புத்தக யாத்திரை

இந்த 2014 சென்னை புத்தகக் காட்சியில் வாங்கிய நூல்களின் பட்டியல் இது. கவிதை நூல்களே வாங்கக்கூடாது என்ற முடிவுடன் தான் இறங்கினேன் இம்முறை. பிறகு தவிர்க்கவியலாமல் மகுடேசுவரனை மட்டும் சேர்த்துக் கொண்டேன்.

 1. குஜராத் 2002 கலவரம் - சி.சரவணகார்த்திகேயன் [கிழக்கு]
 2. ட்விட்டர் மொழி - ஆல்தோட்ட பூபதி [சூரியன்]
 3. கர்ணனின் கவசம் - கே.என்.சிவராமன் [சூரியன்]
 4. மனக்குகைச் சித்திரங்கள் - ஆத்மார்த்தி [புதிய தலைமுறை]
 5. மனிதர் தேவர் நரகர் - பிரபஞ்சன் [புதிய தலைமுறை]
 6. காற்றின் பாடல் - கலாப்ரியா [புதிய தலைமுறை]
 7.  நினைவுதிர் காலம் - யுவன் சந்திரசேகர் [காலச்சுவடு]
 8. வெல்லிங்டன் - சுகுமாரன் [காலச்சுவடு]
 9. பூக்குழி - பெருமாள்முருகன் [காலச்சுவடு]
 10. சாதியும் நானும் - பெருமாள்முருகன் [காலச்சுவடு]
 11. முதல் தனிமை - ஜே.பி.சாணக்யா [காலச்சுவடு]
 12. ஒரு கறுப்புச் சிலந்தியுடன் ஓர் இரவு - அம்பை [காலச்சுவடு]
 13. நிமித்தம் - எஸ்.ராமகிருஷ்ணன் [உயிர்மை]
 14. தற்கொலை குறுங்கதைகள் - அராத்து [உயிர்மை]
 15. நாயுருவி - வா.மு.கோமு [உயிர்மை]
 16. ராஜீவ் காந்தி சாலை - விநாயக முருகன் [உயிர்மை]
 17. இரவல் காதலி - செல்லமுத்து குப்புசாமி [உயிர்மை]
 18. கரும்புனல் - ராம்சுரேஷ் [வம்சி]
 19. 6174 - சுதாகர் [வம்சி]
 20. வெயில் புராணம் - உமா மோகன் [அகநாழிகை]
 21. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை - மார்க்ஸ் / ஏங்கல்ஸ் [கீழைக்காற்று]
 22. இந்திய நாத்திகம் - தேவிபிரசாத் சட்டோபாத்யாயா [பாரதி புத்தகாலயம்]
 23. தேர்ந்த்டுக்கப்பட்ட அனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு [சாகித்ய அகாடமி]
 24. ந.பிச்சமூர்த்தியின் தேர்ந்தெடுத்த கதைகள் [சாகித்ய அகாடமி]
 25. தோழர்களுடன் ஒரு பயணம் - அருந்ததி ராய் [விடியல்]
 26. பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும் - அ.வெண்ணிலா [விகடன்]
 27. தன்வெறியாடல் - மகுடேசுவரன் [தமிழினி]
 28. நிறைசூலி - மகுடேசுவரன் [தமிழினி]
 29. நரேந்திர மோடி : புதிய இரும்பு மனிதர் - அரவிந்தன் நீலகண்டன் [கிழக்கு]
 30. வெள்ளை யானை - ஜெயமோகன் [எழுத்து]
 31. மரண்வீட்டின் குறிப்புகள் - தாய்தாயெவ்ஸ்கி [வ.உ.சி. நூலகம்]
 32. நான் கண்ட காந்தி - லூயி பிஷர் [வ.உ.சி. நூலகம்]
 33. எல்லாவற்றையும் உரையாடல்களாய் மாற்று - அ.மார்க்ஸ் நேர்காணல்கள் [பயணி]
 34. ஆகஸ்ட் 15 - கும‌ரி எஸ். நீலகண்டன் [சாய் சூர்யா]
 35. நீளும் கனவு - கவின் மலர் [கயல் கவின்]
 36. மீன்கள் - தெளிவத்தை ஜோசப் [ந‌ற்றிணை]
 37. உயிர்த்தண்ணீர் - கண்மணி குணசேகரன் [தாமரைச்செல்வி]
 38. நுண்வெளி கிரகணங்கள் - சு.வேணுகோபால் [வேர்கள்]
 39. புவியிலோரிடம் - பா.ராகவன் [ராஜேஸ்வரி]
 40. மகாமுனி - பிரேம் / ரமேஷ் [அடையாளம்]
 41. ஆனந்தாயி - சிவகாமி [அடையாளம்]
 42. இந்தியத் திருவிழாக்கள் [Ministry of Information & Broadcasting]
 43. இதயம் கவரும் இந்தியக் கலாச்சாரம் - பிரபா சோப்ரா [Ministry of Information & Broadcasting]
 44. இந்திய செவ்வியல் நடனம் - கபிலா வாத்ஸ்யாயன் [Ministry of Information & Broadcasting]
 45. புலி வளர்த்த பிள்ளை - வாண்டுமாமா [வானதி]
 46. நிலாக்குதிரை - வாண்டுமாமா [வானதி]
 47. மாஜிக் மாலினி - விசாகன் [வானதி]
 48. மாயாவி இளவரசன் - விசாகன் [வானதி]
 49. தி இந்து : பொங்கல் மலர் 2014
 50. காட்சிப்பிழை : ஜ‌னவரி 2014 இதழ் 
(என் மகன்களை உத்தேசித்து வாங்கிய குழந்தைகள் டிவிடிக்கள் / விசிடிக்களை இதில் கணக்கில் கொள்ளவில்லை.)
இரண்டு வார இறுதி நாட்கள் போயிருந்தேன். பொதுவாகவே இம்முறை என்னவோ கூட்டம் குறைவெனத் தோன்றியது. கலாப்ரியா, கல்யாண்ஜி, மனுஷ்ய புத்திரன், ஞாநி, சுகிர்த ராணி, கே.வி.ஷைலஜா, ஆகியோரைப் பார்க்க முடிந்தது. பொன்.வாசுதேவன், அதிஷா, ராஜன், ஹரன் பிரசன்னா, கிருஷ்ண பிரபு மற்றும் சில ட்வீட்டர்களுடன் பேச முடிந்தது.

"சாருவின் ஸீரோ டிகிரி வாங்கலையா?" என்று ஒரு மிக‌ அழகான பெண் உடன் வந்தவரைக் கேட்டுக் கொண்டிருந்தார். இம்முறை நிறைய ஜீன்ஸ் - டிஷர்ட் பெண்கள். நூல் நயம் எதில் பார்ப்பது என சற்றே குழப்பம் ஏற்பட்டது. பிரேஸியர் அணியும் பழக்கமே வழக்கொழிந்து போய் விட்டது என அலுத்துக் கொண்டான் நண்பன். நான் கவனிக்கவில்லை.

Comments

நூல் நயத்திற்கு வாழ்த்துக்கள்...

Popular posts from this blog

‪அனு சித்தாரம்

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

நுளம்பு [சிறுகதை]