குமுதம் இதழில்

குமுதம் 6.6.2012 தேதியிட்ட இதழில் (அட்டையில் சகுனி கார்த்தி + அழகி ப்ரணீதா) டைட்டானிக் நூற்றாண்டையொட்டி நானெழுதிய ஐந்து பக்க‌ கட்டுரையான‌ மூழ்கவே மூழ்காத கப்பல் வெளியாகி உள்ளது. தவிர‌, எனது சமீப வெளியீடான தேவதை புராணம் கவிதைத் தொகுப்பு குறித்த சுருக்கமான‌ நூல் அறிமுகம் பு(து)த்தகம் பகுதியில் இடம் பெற்றுள்ளது.


குமுதம் போன்ற ஓர் உச்சபட்ச‌ வெகுஜன பத்திரிக்கையில் வெளியாகும் என் முதல் பெரிய படைப்பு என்ற வகையில் எனக்கு முக்கியமானதொரு நிகழ்வு இது. வசதியும் வாய்ப்பும் வாய்த்தவர்கள் வாங்கி வாசித்து வாயார வாழ்த்தலாம்.

Comments

SELECTED ME said…
வாழ்த்துக்கள்!
ட்விட்டரில் @writernaayon இக்கட்டுரையில் சொல்லப்பட்டிருந்த சில‌ தகவல்கள் குறித்து "269மீ நீளமுள்ள டைட்டானிக் வெறும் 28மீ தான் அகலம் கொண்டதா? பத்து தளங்கள்- உயரம் 32மீ தானா? விளக்கவும்" எனக் கேள்விகள் எழுப்பி இருந்தார் (https://twitter.com/writernaayon/status/208413920447315968). அவருக்கான பதில்கள்:

டைட்டானிக்கின் உயரம் 32 மீ தான் (புகை போக்கிக் குழல்களுடன் சேர்த்து 53 மீ). பொதுவாக வீட்டிலிருக்கும் அறைகள் 3 மீ (கிட்டதட்ட 10 அடி) உயரம் இருக்கும். அவ்வகையில் பார்த்தால் கூட 32 மீ என்பது பத்து தளங்களுக்கு சரியாகத் தான் வருகிறது (பார்க்க கப்பலின் குறுக்குவெட்டு வரைபடம் ‍- http://upload.wikimedia.org/wikipedia/commons/8/84/Titanic_cutaway_diagram.png).

கப்பலின் 28 மீ (92 அடி) என்பதும் சரியே. அதாவது அதிகபட்ச அகலம் (பார்க்க கப்பலின் டாப் ஆங்கிள் வரைபடம் - http://www.encyclopedia-titanica.org/discus/messages/5919/101139.gif).
Anonymous said…
வாழ்த்துக்கள்...d

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்