சென்னைப் புத்தகக்காட்சி 2014 - என் நூல்கள்


சென்னைப் புத்தகக்காட்சி 2014 பற்றிய அடிப்படை விவரங்கள்:

இடம்: YMCA மைதானம், நந்தனம்

நாள்: 10 ஜனவரி 2014 – 22 ஜனவரி 2014

விடுமுறை நாட்களில்: முற்பகல் 11:00 முதல் இரவு 8:30 வரை, வேலை நாட்களில்: பிற்பகல் 2:00 முதல் இரவு 8:30 வரை

*
 
புத்தகக் கண்காட்சியில் என் நூல்கள் கிடைக்கும் ஸ்டால்கள்:

1) குஜராத் 2002 கலவரம் (வரலாற்று நூல்) - கிழக்கு பதிப்பகம் (ரூ. 150)

NEW HORIZON MEDIA -  593, 594, 639, 640 (மா. இராசமாணிக்கனார் பாதை & காவியக்கவிஞர் வாலி பாதை) 
கிழக்கு பதிப்பகம் - 589, 590, 643, 644 (மா. இராசமாணிக்கனார் பாதை & காவியக்கவிஞர் வாலி பாதை)

2) கிட்டத்தட்ட கடவுள் (கட்டுரைத் தொகுதி) - அம்ருதா பதிப்பகம் (ரூ. 125)

இம்முறை புத்தகக்காட்சியில் அம்ருதா பதிப்பகம் பங்கு பெறவில்லை. வேறு ஸ்டால்களில் அவர்களின் நூல்கள் கிடைக்குமா என விசாரித்துக் கொண்டிருக்கிறேன். முழுமையான‌ தகவல் அறிந்ததும் தெரியப்படுத்துகிறேன்.

3) தேவதை புராணம் (கவிதைத் தொகுதி) - கற்பகம் புத்தகாலயம் (ரூ. 75)

கற்பகம் புத்தகாலயம் - 320, 321 (நீதியரசர் மு.மு. இஸ்மாயில் பாதை)

4) பரத்தை கூற்று (கவிதைத் தொகுதி) - அகநாழிகை பதிப்பகம் (ரூ. 50)

புதுப்புனல் - 666, 667 (மா. இராசமாணிக்கனார் பாதை)

5) சந்திரயான் (விஞ்ஞான நூல்) - கிழக்கு பதிப்பகம் (ரூ. 100)

NEW HORIZON MEDIA -  593, 594, 639, 640 (மா. இராசமாணிக்கனார் பாதை & காவியக்கவிஞர் வாலி பாதை) 
கிழக்கு பதிப்பகம் - 589, 590, 643, 644 (மா. இராசமாணிக்கனார் பாதை & காவியக்கவிஞர் வாலி பாதை)

*

வாசகர்களின் வசதிக்காக ஸ்டால் லேஅவுட்டில் என் புத்தகங்கள் கிடைக்கும் ஸ்டால்களைக் குறித்திருக்கிறேன்.

 
போன முறை ஒருவர் தேவதை புராணம் கிடைக்கும் இடத்தில் பரத்தை கூற்று கிடைக்குமா என விசாரித்து சரியாய்ப் பதில் சொல்லப்படவில்லை எனப் புகார் சொன்னார். நிச்சயம் அவர்களுக்கு அது குறித்தெல்லாம் தெரியாது. அவர்கள் விற்கும் நூல்கள் குறித்து மட்டுமே அவரவர் அறிந்திருப்பர். அது ஜில்லா ஓடும் தியேட்டரில் போல் வீரம் படத்துக்கு டிக்கெட் கேட்பது போல். அந்தக் குழப்பங்களே வேண்டாம் என்று தான் இம்முறை படம் போட்டே பாகம் குறித்தாயிற்று.

*

ஓர் ஐந்நூறு ரூபாய் நோட்டை எடுத்துப் போனால் என் புத்தகங்கள் அத்தனையையும் வாங்கிப் பையில் போட்டுக் கொண்டு, வெளியே வந்து சுட‌ச்சுட‌ சுவையான டெல்லி அப்பளமும் மிளகாய் பஜ்ஜியும் தின்று விட்டு வரலாம்.

Comments

கணக்குப்பிரகாரம் அப்பளத்திற்கும் பஜ்ஜிக்கும் போதாது. தள்ளுபடி எவ்வளவு..?! ;)
@சேலம் தேவா

10% தள்ளுபடி. அதனால் புத்தகங்களின் விலை தள்ளுபடி போக‌ ரூ. 450 வரும். மிச்சம் 50 ரூபாய்க்கு அப்பளமும் பஜ்ஜியும் தாராளமாய் வருமே!
Nat Sriram said…
வாழ்த்துக்கள் CSK. உங்கள் புத்தகங்கள் நல்ல வரவேற்பை பெறட்டும் :)
Anonymous said…
Is there any way to buy your books online(especially Gujarat 2002)? If yes, can you please share the link?

Thanks,
SenthilPrakash
@SenthilPrakash

As of now, the book is NOT available for sale via online. I will update once it's made done.

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்