீந்துவார் - நீந்தார்
அரட்டைகேர்ள் பின்தொடரா தார்.
KRS (@kryes)
 
*

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்பர்.
எண்ணும் எழுத்தே கண்ணெனத் தகவைக்கும் எழுத்தழகி அரட்டை!
நாயோன் (@writernaayon)

*

தோட்டா முதல் நாயோன் வரை - கேட்டவுடன் கருத்துரைத்த அனைவருக்கும் நன்றி. சௌம்யாவுக்கு வாழ்த்துக்கள்!

Comments

chinnapiyan said…
What a fitting Tribute to a Twitter Friend Sowmiya Wonderful & she deserve it . Congrats & Wishes :)
Nat Sriram said…
செம கம்பலைஷேன். ஒரே விஷயத்தை 25 பேர் எப்படி பார்க்கிறாங்க என்பது சுவாரசியம்.அவர்கள் தெரிந்தவர்கள் என்பது இன்னும் சுவாரசியம்.

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்