பஞ்ச ஹிந்தியும் ஹிந்தி பஞ்சமும் - 1

கடந்த இரண்டு மாதங்களில் நான் பார்த்திருக்கும் இந்தித் திரைப்படங்களின் எண்ணிக்கை மட்டும் ஐந்து. ஆடிக்கொரு முறை அமாவாசைக்கொரு முறை பரங்கி பாஷைப் படம் பார்க்கும் என் மாதிரியான குண்டுச்சட்டிக் குதிரைக்கு இந்த frequency அபூர்வம். ஆங்கிலமென்றால் கூடப் பரவாயில்லை - தட்டுத் தடுமாறி வசனங்களூறுதல் சாத்தியம். இந்திப் படமென்றால் படுசுத்தம் - குருடன் யானையைத் தடவிப் பார்த்த கதை தான். ஆனால் நான் இதுகாறும் பார்த்த இந்திப் படங்கள் எல்லாவற்றையும் எனக்குத் தெரிந்த சொற்ப இந்தியைக் கொண்டு 75% - 80% வரை புரிந்து கொள்ள முடிகிறது என்றே சொல்லுவேன் (இதில் ஒரு பாதி contextual understanding பலத்தில்). இந்த ஐந்து படங்களும் கூட அப்படித் தான்.

இதில் முக்கியமான சுவாரசியமே இப்படங்கள் ஒவ்வொன்றையும் நான் பார்த்தது வெவ்வேறு காரணங்களுக்காக.

1. Bbuddah Hoga Terra Baap [बुड्ढा होगा तेरा बाप]


இப்படம் பார்த்தது அமிதாப் பச்சனுக்காக. நீண்ட நாள் கழித்து அமிதாப் ஆக்ஷன் ஹீரோவாக நடித்திருக்கும் படம் (படத்தின் இறுதியில் "a tribute to the 80s angry young man” என்று கார்ட் போடுகிறார்கள்). அமிதாப் பச்சன் பட்டையைக் கிளப்பியிருக்கிறார் (Harley-Davidson பைக்கில் அவர் வரும் காட்சியில் மானசீகமாக விசில் போட்டேன்). ப‌ல இடங்களில் அவரது body language (இப்போதைய) ரஜினியை ஞாபகப்படுத்துகிறது. இயக்கம் பூரி ஜகந்நாத் (தெலுங்கு ஒரிஜினல் போக்கிரி படத்தின் இயக்குந‌ர்). வழக்கமான மசாலா திரைக்கதை தான் - போக்கிரி + ஆதவன் படங்களை கதைகளை mix-n-match செய்து வந்திருக்கிறது. அமிதாப் தான் வித்தியாசம். ஹேம மாலினி இன்னமும் அழகாயிருக்கிறார். அவருக்கும் அமிதாப்புக்குமான ரொமான்ஸ் பாடலான‌ Haal-E-Dil மனதை அள்ளுகிறது - போலவே அமிதாப்பின் கம்பீர‌ குரலில் ஒலிக்கும் டைட்டில் சாங்கும் (இசை : விஷால் - சேகர்). ரவீணா டாண்டனும், சார்மி கௌரும் அவ்வப்போது மின்னலடிக்கிறார்கள். படத்தின் வில்லன் பிரகாஷ்ராஜ். அமிதாப்புக்காக இன்னொரு முறை பார்க்க விரும்புகிறேன்.

2. Singham [सिंघम]


இப்படம் பார்த்தது ஓர் ஒப்பீட்டுக்காக. தமிழில் வந்த‌ சிங்கம் படத்தின் மறுஆக்கமே இப்படம். தமிழ் வெர்ஷன் தான் என‌க்கு உசத்தியாகத் தெரிகிறது (சில சண்டைக்காட்சிகள் மட்டும் விதிவிலக்கு). திரைக்கதையில் சில அசட்டுத்தன மாற்றங்கள் செய்து சொதப்பியிருக்கிறார்கள் (மிக‌ முக்கியமாய் க்ளைமாக்ஸில் காமெடி பண்ணியிருக்கிறார்கள்). பூஞ்சையான அஜய் தேவ்கன் நம் கம்பீர சூர்யாவோடு ஒப்பிடும் போது பரிதாபமாகத் தெரிகிறார். போலவே அனுஷ்கா ஷெட்டியுடன் ஒப்பிடும் போது காஜல் அகர்வாலும். பிரகாஷ்ராஜ் இரண்டிலும் பொது. இந்தியில் முக்கியமான நடிகராக பிரகாஷ்ராஜ் வளர்ந்து வருகிறார். இயக்கம் ரோகித் ஷெட்டி (கோல்மால் படங்களை இயக்கியவர்). பத்தாண்டுகளாக இந்தி சினிமா ரசிகர்கள் மறந்திருந்த மசாலா சினிமாவை நம் தமிழ் இயக்குநர்கள் தான் அவர்களுக்கு மறுஅறிமுகம் செய்து கொண்டிருக்கிறார்கள் - முன்பு Wanted (பிரபுதேவா), அப்புறம் Ghajini (முருகதாஸ்), இப்போது Singham மூலம் ஹரி.

(தொடரும்)

அடுத்து வரவிருப்பவை - Aarakshan [आरक्षण], Not A Love Story & That Girl in Yellow Boots.

Comments

Anonymous said…
லூசா நீ?அதான் subtitles இருக்குதே அதை பயன்படுத்தி பாரு!!நல்ல புத்திசாலி போ!!
Anonymous said…
subtitle என்று ஒரு வஸ்து இருப்பது நம்ம intellectual உக்கு எப்படி தெரியாம போனது?டவுன்லோட் பண்ணி சப்டைட்டில் போட்டு பாரு!
@Anonymous
துரதிர்ஷ்டவசமாக தியேட்டர்களில் சப்டைட்டில்கள் காட்டப்படுவதில்லை, நண்பரே..
viki said…
@CSK
உங்களுக்கு நல்ல ரசனை!ஹிந்தி எளிதாக கற்று கொள்ளலாம்!!Rosetta stone என்கிற மென்பொருள் உள்ளது!மேலும் எளிய வழி ஏற்கேநீவே தமிழில் வந்த படங்கள் ஹிந்திக்கு ரீமேக் ஆகும்போது அதை பார்த்தால் ஹிந்தி நல்லா புரியும்!(உம.போக்கிரி,காவலன்,சிங்கம்,அடுத்து வர உள்ள காக்க காக்க)
kobiraj said…
நல்ல பகிர்வு
Thameez said…
यह सब हिंदी फिल्मो देखना चालु करदिये.

இது எல்லாம் ஹிந்தி படம் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்