பரத்தை கூற்று : நெ.பார்த்திபன்
பரத்தை கூற்று புத்தக வெளியீடு குறித்து பதிவர் நெ.பார்த்திபனின் பதிவு:
*******
http://www.parthichezhian.com/2011/01/charu-on-my-wedding.html
*******
மறக்க முடியாத நாள் - Charu on my Wedding
Posted by N.Parthiban at Friday, January 28, 2011
நான் எழுதிய இரண்டாவது கடிதத்திற்கு ஜனவரி 14, 2010 இல் பதில் எழுதிய சாரு "பொதுவாக எனக்கு வைபவங்களில் கலந்துக் கொள்வது கூச்சமாக இருக்கும். இது வரை பசுபதி, பாஸ்கர் ஆகிய நண்பர்களின் திருமணங்களுக்கு மட்டுமே சென்றிருக்கிறேன் ஆனால் உங்கள் திருமணத்திற்கு வருகிறேன்" (பக்கம் 46 - கடவுளும் சைத்தானும்)
இதை அவர் எழுதி சரியாக ஒன்பது மாதங்கள் கழிந்து அக்டோபரில் எங்கள் திருமணம் நிச்சயிக்கபட்டதும் சாருவிற்கு போன் செய்து அவரை சந்திக்க வேண்டும் என்று கேட்ட போது என்னை அக்டோபர் 16 ஆம் தேதி நடக்கும் நண்பர் சரவண கார்த்திகேயன் அவர்களின் "பரத்தை கூற்று" நூல் வெளியிட்டு விழாவில் சந்திக்குமாறு கூறினார். சரியாக மாலை ஐந்து மணிக்கு டிஸ்கவரி புக் பேலஸ் சென்று அந்த விழாவில் கலந்து கொண்டு சாருவின் பேச்சை கேட்ட அந்த நாள் மறக்க முடியாதது... முதல் வரிசையில் இருந்த சாரு எழுந்து முன்னே சென்று பேசிய போது இடம் இல்லாமல் நின்றுக் கொண்டிருந்த நான் அவரின் இருக்கையிலேயே சென்று அமர்ந்துக் கொண்டேன் (சாருவின் ஒரு மணி நேர பேச்சை என் டிஜிட்டல் கமெராவில் வீடியோ பதிவு செய்யவும் அது உதவியாய் இருந்தது)... கவிதைகள் பற்றி சாருவின் பேச்சை கேட்டு மெய்மறந்தே விட்டேன்... பரத்தை கூற்று பற்றி அவர் சொன்ன ஒரு வரி இன்னும் நினைவில் உள்ளது "சரவண கார்த்திகேயனின் கவிதைகள் எல்லாம் மாஸ். ஒவ்வொரு கவிதையும் படிக்கப்பட்டால் சரியான விசிலும், கைதட்டலும் கிடைக்கும்... ஆனால் எனக்கென்னவோ இந்த வார்த்தைகள் பரத்தையர்களின் கூற்றாக படவில்லை... அவர்களின் வலி இதில் வெளிப்படவில்லை... ஒரு கவிஞனாக மட்டும் அல்லாமல் அவர்களின் இடத்தில் நம்மை நிறுத்தி உணர்ந்து எழுதினால் மட்டுமே இந்த கவிதைகள் முழுமை பெரும்" இப்படிப்பட்ட நேர்மையான தில்லான விமர்சனம் சாருவிடம் மட்டுமே வரும்... இதையே தான் சாருவும் அவரின் புத்தகங்களுக்கான விமர்சனங்களிலேயும் எதிர்பார்க்கிறார்(படிக்காமல் பேசப்படும் விமர்சனங்கள் அல்ல)

Comments