சினிமா சித்தாளு & The காமன் Man

ச்சீய் பக்கங்கள் தொடருக்கென பிரதான கட்டுரை தவிர்த்து சுவாரஸ்யத்திற்காக நான் உருவாக்கிய கேரக்டர்கள் நான்கு:
  1. Stats சவீதா
  2. கவிஞர் கில்மா
  3. சினிமா சித்தாளு
  4. The காமன் Man
இதில் Stats சவீதா பிரபல செக்ஸி கார்ட்டூன் கேரக்டரான சவீதா பாபி பாத்திரத்தை ஒட்டியது. எடுத்துக் கொண்ட அந்தத் தலைப்பு தொடர்பான புள்ளி விவர‌ங்களை இது பட்டியலிடும். இதை அப்படியே தொடரிலும் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

அடுத்து கவிஞர் கில்மா. அந்த வாரத்தின் கில்மா மேட்டர் தொடர்பாய் அங்கதத்துக்கும் யதார்த்தத்துக்கும் இடைப்பட்ட புள்ளியில் ஒரு குறுங்கவிதை சொல்லும் இந்தக் கேரக்டர். கவிஞர் குஜிலிகும்பான் என அதிஷா அடிக்கடி குறிப்பிடும் பாத்திரம் தான் இதன் இன்ஸ்பிரேஷன். தொடரில் இதன் பெயரை கவிஞர் காத்துவாயன் என மாற்றி இருக்கிறார்கள்.

அப்புறம் சினிமா சித்தாளு. ஜெயகாந்தனின் சினிமாவுக்குப் போன சித்தாளு நாவலில் வரும் சினிமாவுக்கு அடிமையான‌ பாத்திரத்தைத் தழுவியது இது. டாபிக் தொடர்பான சினிமா செய்திகளை இவர் பட்டியலிடுவார். இது தொடரில் இல்லை.

கடைசியாய் The காமன் Man. எடுத்துக் கொண்ட விஷயத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு மென் ஏ ஜோக் சொல்லும் பாத்திரம் இது. பிரபல கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மணின் The Common Man பாத்திரம் ஒரு சராசரி இந்தியப் பிரஜையை பிரதிநிதித்துவப் படுத்தியதைப் போல் நம் ஒவ்வொருவருக்கு உள்ளும் இருக்கும் காம உணர்வு சார்நகைச்சுவையை எடுத்தியம்புவதாய் இது அமைந்திருந்தது. தொடருக்கு ஆபாசத் தொனி வந்துவிடலாகா என இது இடம்பெறவில்லை.

இன்று வெளியான குங்குமம் இதழின் (23-9-2012) ச்சீய் பக்கங்களில் காண்டம் இடம்பெற்றிருக்கிறது. முதல் இரண்டு அத்தியாயங்களுக்கும் எழுதிப் பிரசுரம் காணாத சினிமா சித்தாளு மற்றும் The காமன் Man விஷயங்களைப் பகிர்கிறேன்:

1. ப்ரா

சினிமா சித்தாளு
கிரேஸி மோகன் வசனம் எழுதும் கமல்ஹாசன் படங்களில் பாடி ஜோக் தவறாது இடம்பெறும். நாம் இருவர் நமக்கு இருவர் படத்தில் பிரபுதேவா போடும் ப்ரா காஃபி மிகப் பிரபலம். விவேக் தம் நகைச்சுவைகளில் நாயுடு ஹாலை பிரபலப் படுத்தினார். செல்லமே படத்தில் ரீமா சென் மனதைத் தொடுவது மாதிரி கிஃப்ட் தர வேண்டும் என ப்ரா வாங்கப் போவார் விஷால். ஃபாரா கான் நடித்து சமீபத்தில் வெளியான Shirin Farhad Ki Toh Nikal Padi என்ற இந்திப் படத்தில் நாயகன் பொமன் இரானி ஒரு உள்ளாடை சேல்ஸ்மேன். படம் முழுக்க ப்ராக்கள் மயம் தான்.

The காமன் Man

காமன் மேன் ஆஃபர் சேலில் கார் டயர்களை வாங்கி வந்தார். அவர் மனைவி கோபமாக "முட்டாளா நீங்கள், நம்மிடம் தான் காரே இல்லையே இதை எதற்கு வாங்கி வந்தீர்கள்?" எனக் கேட்டார். காமன் மேன் அமைதியாக "நீ கூடத் தான் ஆடித் தள்ளுபடியில் ப்ரா வாங்கினாய், நான் ஏதாவது சொன்னேனா?" என்றார்.

2.காண்டம்

சினிமா சித்தாளு
எங்க சின்ன ராசா படத்தில் ராதா ஆடி மாத பிரிவை நிராகரித்து பாக்கியராஜுக்கு காண்டம் பயன்படுத்த சொல்லித் தருவார். பவித்ரா`, கனாக்கண்டேன் படங்களில் கணவன் மனைவி கருத்தடைக்கு காண்டம் பயன்படுத்தும் காட்சி வரும். பாணா காத்தாடி படத்தில் தவறுதலாய் அதர்வாவிடம் வந்து விட்ட காண்டம் பாக்கெட் பார்த்துத் தான் சமந்தா அவரைப் பிரிவார். Paa படத்தில் அபிஷேக் பச்சனிடம் பயன்படுத்த காண்டம் இல்லாத போதான கலவியில் தான் அமிதாப் பச்சனை வித்யா பாலன் கருவுறுவார். M. குமரன் s/o மஹாலக்ஷ்மி படத்தில் விவேக் காண்டம் அணியாமல் பிள்ளை பெற்றுத் தள்ளுவதைக் கிண்டல் செய்திருப்பார்.

The காமன் Man

காமன்மேன் நண்பரின் டீன்ஏஜ் மகனுடன் மெடிக்கல் ஷாப் போயிருந்தார். அவன் அங்கிருந்த 3 காண்டம் கொண்ட பாக்கெட்டைக் காட்டி எதற்கு எனக் கேட்டான். "அது டேட்டிங் செய்பவர்களுக்கு. வெள்ளி ஒன்று, சனி ஒன்று, ஞாயிறு ஒன்று". அடுத்து 6 காண்டம் கொண்ட பாக்கெட்டைக் காட்டி எதற்கு எனக் கேட்டான். "அது காதலிப்பவர்களுக்கு. வெள்ளி ரெண்டு சனி ரெண்டு, ஞாயிறு ரெண்டு". கடைசியில் 12 காண்டம் கொண்ட பாக்கெட்டைக் காட்டி எதற்கு எனக் கேட்டான். "அது கல்யாணம் ஆனவர்களுக்கு. ஜனவரி ஒன்று, ஃபிப்ரவரி ஒன்று, மார்ச் ஒன்று....".