பரத்தை கூற்று : ஒரு வாசகியின் கடிதம்

 பரத்தை கூற்று கவிதைத் தொகுதி பற்றி சில நாட்கள் முன்பு ஒரு வாசகி எழுதிய கடிதம் இங்கே:

*******

சரவணகார்த்திகேயனுக்கு

உங்களின் பரத்தமை கூடு எதேச்சையாக தோழி வீட்டில் படிக்க நேர்ந்தது 

வலியின் உச்சம். பெண்ணின் வலி உணர்ந்து மனம் கனத்து போனது. இந்த வரிகள் சொல்லும் எல்லா ஆண்களுக்கும். ஆனால் வார்த்தைகளில் பெண்கள் வதைபடுவது கொடுமையின் உச்சம். சமகாலத்தை பத்தி எழுதி இருக்கிறீர்கள் வேறு என்ன சொல்ல. வலி மிக்க படைப்பு. மாறுமா இந்நிலை ?

"அன்பு மனைவியை ஆசைப் புதல்வியை
ஒற்றை கணத்தில் எனை போலாக்கும் 
வல்லமை நிறைந்தது உன் அகால மரணம்"

இந்த வரிகள் மட்டும் ஒட்டிவிட்டது ஒரு முள்ளைப் போல குத்தி.

கோவை மு சரளா

*******

பின்குறிப்பு: பரத்தை கூற்று என்பதைத் தான் பரத்தமை கூடு என்று குறிப்பிட்டிருக்கிறார் சரளா.

1 comment:

கோவை நேரம் said...

நான் விரும்பி படித்த ஒரு புத்தகம்.தங்களின் பரத்தை கூற்று.
வாசிக்க ஆரம்பித்த நான் லயிக்க ஆரம்பித்தேன் உங்கள் வரிகளில்..நூலின் கடைசி வரிகள் வரைக்கும் படித்து விட்டு தான் வைத்தேன்.அத்துணை சுவாரஸ்யம்...வாழ்த்துக்கள்.