கையறு நிலை
*
இல்லை என்கிற
தொல்லை முடிந்து
இருக்கிறது என்ற
தொல்லை இப்போது.
*
மறுப்பதற்கும்
வெறுப்பதற்கும்
ஏதுமற்ற நிலை
கையறு நிலை.
*
வாய்ப்பற்ற வறட்சியில்
ராமர்களாக சீதைகளாக
வாழ்ந்து முடிக்கிறோம்.
*
சொல்ல முடியாமல்
அழுகிற குழந்தைகள்;
சொல்ல முடியாமல்
அழவும் முடியாமல்
பெரியவர்கள்.
*
நாற்பது வயதாகிறது -
வாய்க்கு ருசியாய்த்
தின்னக் கேட்பது
நாய்க்குணமா?
*
இல்லை என்கிற
தொல்லை முடிந்து
இருக்கிறது என்ற
தொல்லை இப்போது.
*
மறுப்பதற்கும்
வெறுப்பதற்கும்
ஏதுமற்ற நிலை
கையறு நிலை.
*
வாய்ப்பற்ற வறட்சியில்
ராமர்களாக சீதைகளாக
வாழ்ந்து முடிக்கிறோம்.
*
சொல்ல முடியாமல்
அழுகிற குழந்தைகள்;
சொல்ல முடியாமல்
அழவும் முடியாமல்
பெரியவர்கள்.
*
நாற்பது வயதாகிறது -
வாய்க்கு ருசியாய்த்
தின்னக் கேட்பது
நாய்க்குணமா?
*
Comments
http://charuonline.com/blog/?p=2620
சிரிக்காமல் ஜோக் அடிக்க எப்படி இவரால் மட்டும் முடிகிறது??