காதல் செய்வீர், உலகத்தீரே!

காதலித்தவர்கள்
காதலிப்பவர்கள்
காதலிக்கவிருப்பவர்கள்
காதலிக்கப்படுப‌வர்கள்
காதலில் தோற்றவர்கள்
காதலில் ஜெயித்தவர்கள்
காதலை வெறுப்பவர்கள்
காதலை எதிர்ப்பவர்கள்
காதலில்‌ மரித்தவர்கள்
காதலில் ஜனித்த‌வர்கள்
காதலில் ஏமாறுபவர்கள்
காதலில் ஏமாற்றுபவர்கள்
காதலுக்காக இழந்தவர்கள்
காதலினால் பெற்றவர்கள்
காதலினால் கற்றவர்கள்
காதலை நிராகரித்தவர்கள்
காதலில் நிராகரிக்கப்பட்ட‌வர்கள்
காதலித்து வெளியேறியவர்கள்
காதலுக்காகக் காத்திருப்பவர்கள்
காதலை வெளியே சொல்லாதவர்கள்
காதலிப்பதை ஒப்புக் கொள்ளாதவர்கள்
காதலித்து கல்யாணம் செய்தவர்கள்
கல்யாணம் செய்து காதலிப்பவர்கள்
கல்யாணத்துக்கு வெளியே காதலிப்பவர்கள்
இதுகாறும் காதலிக்காதவர்கள்
*
காதலியுங்கள்.

No comments: