({})
யோனி என்பது black hole. பிரபஞ்சத்தின் அத்தனை பிரம்மாண்டங்களையும் உள்ளே இழுத்து விழுங்கிக் கொண்டிருந்தாலும் எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி மந்தகாசமாய் மௌனித்திருக்கும் சங்கதி. என் முதல் கவிதைத் தொகுப்பான பரத்தை கூற்று நூலுக்கு நான் முதலில் யோனி என்றே பெயர் சூட்ட எத்தனித்தேன். பிறகு கவிஞர் மகுடேசுவரன் மற்றும் பதிப்பாளர் பொன்.வாசுதேவன் ஆகியோரின் எச்சரிக்கையின் பேரில் அதைத் தவிர்த்தேன். அத்தொகுதிக்கு அப்பெயர் அத்தனை பொருத்தம் என்பதைத் தாண்டி அந்த விஷயத்தின் மீது அவ்வளவு ஈர்ப்பு எனக்குண்டு. அது சரி, ஆண்களில் யோனியை விரும்பாதவர் எவரேனும் உண்டா என்ன!
இரு வாரங்கள் முன் Alliance Française de Bangaloreல் நான் பார்த்த நாடகம் The Vagina Monologues. இது 1996ல் ஈவ் என்ஸ்லர் என்ற அமெரிக்கப் பெண்ணியவாதியால் எழுதப்பட்டது. இது ஒரே கதை உள்ள ஒரு நாடகம் அல்ல. பல்வேறு சிறு monologueகளின் தொகுப்பு. Monologue என்பது ஒரு பாத்திரத்தை அல்லது ஒரு விஷயத்தை ஒரே ஆள் பேசி நடித்துக் காட்டுவார். சமூகத்தின் பல்வேறு பின்னணிகளிலும், வெவ்வேறு வயதிலும் இருக்கும் பெண்கள் தம் யோனி குறித்த அனுபவங்களை, எண்ணங்களைப் பேசுவதே இந்த நாடகம். யோனி தொடர்பான கலவி செய்தல், வயதுக்கு வருதல், மாதவிலக்கு நாட்கள், பாலியல் வல்லுறவு, பிறப்புறுப்பை சிதைத்தல், சுயஇன்பம், உச்சம் அடைதல், பிரசவம் எல்லாம் இதில் பேசப்படுகின்றன. பெண்களுக்கான பெண் பாலியல் தொழிலாளிகள் பற்றிக் கூது இது பேசுகிறது. The Woman Who Loved to Make Vaginas Happy, I Was Twelve, My Mother Slapped Me போன்றவை பிரபலமான monologueகள்.
ஆண்டுதோறும் ஃபிப்ரவரி 14ம் தேதி என்பது காதலர் தினம் என்ற பெயரில் பெண்களை அடிமைப்படுத்துகிறது என்று சொல்லி அதை வெற்றி தினமாக (V-Day) ஈவ் என்ஸ்லரின் வழிகாட்டுதலில் கொண்டாடுகிறார்கள். இந்த நாளில் The Vagina Monologues நாடகம் நிகழ்த்தப்படும். ஆண்டுதோறும் அப்போது பெண்களுக்கு உலக அளவில் இருக்கும் முக்கியமான ஒரு பிரச்சனை குறித்த புதிய monologue ஒன்று நாடகத்துடன் இணைக்கப்படும். இப்படி ஆண்டுதோறும் இந்த நாடகம் வளர்ந்து வருகிறது. உலகம் முழுக்க தனித்தனியான குழுக்கள் இந்த நாடகத்தின் சில பகுதிகளை மட்டும் எடுத்துக் கொண்டு அந்தந்தப் பிரதேசத்திற்கேற்ப லேசாக இடைச்செருகல்கள் சேர்த்து நிகழ்த்துகிறார்கள். அப்படி Barking Dogs என்ற பெங்களூரு பெண்கள் குழு நிகழ்த்திய நாடகம் தான் நான் பார்த்தது.
முதலில் ஒவ்வொரு பெண்ணாய் வந்து யோனிக்கு வழங்கப்படும் வெவ்வேறு பெயர்களைச் சொல்கிறார். அடுத்து எத்தனை பேர் தமது யோனியை கண்ணாடி வைத்து தெளிவாய்ப் பார்த்திருக்கிறார்கள் என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. அடுத்து யோனியின் மயிரே அதை அழகூட்டுகிறது என அதைப் பற்றி அந்தப் பெண்கள் சிலாகிக்கிறார்கள். அடுத்து யோனி பேசினால் என்ன சொல்லும் என்று ஒவ்வொருவரும் சொல்கிறார்கள். 65 வயது வரை தன் யோனியைப் பார்க்காதிருந்த கிழவிக்கு இப்போது பார்க்க வாய்க்கிறது, அவளது உணர்வுகள் பற்றிய கதை நிகழ்த்திப்படுகிறது. அடுத்து க்ளைடோரிஸ் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கும் vagina workshopல் கலந்து கொண்ட ஒரு பெண்ணின் அனுபவம்உ பற்றிய கதை. அவளால் இறுதி வரை தன் க்ளைடோரிஸ் என்கே என்று கண்டுபிடிக்க முடிவதே இல்லை.
இடையில் யோனியின் தோற்றம், மணம், சுவை எல்லாவற்றையும் சிலாகித்து யோனியை ஒரு தாமரை மலருக்கு ஒப்பிடும் கவித்துவமான பகுதி. அடுத்து தன் யோனியின் தோற்றம் குறித்த அவநம்பிக்கை கொண்டிருந்த ஒருத்தியின் யோனியைக் கண்டு ஒருவன் எப்படிக் கொண்டாடுகிறான் என்ற கதை (Because He Liked to Look At It). அடுத்து பெண்ணுறுப்பைச் சிதைத்தலைப் பற்றிய வலி மிகுந்த ஒரு பதிவு. பின்னர் Tampon போன்ற வஸ்துகள் வைத்துத் திணிக்கப்படுவதால் கடுங்கோபத்தில் இருக்கும் யோனியைப் பற்றிய பதிவு (My Angry Vagina). அடுத்து உக்கிரமான போரின் ஒரு பகுதியாக பாலியல் வல்லுறவுக்கு உள்ளான ஓர் இளம் போஸ்னிய பெண் ஒருத்தியின் யோனி பற்றிய பகுதி (My Vagina Was My Village). அடுத்து வீட்டில் இருப்பவர்களாலேயே பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் ஒரு பெண் பற்றிய பதிவு.
அடுத்து யோனியைக் குறிக்க cunt என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதைப் பற்றிய ஒரு நிகழ்வு (Reclaiming Cunt). வயதுக்கு வந்த ஒரு 16 வயதுப் பெண் பக்கத்திலிருக்கும் ஒரு அழகான பெண்மணியால் கலவிக்கு உள்ளாக்கப்படும் கதை அடுத்து (The Little Coochie Snorcher That Could). இது முதலில் 13 வயது பெண்ணாக சித்தரிக்கபட்டு பிறகு பிரச்சனை எழுந்ததால் 16 வயதாக மாற்றப்பட்டதாகத் தெரிகிறது. அடுத்து ஒரு பாலியல் தொழிலாளி எழுப்பும் விதவிதமான கலவி ஒலிகள் பற்றிய பதிவு. இதன் முடிவில் ஒவ்வொரு விதமான மனிதரும் எப்படி கலவி ஒலி எழுப்புவார் என நிகழ்த்திக் காண்பித்தார். மிக அபாரமான கற்பனை. அடுத்து பிரசவ அறையில் இருந்த அனுபவம் குறித்து யோனியை செண்டிமெண்டலாகத் தாய்மையோடு முடிச்சிடுவதோடு நாடகம் முடிகிறது (I Was There In The Room).
இதைப் பார்க்கும் ஆண்கள் பெண்கள் மீதான பாலியல் வன்முறையைக் கைவிடவும் பெண்கள் தம் யோனியை வெறுக்காமல் கொண்டாடவும் கேட்டுக் கொள்கிறார்கள். மறுபடி பெங்களூரில் வரும் மார்ச் 7 மற்றும் 8ம் தேதிகளில் இதே நாடகம் நிகழ்த்தப்படுகிறது. முதல் முறை தவறவிட்டதாக நினைப்பவர்கள் பார்க்கலாம்.
நாடகத்தின் இயக்குநர் லேகா நாயுடு இப்படி ஒரு அபாரமான குழுவை உருவாக்க மிகுந்த சிரமப்பட்டு இருக்க வேண்டும். கிட்டத்தட்ட அத்தனை பெண்களுமே மிக இயல்பான, சினேகமான நடிப்பை வெளிப்படுத்தினர். ஒருவர் நடிக்கும் போது மற்ற பெண்கள் அனைவரும் உற்சாகமூட்டியதும் அத்தனை துடிப்பாக இருந்தது.
நாடகம் முழுக்கவே மிகச் சுவாரஸ்யமாக நகர்ந்தது. அவ்வப்போது ஆரவரமான சிரிப்பொலிகளும் ஒவ்வொரு monologue முடிந்தவுடன் பலத்த கைத்தட்டல்களும் காண முடிந்தது. இதில் முக்கியமாய் கவனிக்க வேண்டியது நான் போயிருந்த காட்சிக்கு வந்திருந்தவர்களில் 80% பேர் பெண்கள். இளம் பெண்கள். அவர் அத்தனை பேரும் நாடகத்தை மிக ஒன்றிப் போய் ரசித்ததாகப் பட்டது. அதாவது அவர்களால் வெளிப்படையாகப் பேச முடியாததை அங்கே அந்த பெண்கள் குழுவினர் பேசியதாகவே அவர்கள் உணர்ச்சி மிகுதியில் பார்த்தனர். அவர்கள் அத்தனை பேரும் நாடகம் முடிந்து அன்றிரவு வீடு திரும்பியதும் தம் யோனியைக் கண்ணாடியில் பார்த்திருக்கக்கூடும்!
நான் தமிழில் 'யோனியின் குரல்' எழுதலாமா எனத் தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
*

Comments