G2K2K - இளைஞர் முழக்கம்

தமிழகத்துக்கான லோக்சபா தேர்தல்கள் வரும் 24 ஏப்ரல் 2014 அன்று நடக்கும் என்று தேர்தல் கமிஷனால் அறிவிக்கப்பட்டிருக்கும் தற்போதைய சூழலில் குஜராத் 2002 கலவரம் நூலின் சமகால முக்கியத்துவம் கருதி அதை மக்களிடையே கொண்டு சேர்க்கும் முகமாக இதுகாறும் அறிமுகமோ அவ்வளவாய் பழக்கமோ இல்லாத நண்பர்கள் சிலர் அதற்காக உதவி வருகிறார்கள். என் நூல் என்பது தாண்டி அவர்கள் அனைவருக்கும் பிரதான நோக்கம் ஒன்று தான்: கணிசமான மக்களிடையே மதச்சார்பின்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் தீவிரமான இந்துத்துவ சார்பு கொண்டவரான நரேந்திர மோடியைப் பிரதமர் ஆக விடாமல் தடுப்பது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல்களைப் பொறுத்தவரை இயல்பாகவே பிஜேபி பூஜ்யம் தான் என்றாலும் இம்முறை உடன் முழுநேரக் கோமாளிகளையும் மனசாட்சியற்ற சந்தர்ப்பவாதிகளையும் சேர்த்துக் கொண்டு களம் இறங்குவதால் ஏதாவது மூலையில் குழப்பம் நேர்ந்து பிஜேபிக்கு சாதகம் ஆகி விடக்கூடாது என்பது தான். இன்னொரு விஷயம் தமிழகத்தில் திமுக, அதிமுக யாருக்கு ஓட்டுப் போட்டாலும் தேர்தல் முடிவுகளுக்குப் பின் அவர்கள் பிஜேபி பக்கம் போய்விட வாய்ப்புண்டு. இதை எல்லாம் மனதில் கொண்டு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்பதே நோக்கம். (அதே நேரம் கையாலாகாத காங்கிரஸையும் ஆதரிக்க முடியாது என்பது வேறு விஷயம்)

முதலில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் என்ற அமைப்பு நடத்தி வரும் இளைஞர் முழக்கம் இதழின் ஆசிரியரான இல.சண்முகசுந்தரம் அவர்களின் முயற்சியில் அதன் மார்ச் 2014 இதழில் குஜராத் 2002 கலவரம் நூல் குறித்த எனது விரிவான 5 பக்க நேர்காணல் வெளியாகி இருக்கிறது. புத்தகம் குறித்து ஒரு உணர்ச்சிகரமான அறிமுகக் கட்டுரையும் வெளியாகி இருக்கிறது. அத்துடன் புத்தகத்திலிருந்து சில முக்கியமான வரிகளை இதழ் முழுக்க ஆங்காங்கே கட்டம் கட்டித் தந்திருக்கின்றனர். என் நூல் மேலும் பலரை சென்றடைய இது வழிவகுக்கும் என நம்புகிறேன். இது ஒரு மாத இதழ். இதை ஆன்லைனில் வாசிக்கலாம்: http://dyfidonors.org/

 
இன்னொருவர் குஜராத் 2002 கலவரம் நூல் மேலும் பலரிடம் பரவிட மற்றொரு மஹாஉதவி செய்திருக்கிறார். அது பற்றிய பதிவு நாளை. Stay tuned.

Comments

Anonymous said…
சீக்கிய கலவரம் புத்தகம் ஈழ இன அழிப்பு பற்றியெல்லாம் புக்கு வருமா நட்டுகுத்து வாதியே!

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்