Music for me is defined by Ilayaraja - கௌதம் மேனன்
ரேடியோ மிர்ச்சி பண்பலையில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் ‘நீ தானே என் பொன் வசந்தம்’ படத்தின் இசை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். அதன் எழுத்து வடிவம் இது. (நன்றி : ILLAYARAJA- KING OF MUSIC ஃபேஸ்புக் பக்கம்)
கே: ராஜா Sir – Gowtham Menon இந்தக் Combination அமைந்தது எப்படி? சொல்லுங்கள்.
ப: Starting from மின்னலே, எல்லா படத்துக்கும் ராஜா Sir’ஐக் கேட்கலாம் என்றுதான் நினைப்பேன். Because I grew up with his Music. ”நீதானே என் பொன்வசந்தம்” படம் ஒரு 50% Shoot பண்ணி முடித்துவிட்டேன். கதாநாயகியின் பெயர் நித்யா. அதில் ஒரு காட்சி..! ‘நினைவெல்லாம் நித்யா’ படத்தில் வரும் ‘நீதானே என் பொன்வசந்தம்’ பாடலை Jeeva கதாநாயகிக்காகப் பாடுவார். அப்போதுதான் எனக்குத் தோன்றியது .. ‘இது ராஜா Sir படத்தில் வரும் பாடலின் வரிகள்’. எனவே அவரைக் கேட்கலாம்’ என்று. என் தயக்கத்தைத் தவிர்த்து நேராகப் போய் அவரை சந்தித்தேன். நான் அவரை சந்திப்பேன் என்று அவரும் எதிர்பார்க்கவில்லை. நான் வேறு ஏதோ விஷயமாக அவரை சந்திக்க வந்திருக்கிறேன் என்றுதான் அவரும் நினைத்திருப்பார் என்று எண்ணுகிறேன். அவரிடம் நான் ‘Sir.. ஒவ்வொரு முறையும் உங்களிடம் வரவேண்டும் என்று நினைப்பேன். ஆனால் எனக்கு Guts இல்லை. இப்போது என்னுடைய Work பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்ற நம்பிக்கையில் வந்திருக்கிறேன். இந்தப் படத்துக்கு நீங்கள்தான் இசையமைக்க வேண்டும்’ என்று கூறினேன். அவரும் ‘ஆமா..! உங்க Work பற்றி எனக்குத் தெரியும்’ என்று சிரித்துக்கொண்டே கூறினார். நான் Shoot பண்ண காட்சிகள் எல்லாம் அவருக்குப் போட்டுக்காட்டினேன். இந்தப் படத்தைப் பற்றி நிறைய விஷயங்கள் அவரிடம் பேசினேன். ‘Wonderful’ என்றார்.
கே: ராஜா Sir’உடன் உங்களுடைய composing அனுபவம் எப்படி இருந்தது ?
ப: Second Meeting’லேயே Composing ஆரம்பித்து விட்டார். Payment’ஓ.. Advance’ஓ… எதுவுமே அவர் என்னிடம் பேசவில்லை. Situation சொல்லுவேன். ‘What kind of Music do you want?’ அப்டின்னு கேட்பார். மிகவும் பயத்துடன், எனக்குத் தெரிந்த Genre எல்லாம் அவரிடம் சொன்னேன். “Male Voice.. அதுக்கப்பறம் கொஞ்சம் Silence.. பின்னர் Guitar.. வேணும்”..! இப்படி அவரிடம் நிறைய Explain செய்தேன். “ஓ.கே.” என்றார். வெறும் ஹார்மோனியம்தான். தரையில்தான் உட்கார்ந்திருந்தோம். அவருடைய Prasad Studio’வில்தான் கம்போஸிங் நடைபெற்றது. இதற்காக வெளியில் எங்கும் செல்லவில்லை. ஒன்றன் பின் ஒன்றாக Situation சொல்லச் சொல்ல அள்ளிக்கொடுத்துக்கொண்டே இருந்தார். ஒரு மூன்று Tunes கொடுத்தவுடன்.. “Sir.. இன்னிக்கி இது போதும்” என்றேன். ‘இல்ல இல்ல… நல்ல Flow’வில் இருக்கிறது. வரட்டும்” என்றார். நான் அவரிடம் “Sir.. இவ்வளவு விஷயங்களை என்னால் உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை” என்றேன். ஏனென்றால் I needed to settle down with that Music.
“Do you think I’ve come prepared?” என்று என்னிடம் பதிலுக்குக் கேட்டார். உண்மையில் அப்படித்தான் இருந்தது. இவர் ஏற்கெனவே எங்கேயோ Compose செய்து பாடல்களை Readymade’ஆகக் கொண்டுவந்தது போலத்தான் இருந்தது. ஆனால் உண்மையில் அப்படி இல்லை. அவர் ஆர்மோனியத்தில் கை வைக்கும்போதுதான் அந்த Tune பிறக்கிறது. அது உண்மையில் Mind Blowing. ஒரு மூன்று நாட்களில் 14 Tunes கொடுத்தார். எனக்குப் படத்தில் 8 பாடல்கள்தான் தேவைப்பட்டது. “You decide what you want. நீங்க கேட்ட Situation’களுக்கு நான் Tunes கொடுத்திருக்கிறேன். எது Best’ஓ அதை நீங்க Choose பண்ணிகிட்டு வாங்க. இதுதான் மற்றவர்களிடமும் நான் செய்வது” என்றார். நான் அவர் குரலில் அவர் பாடித் தந்த Tune’களை வைத்து ஒரு 24 மணி நேரம் Work செய்தேன். அதன்பின்னர் 2 நாட்கள் கழித்து ‘இந்த இந்த Tunes எனக்கு வேண்டும்” என்று 8 பாடல்களை அவரிடம் கொடுத்தேன்.
கே: லண்டனுக்குச் சென்று அவருடன் பாடல்கள் பதிவு செய்த அனுபவம்..??
ப: Voices மட்டும் இங்கே Record பண்ணிக்கொள்ளலாம் என்று முடிவு செய்தோம். இங்கே Top Singers பாடிய பாடல்களின் வெறும் Voices’ஐ மட்டும் எடுத்துக்கொண்டு London சென்றோம். ‘இதற்கு எப்படி Music வரும். எப்படி செய்வார்?’ என்று யோசித்துக்கொண்டே இருந்தேன். அவருக்கு ஏற்கெனவே வாசித்திருந்த Budapest கலைஞர்களுடன் London Angel Studio’வை ஏற்கெனவே மூன்று வாரங்களுக்கு Block பண்ணிவைத்துவிட்டு, prepared’ஆகத்தான் சென்றோம். அங்கே Musicians தயாராக இருந்தனர். அவர்களுக்கு வெறும் Papers மட்டும்தான் கொடுத்தார். No talking at all. உதாரணத்திற்கு Guitar’ல் ‘டிங்.. டிங்.. டிங் டிங்” அப்படி கூட சொல்ல மாட்டார். Notes கொடுப்பார். அதைப் பார்த்துவிட்டு They’ll Play..! அவ்வளவுதான். ஏற்கெனவே அவருடைய Mind’ல் அந்த Music இருக்கிறது. ‘நான் ஹார்மோனியத்தில் Compose செய்யும்போதே இந்த Music வரும் என்று எனக்குத் தெரியும்’ என்கிறார். எல்லாம் என் கண் முன்னர் Unfold ஆகி வாசிக்கப்படும்போது, I saw Music being created. Music being Born.
கே: இணையத்தில் ராஜா Sir’ஐ Coat & Suit’ல் பார்த்தோம். அவருடைய Look’ல் மாற்றம் இருந்தது. அது எப்படிச் சாத்தியம் ஆயிற்று?
ப: அவரிடம் அதெல்லாம் ஏற்கெனவே இருந்தது. நான் அவரிடம் “Sir.. Recording’ஐ shoot பண்ணப் போகிறோம். பொதுவாக படத்தில் இருந்துதான் காட்சிகளை Trailer’களில் காண்பிப்பார்கள். ஆனால் இந்தப் படத்திற்கு ‘Making Video’க்களைத் தான் Trailer’களில் காண்பிக்கப் போகிறோம்” என்று சொன்னேன். மேலும் ‘நீங்கள் செய்வது எல்லாம் எனக்குப் புதிதாக இருக்கின்றது. 108 Piece Orchestra.. Music Notes பார்த்து கலைஞர்கள் இசைக்கின்றனர். I want to record all that. இதற்காக Suit போட்ட Look’ல் இருக்கலாமா Sir?” என்று கேட்டேன். சிரித்தார். “Are you Sure?” என்றார். “ஆமா Sir.. நன்றாக இருக்கும்’ என்றேன். ‘OK’ என்றார். அவரிடம் 4 Suits இருந்தது. கொண்டுவந்திருந்தார். இடையில் என்றாவது ஒரு நாள் ‘நான் இன்று White & White’ல் வருகிறேன்’ என்று சொல்லிவிடுவார்..! நான் எதுவும் Force பண்ணவில்லை. He gladly accepted to that.
கே: “சாய்ந்து சாய்ந்து’ பாடலின் Situation என்ன? சொல்லுங்கள்.
ப: நாயகனும் நாயகியும் பேசிக்கிட்டு இருக்காங்க. அப்போ Suddenly அவள் “I Love You” என்கிறாள். உடனே ஒரு Male voice துவங்குகிறது. பின்னர் Guitar and Percussion இணைகிறது. அப்போது இருவரும் Kiss பண்ணத் துவங்குகிறார்கள். பின்னர் பாடல் Break ஆகி அதன்பின்னர் தொடர்ந்து வருகிறது. அவள், “என்ன நீ ஒண்ணுமே சொல்லவில்லையே?” என்று கேட்கிறாள். அவன் “அதுதான் சொன்னேனே” என்கிறான். அதாவது, அவள் அவனிடம் Propose பண்ணதிற்கு அந்த முத்தம்தான் அவனது பதில். இவ்வளவுதான் Situation. நான்தான் ராஜா Sir’இடம், “Sir.. இந்தப் பாடலுக்கு யுவனைப் பாடவைக்கலாம்” என்று சொன்னேன்.
கே: வேறு யாரெல்லாம் பாடியிருக்கிறார்கள்?
யுவன் தமிழில் ஒன்று, தெலுங்கில் ஒன்று பாடியிருக்கிறார். பாடகர் ஷான் ஒரு பாடல், கார்த்திக் ஒரு பாடல், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் Granddaughter ரம்யா இரண்டு பாடலும் பாடியிருக்கிறார்கள். Altogether It will be new. இது ராஜா Sir Music’னு தெரியும். ஆனால் மிகவும் புதிதாக இருக்கும். எல்லாமே Script songs..! கதையுடன் வருவது. Second Half’ல் ஐந்து பாடல்கள். Actually the songs will carry forward the Story. எந்த பாடலுமே தேவையில்லாதது என்ற ஒரு Feel இருக்காது.
கே: ராஜா Sir’ன் இசை மீது ஒரு காதல் உங்களுக்கு எப்போது ஏற்பட்டது?
ப: இதை நான் அவரிடமே சொன்னேன். அதாவது ‘நான் கேட்டு வளர்ந்த Music உங்களுடையதுதான். என்னுடைய 13வது வயதில் இருந்து… அல்லது .. Music .. Films என்று ஒரு awareness வரும் இல்லையா? அந்த சமயத்தில் எல்லாம் நான் கேட்டது அவருடைய Music’தான். நான் திருச்சிக்குச் சென்று படித்தபோதும், அங்கேயும் like minded friends ஒரு பத்து பதினைந்துபேர் அவர் பாடல்களையே கேட்டுக்கொண்டு இருப்பார்கள். அவரைப் பற்றியே பேசிக்கொண்டிருப்போம். அன்னக்கிளியில் துவங்கி அவர் எப்படி எல்லாம் இசையமைத்திருக்கிறார் என்று நிறைய பேசுவோம். நான் அவரிடமே “My Music was defined by your songs” என்று சொன்னேன்.
இது எனக்கு மட்டுமில்லை. எல்லோரும் அவர் இசை கேட்டு வளர்ந்தவர்கள்தான். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ஒருமுறை சூர்யா இரவு 11.30 மணிக்கு, ”பாண்டிச்சேரியில் இருந்து drive பண்ணிகிட்டு வர்றேன்” என்றார். “என்ன சூர்யா? சொல்லுங்க.” என்றேன். “எனக்கு ஒரு சின்ன Thought. ராஜா Sir இசையில் நானும் நீங்களும் ஒரு படம் பண்ணனும்” என்றார். ‘என்ன திடீர்னு?” என்றேன். ‘தெரியல .. வரும்போது அவர் பாடல்களைக் கேட்டுக்கொண்டே வந்தேன். இது மாதிரி பாடல்கள்.. Feel… இதெல்லாம் யாரும் இதுவரையில் கொடுத்ததே இல்லை. அதனால் நானும் நீங்களும் சேர்ந்து அவர் இசையில் ஒரு படம் பண்ணனும்” என்றார். அது போல நிறைய வகையில் எல்லோரிடத்திலும் அவருடைய இசையின் தாக்கம் ஏதோ வகையில் இருக்கிறது. Music For me is defined by Ilayaraja Sir.
*******

Comments