நான் ஏன் நரேந்திர மோடியை எதிர்க்கிறேன்?

2014 நாடாளுமன்ற தேர்தல்களில் ஒரே ஒருவரை மட்டுமே நம்மால் எதிர்க்க முடியும் எனில் அது நரேந்திர மோடியாகவே இருக்க வேண்டும் என்பது என் நிலைப்பாடு. ஏன் அவ்வளவு stubborn-ஆகச் சொல்கிறேன் என்று அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து விரிவாக அலசி ஆராய்ந்து ஒரு கட்டுரை எழுதி இருக்கிறேன். அது இரு பகுதிகளாக நேற்றும் இன்றும் தமிழ் பேப்பர் தளத்தின் வட்ட மேஜை மாநாடு பகுதியில் வெளியாகி இருக்கிறது. என் முக்கியமான கட்டுரைகளில் ஒன்று இது என நினைக்கிறேன்.

நான் ஏன் நரேந்திர மோடியை எதிர்க்கிறேன்? – 1 : http://www.tamilpaper.net/?p=8702
நான் ஏன் நரேந்திர மோடியை எதிர்க்கிறேன்? – 2 : http://www.tamilpaper.net/?p=8705

பொதுவாக நான் எழுதும் கட்டுரைகளை "must read" என்று நானே சொல்லிக் கொள்வதில்லை. ஆனால் இந்த வட்ட மேஜை மாநாடு கட்டுரைகள் எல்லாம் அப்படித் தான்.

Comments

முருகன் காங்கிரஸ் said…
அதான?எங்கள் தலைவர் ராஜீவை கொன்றதற்கு பழிக்கு பழியாக ஒன்றரை லட்சம் தமிழனை வேரறுத்தோம்.அதை இன்று யாரும் நினைவில் வைத்துக்கொள்ளவில்லை.நல்ல வேலை
Vote for rahul said…
எங்கள் இளம்புயல் ராகுல் தலைமையில் ஒரு நல்லாட்சி அமையும்.அதில் எல்லா இசுலாமியர்களுக்கும் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்குவோம் என்பதை உறுதியாக சொல்லி கொள்கிறேன்
பார்வையாளன் said…
சரி இவரை நிராகரிக்கிறீர்கள்...வேறு எந்த கட்சிதான் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதையும் சொன்னால் நன்று.
இலங்கை இனப்படுகொலை கறையோடு இருக்கும் காங்கிரசா?
முசாபர்நகர் கலவரத்தை வேடிக்கை பார்த்த முலாயமா?
ஒரு லட்சம் கோடி ஊழலில் ஈடுபட்ட திமுகவா
நாலாயிரம் கோடி ஊழல் செய்த அம்மையாரா?
யாருப்பா ஆட்சிக்கு வரணும் (மட்டறுககாமல் இதற்கு பதில் அளியுங்கள் ப்ளீஸ் )
@பார்வையாளன்

அடுத்த கட்டுரை அதைப் பற்றியது தான் காத்திருக்கவும்.
Anonymous said…
என்னது அடுத்த கட்டுரையா?ஆள விடுறா சாமீ..."நான் ஏன் எழுத்தாளன் இல்லை" என்ற உண்மை கண்பெஷனை எப்போ எழுத போற?
பார்வையாளன் said…
அடுத்த கட்டுரை அதைப் பற்றியது தான் காத்திருக்கவும்.////....எப்படியோ அதுக்குள்ள தேர்தல் முடிஞ்சிடும்.
ராகேஷ் said…
நீயெல்லாம் சுஜாதாவின் சீடன் என்று சொல்லிகொல்வதை விட வேறு எந்த வகையிலும் அந்த அற்புத எழுத்தாளனை அவமதித்துவிட முடியாது .அவர் என்றுமே அரசியல் அக்கப்போர்களை எழுதியதில்லை.ஆனால் நீயோ?மற்றவர் அங்கீகரிக்கும் முன்பே உனக்கு நீயே ரைட்டர் பட்டம் கொடுத்துக்கொண்டு ஊருக்கு உபதேசம் செய்கிறாய்.சரி என்னவேண்டும்னாலும் செஞ்சிட்டு போ ராவன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் ஒழச்சாத்தான் சோறு என்பதால் ஐ டோன்ட் கேர் அபவுட் தீஸ் நான்சென்ஸ்..நான் வேண்டுகோளாக விடுப்பது ஒன்றைத்தான்.தயவு செய்து அந்த அறுபுதமான மனிதர் சுஜாதாவின் பேரை நீ யூஸ் பண்ணாத.மற்றபடி ஏன் நான் வாயால் சாப்பிடுவதில்லை ஏன் நான் உடைகள் உடுத்துவதில்லை என்று எதை வேண்டுமானாலும் எழுதிக்கொள்
ராமசாமி said…
108 காரணங்கள்: நரேந்த்ர மோதியை நான் ஏன் வெறுக்கிறேன்
http://othisaivu.wordpress.com/2013/09/13/post-245/
@ராகேஷ்

அடடா! சுஜாதா, ரைட்டர் போன்ற சொற்களுக்கு எல்லாம் நீங்கள் தான் காப்பிரைட் செய்து வைத்திருக்கிறீர்கள் போலிருக்கிறதே! அடுத்த முறை அவற்றை நான் பயன்படுத்தினால் நீங்கள் அவசியம் தவறாமல் வந்து இதே போல் திட்ட வேண்டும்.
ராகேஷ் said…
ரைட்டர் என்பது மக்களாக வழங்கும் ஒரு பட்டம் போலத்தான்.வூட்லியே குந்திகினு நாலு பேரு படிக்க எழுதிகிட்டு இருந்தா ரைட்டரில்லை.நீ செய்வது அதைத்தான்.தேர்தலில் நிக்கமலேயே நான் எம் எல் ஏ மந்திரி என்று சொல்வது போலத்தன இதுவும்.
தவிர சுஜாதாவுக்கு காப்பிரைட் இல்லை.அவரது எழுத்துக்கு உண்டு.ஆனால் அவர் பேரை பயன்படுத்தும் தகுதி உனக்கில்லை என்றுதான் சொன்னேன்.நல்லா படிச்சி பாரு.
@ராகேஷ்

ஓ! புரிஞ்சிடுத்து. நீங்க ஒரு ஜோதிடர். கரெக்டா? அப்படியே நான் இந்த பேர் வெச்சுக்கலாமா, இந்த ஊர்ல இருக்கலாமா, என்ன கலர் ட்ரெஸ் போடனும் எல்லாம் பார்த்து சொன்னீங்கனா தன்யனாவேன்.
Anonymous said…
குஜராத் (2002) கலவரங்களை விட மோசமான, மும்பை கலவரம் நடந்த போது, மகாராஷ்டிரா முதல்வர் யார் என யாருக்காவது நினைவிருக்கிறதா?
2. உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மலியானா, மீரட், பாகல்பூர், ஜாம்ஷெட்பூர் ஆகிய இடங்களில் கலவரம் நடந்தபோது யார் முதல்வராக இருந்தார் என நினைவிருக்கிறதா?
3. குஜராத்தில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு முன், பெரிய கலவரங்கள் நடந்த போது, முதல்வராக இருந்தவர்கள் யார் யார் என்பது இப்போது சொல்லப்படுகிறதா?
4. டெல்லியில் 1984ல் சீக்கியர்களுக்கு எதிரான கலவரம், படுகொலைகளின் போது டில்லியின் பாதுகாப்புக்கு பொறுப்பாக இருந்தவர் யார் என்பது தெரியுமா?
5. நரேந்திர மோடியை பேய், பிசாசைப் போல் வர்ணிப்பவர்கள் ஏன் மேற்சொன்ன காங்கிரஸ் ஆட்சி கால நிகழ்வுகளை பேசுவதில்லை? நரேந்திர மோடியின் சாதனைகளை பற்றி ஏன் பேசுவதில்லை?
ஆசியாவின் மிகப் பெரிய சூரிய மின் திட்டம் குஜராத்தில் இருக்கிறது. மாநிலத்தில் எல்லா கிராமங்களிலும் தடையின்றி 24 மணி நேரம் மின்சாரம் கிடைக்கிறது.
குஜராத் சாலைகள் சர்வதேச தரம் வாய்ந்தவை என உலக வங்கி சொல்கிறது. உலகில் வெகு வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில், ஆமதாபாத் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது.
குஜராத்தில் தான் வேலையில்லா திண்டாட்டம் குறைவு என்று மத்திய அரசின் தொழில் துறை சொல்கிறது.
கடந்த, 10 ஆண்டுகளில் எந்த சிறு கலவரமும் நிகழவில்லை. இந்தியாவின் தன்னிகரற்ற தலைவர் நரேந்திர மோடி என்று கருத்துக்கணிப்புகள் சொல்கின்றன.
இந்த நேரத்தில் காங்கிரஸ் ஆட்சி காலக்கட்டத்தில் குஜராத்திலும் பிற மாநிலங்களிலும் நடந்த மதக் கலவரங்கள் பற்றிய புள்ளி விவரங்களை கொஞ்சம் புரட்டிப் பாருங்கள்.
கடந்த 1947ம் ஆண்டு வங்கக் கலவரத்தில் 5,000 பேர் கொல்லப்பட்டனர். 1964ல் ரூர்கேலா கலவரத்தில், 2,000 பேர், 1987ல் ராஞ்சியில், 200 பேர் . 1969ல் ஆமதாபாத்தில் 512 பேர் பலியாகினர்.
1970, 1985ல் பிவந்தி கலவரத்தில், 226 பேர், 1980ல் மொராபாத் கலவரத்தில், 2,000 பேர், 1983ல் அசாம் கலவரத்தில் 5,000 பேர், 1984ல் டில்லி கலவரத்தில், 2,738 பேர் இறந்தனர்.
கடந்த 1985ல் குஜராத் கலவரத்தில் 300 பேர், 1986ல் ஆமதாபாத் கலவரத்தில் 59 பேர், 1982ல் மீரட் கலவரத்தில் 81 பேர், 1992ல் சூரத் கலவரத்தில் 175 பேர் இறந்தனர்.
கம்யூனிஸ்ட் ஆட்சியில் 1979ல் ஜாம்ஷெட்பூரில் 125 பேர் இறந்தனர்.
காங்கிரஸ் கட்சி தன் ஆட்சியில் நடந்த கலவரங்களை மறந்துவிட்டு தங்கள் ஊழல்களை மூடி மறைப்பதற்காக குஜராத் சம்பவம் ஒன்றை மட்டுமே மீண்டும் மீண்டும் கூறி வருகிறது.
காரணம் வேறு எதையும் குறிப்பிட்டு அவர்களால் கூற முடியவில்லை.
குஜராத்தில் மோடியின் சாதனையை ஒதுக்கித் தள்ளும் காங்கிரஸ் கட்சியும், அதன் தோழமை கட்சிகளும் பொய்களை மட்டுமே தினமும் பரப்பி வருகின்றன.
இவர்களை மீறி மோடி வெற்றி பெறுவது அரசியல்வாதிகளை மீறி மக்கள்வெற்றி பெறுவதாகும்
ராக்கேஷ் said…
எஸ்ரா ஜெமோ சாரு போன்றோர் கூட தங்கள் தளத்தில் ரைட்டர் என்ற அடைமொழியை பயன்படுத்துவதில்லை.ஆனால் உன்னை போன்ற சில அரைவேக்காடுகள்தான் தங்களுக்கு தாங்களே பட்டம் கொடுத்துக்கொண்டு திரிகின்றன.உங்களை எல்லாம் பாத்தா சிப்பு சிப்பா வருது..இதுக்கு மேல சொல்ல ஒண்ணுமில்ல.நல்லா சிரிக்க வச்ச!
@ராகேஷ்

எனக்கும் சந்தோஷம். அடிக்கடி வந்து போங்க. எப்படியும் நான் சொல்லலைனாலும் தேடி வந்து படிச்சு ரத்த அழுத்தம் உயர்த்திக்கிட்டு குதிப்பீங்க. வாழ்த்துக்கள்.

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்