'பரத்தை கூற்று' தலைப்பு : ஒரு விளக்கம்

'பரத்தை  கூற்று' என்ற என் கவிதைத் தொகுதியின் தலைப்பில் இலக்கண சந்திப்பிழை உள்ளது, 'பரத்தைக் கூற்று' என்று வல்லினம் மிகுந்து வரும் வேண்டும் என்று அவ்வப்போது சொல்லப்பட்டு வருகிறது. அதை விளக்கும் முகமே இப்பதிவு.

 பரத்தையது கூற்று = பரத்தை(+அது) + கூற்று = பரத்தை  கூற்று.

'அது' - ஆறாம் வேற்றுமை உருபு. அதாவது 'பரத்தை கூற்று' என்பது ஆறாம் வேற்றுமைத் தொகை. பொதுவாய் ஆறாம் வேற்றுமைத் தொகைகளில் வல்லினம் மிகும். உதாரணம் : சிங்கப்பல், அறிவுத்திமிர். ஆனால் அதில் ஒரு conditional rule இருக்கிறது. வருமொழி அஃறிணையாய் இருந்தால் மட்டுமே வல்லினம் மிகும். உயர்திணையாய் இருந்தால் மிகாது.

இப்படி ஒரு வினோத‌ விதி இருக்கிறது (ஆதாரம் : http://www.tamilvu.org/slet/lA100/lA100pd3.jsp?bookid=171&pno=242)

நான் நூலிற்குத் தலைப்பு வைத்த போது இதெல்லாம் ஆராய்ந்து வைத்திலன். தலைவன் கூற்று, தலைவி கூற்று, தோழி கூற்று, செவிலித்தாய் கூற்று என்று தான் சங்க அக இலக்கியங்கள் பேசுகின்றன.  இவ்வரிசையில் குறுந்தொகையில் குறைந்தபட்சம் 3 பாடல்கள் (1,2,3) பரத்தை கூற்றாய் வருகின்றன. புத்தகத்தலைப்பை அதிலிருந்து அப்படியே தான் எந்தக் கேள்வியுமின்றி எடுத்தாண்டேன். இலக்கணரீதியாய்ச் சரியா என்றெல்லாம் ஆராயவில்லை. ஆனால் சில மாதங்கள் முன் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது தான் மேற்சொன்ன விஷயத்தைத் தேடி சரி பார்த்துக் கொண்டேன்.

அது சரி, பரத்தை என்பவளை அஃறிணையாய் எண்ண மாட்டீர்கள் தானே!

Comments

ஐ வந்தால் வல்லினம் மிகாது என ஒரு முறை வைரமுத்து சொன்னதாக நினைவு. அவரும் ஏதோ ஒரு விதியை சுட்டினார்.

திருநிறைச்செல்வன் தவறு, திருநிறைசெல்வந்தான் சரியென்றார்.
தகுந்த ஆதாரத்துடன் விளக்கியமைக்கு நன்றி. புதிதாகத் தெரிந்துகொண்டேன். இதே விதி ''தேவதை புராண''த்திற்கும் பொருந்திப் போவது சிறப்பு.
Anonymous said…
பரத்தை என்றாலே"கூ"தான் சர்ச்சைக்குரிய விஷயம் எனக்கேள்வி!
"க்"கும் அப்படித்தான் என்பது நீங்கள் சொன்னபிறகுதான் தெரிகிறது.

Popular posts from this blog

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

CSK Diet

பொச்சு