அறம் - ஒரு விவாதம்

'அறம்' என்கிற ஜெயமோகனின் சமீபத்தைய சிறுகதை குறித்து BUZZல் நேற்று நடந்த விவாதம் இது. அதில் நான் கலந்து கொண்ட பகுதிகளை மட்டும் இங்கே தருகிறேன்.

இது ஒரு மோசமான விவாதத்துக்கு உதாரணம் என்று பதிவர் வடகரை வேலன் நேற்று குறிப்பிட்டார். இப்போது யோசித்துப் பார்த்தால் எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.

முழு விவாதத்தையும் படித்து இன்புற‌‌ விரும்புபவர்கள் இந்த சுட்டிக்குச் செல்லலாம்:
http://www.google.com/buzz/115511813610845200164/29EChKnwzey/அறம-ப-ட-தல-என-பத-ப

*******

ஜ்யோவ்ராம் சுந்தர் :
அறம் பாடுதல் என்பதைப் பலர் கேள்விப்பட்டிருக்கிறோம்.

ஆனால் நிறைய பேர் இந்தக் கதையை ரொம்ப ஓவராகச் சொல்கிறார்களோ எனத் தோன்றுகிறது. எம்விவி என்ற பெயரோடு இணைத்துப் பார்ப்பதால் இப்படி இருக்குமோ என நினைக்கிறேன்.

அறம் என்பதை எதிக்ஸ் என்று அர்த்தப்படுத்திக் கொண்டால், அந்தப் பதிப்பாளன் எழுத்தாளனிடம் நீ மட்டும் என்ன சுட்டுத்தான எழுதினே என்று சொல்லும் இடத்தில் சிறுகதைக்கான முரண் கிடைத்துவிடுகிறது எனக்கு.

அறம் பாடுதல், அதன் தொடர்ச்சியான விஷயங்கள் என்று வலிந்து திணிக்கப்பட்ட மெலோ டிராமாவாகத் தெரியுது எனக்கு.

நல்ல வாசிப்பனுபவத்தைத் தந்த சிறுகதைதான். ஆனால் ஜெமோவின் பெஸ்ட் என்றெல்லாம் என்னால் சொல்ல முடியவில்லை.

http://www.jeyamohan.in/?p=11976

Saravanakarthikeyan C :
//ஜெமோவின் பெஸ்ட் என்றெல்லாம் என்னால் சொல்ல முடியவில்லை.//

ஜ்யோவ்ராம், நீங்கள் தான் ஜெமோவையே பெஸ்ட் இல்லை என்று சொல்பவர் ஆயிற்றே!

ஜ்யோவ்ராம் சுந்தர் :
சிஎஸ்கே, அதிலென்ன சந்தேகம், நிச்சயம் ஜெமோ பெஸ்ட் இல்லைதான்.

Saravanakarthikeyan C :
//நிச்சயம் ஜெமோ பெஸ்ட் இல்லைதான்//

ஜ்யோவ்ராம், அவரு பெஸ்ட் இல்லைனா, சமகால எழுத்தாளார்களில் (புனைவு, அபுனைவு எதுவாகினும்) பெஸ்ட் யார் சார்? நிஜமாவே தெரிஞ்சுக்கலாம்னு தான் கேக்குறேன்..

வடகரை வேலன் :
சி எஸ்கேவின் கருத்து தேவையில்லாதது என்பது என் எண்ண்ம். ஜ்யோவின் கருத்துச் சரியே.

ஆகச் சிறந்தது என்பதெல்லாம் கொஞ்சம் கூடுதல். நல்ல சிறுகதை.

ஜெமோ இதைவிடச் சிறந்த கதைகள் எழுதி இருக்கிறார்; என்பதையும் ஜ்யோவே சொல்கிறர்.

Saravanakarthikeyan C :
வடகரை வேலன், அறம் ஜெமோவின் மிகச்சிறந்த கதை அப்படின்னு எங்கும் நான் சொன்னதா நினைவில்லை.. நான் சொல்ல வந்ததன் சாரம் என்னவெனில் ஜெமோ ஒரு மெடியாக்கர் எழுத்தாளர்னு ஜ்யோவ்ராம் ஏற்கனவே ஒருமுறை சொல்லிட்டப்புறம் அவர‌து ஒரு நல்ல கதையை மட்டும் இப்போதென்ன கொண்டாடவா போகிறார் என்ற அர்த்தத்தில் மட்டும் தான்.

தவிர இந்த தேவையில்லாத கருத்து, தேவையான‌ கருத்து என்பதை எப்படிப் பிரித்த‌றிந்து கொள்வது?

வடகரை வேலன் :
சி எஸ் கே, இன்றைக்கு நல்ல மூடில் இருக்கிறீர்கள் போலிருக்கிறது. எஞ்சாய் மாடி.

Manikandan Viswanathan :
//தவிர இந்த தேவையில்லாத கருத்து, தேவையான‌ கருத்து என்பதை எப்படிப் பிரித்த‌றிந்து கொள்வது?//

சி எஸ் கே, எழுதப்பட்ட மேட்டரில் இருந்து வேறு எங்காவது இழுத்து செல்லும் சாத்தியக்கூறுகளை கொண்ட அதி முக்கிய கருத்துக்கள் தேவையில்லா கருத்து என்று ப்ளாகர்கள் மற்றும் பஸ்ஸர்களால் கண்டறியப்பட்டுள்ளது.

வெண்பூ :
@சி எஸ் கே: யார் பெஸ்ட் அப்ப‌டிங்குற‌து ஆளுக்கு ஆள் மாறும். அதிமுக‌வை கேட்டா அம்மாதான் சிற‌ந்த‌ முத‌ல‌மைச்ச‌ர் அப்ப‌டிம்பாங்க‌. திமுக‌வை கேட்டா க‌லைஞ‌ர் அப்ப‌டிங்குற‌ ப‌தில்தான் கிடைக்கும்.

உங்க‌ வாசிப்புக்கு உங்க‌ மைன்ட்செட்டுக்கு நீங்க‌ ஜெமோ பெஸ்ட்டுன்னு சொல்லுவீங்க‌. சுந்த‌ர்ஜியோட‌ பார்வையில‌ அவ‌ர் இல்லைன்னு நினைக்குறாரு, இதில் என்ன‌ த‌வ‌று?

நான் பெஸ்ட்டுன்னு சொல்ற‌ ஆளைத்தான் உல‌க‌மே சொல்ல‌ணும்னு எதிர்பார்க்க‌முடியாது இல்லையா?

Saravanakarthikeyan C :
Manikandan, நான் சொல்ல வந்தது நிச்சயம் விஷயத்தை திசை திருப்பும் முயற்சி அல்ல.. ஜ்யோவ்ராம் சொல்லும் ஒரு புதிய கருத்தைப் பற்றிய விவாதத்துக்கு அவரது முந்தைய‌ கருத்தைத் துணைக்கழைத்து கேள்வி கேட்பது எந்த தர்க்கத்தின் படி திசை திருப்புவதாகும் எனப் புரியவில்லை.

அப்படிப்பார்த்தால் இதுவும் (தேவையில்லாத கருத்து, தேவையான‌ கருத்து பிரித்தறிதல்) அப்படிப்பட்ட ஒரு தேவையில்லாத விவாதம் தான்!

Manikandan Viswanathan :
சி எஸ் கே - மறுபடியும். நான் கூறியது சாத்திய கூறுகள் உள்ள கருத்தை பற்றி தான். நீங்கள் அப்படி பின்னூட்டம் போட்டவுடன் இது போன்ற எலக்கிய buzz என்றால் காத தூரத்தில் இருக்கும் நானும் வெண்பூவும் மாறி மாறி பின்னூட்டம் போடுகிறோமே. அதை தான் சொன்னேன்.

ஜ்யோவ்ராம் சுந்தர் :
அண்ணாச்சி, சிஎஸ்கே பத்தி நீங்க சொன்னதையேதான் நானும் சொல்லப் போறேன் :)

தேவையான ஆணி, தேவையில்லாத ஆணின்னு எப்படிக் கண்டுபிடிக்கறது? பேசாம ஆணியே புடுங்க வேணாம்னு மூடிட்டுப் போயிட வேண்டியதுதான் :)

Manikandan Viswanathan :
வேலன், நான் எழுதியதற்கு ஒரே காரணம் தான். நீங்களும் சி எஸ் கேயும் இதை பற்றி பேசாமல் மறுபடியும் கதை பற்றி பேச ஆரம்பித்து விடுவீர்களோ என்ற பயம்.

எனக்கு adam gilchrist யின் autobiography "true colors" மற்றும் Rahul dravid இன் எழுதப்படாத autobiography யை பற்றி மட்டும் தான் பேச பிடிக்கும். இதில் எது சிறந்த இலக்கியம் என்று முடிவு செய்ய ஜ்யோவ்ராமை கூப்பிட மாட்டேன் :-)

Saravanakarthikeyan C :
வெண்பூ, Manikandan, வடகரை வேலன், ஜ்யோவ்ராம் - ஜெமோவின் கருத்துக்களோடு வேண்டுமானால் முரண்படலாம் (அவருக்கு பரிந்து பேசும் நானே முரண்படுகிறேன்). ஆனால் எழுத்தாளராக அவரது உச்ச இடத்தை நிராகரிக்கவே முடியாது. எழுத்து என்கிற craftல் அவர் ராஜாதி ராஜா.. அதை ஒப்புக்கொள்ளாதிருக்கவே முடியாது.. வேண்டுமானால் கேட்ட கேள்விக்கு பதில் இல்லையென்றால் to the point பேசாமல் "மூடிட்டுப் போயிட வேண்டியதுதான்" என்று சொல்லித் தப்பித்துக் கொள்ளலாம்.

வெண்பூ :
//எழுத்து என்கிற craftல் அவர் ராஜாதி ராஜா//

"உங்க‌ பார்வையில்"

வடகரை வேலன் :
சி எஸ் கே, ஒரு விவாதம் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு இந்த பஸ் நல்ல உதாரணம்.

நல்ல பஸ். நன்றி சுந்தர்.

வெண்பூ :
என‌க்கும் ஜெமோ பிடிக்கும். அதுக்காக‌ அவ‌ர்தான் தி பெஸ்ட், ம‌த்த‌வ‌ங்க‌ எல்லாம் அவ‌ருக்கு கீழ‌ன்னு சொல்ற‌வ‌ங்க‌ளுக்கு இல‌க்கிய‌வாதிக‌ள் மொழியில‌ ஒரு வார்த்தை இருக்கு, உங்க‌ளுக்கே தெரிஞ்சிக்கும்..

Saravanakarthikeyan C :
வடகரை வேலன், கருத்து சொல்பவ‌ரின் அரசியலைப் பற்றி இவ்விஷயத்தில் அவர‌து ஒட்டுமொத்த நிலைப்பாட்டினைப் பற்றி கேள்வி எழுப்பினால் அது விவாதத்தை திசை திருப்புவதாகவும், மோசமான விவாதமாகவும் சொல்கிறீர்கள்..

எந்தக்கருத்தும் தனித்து இயங்குவது கிடையாது.. சொல்பவரின் உளவியலையும் கணக்கில் எடுத்துக் கொண்டே அதை மதிப்பிட வேண்டும் என நினைக்கிறேன்..

எதிர்கருத்தே சொல்லக்கூடாது என்றால் என்ன அர்த்தம். குறைந்தபட்ச நேர்மையை எதிர்பார்த்தே இதில் நுழைந்தேன்..

Saravanakarthikeyan C :
//இதில் எது சிறந்த இலக்கியம் என்று முடிவு செய்ய ஜ்யோவ்ராமை கூப்பிட மாட்டேன்//

பரமசிவனுடன் கழுத்திலிருக்கும் பாம்பு, "கருடா சௌக்கியமா?" என்கிறதாம்.. Buzz சிலருக்கு பரமசிவன்..

ஜ்யோவ்ராம் சுந்தர் :
சிஎஸ்கே, சாரி.

you please continue.

வெண்பூ :
//எந்தக்கருத்தும் தனித்து இயங்குவது கிடையாது.. சொல்பவரின் உளவியலையும் கணக்கில் எடுத்துக் கொண்டே அதை மதிப்பிட வேண்டும் என நினைக்கிறேன்..//

You answered it... இப்போ இங்க‌ நீங்க‌ சொல்ற‌ எல்லாத்துக்கும் உங்க‌ உளவிய‌ல் கார‌ண‌மா இருக்கு. அப்ப‌ எப்ப‌டி நீங்க‌ நேர்மையா பேசுறீங்க‌ன்னு சொல்ல‌ முடியும்?

Saravanakarthikeyan C : //இப்போ இங்க‌ நீங்க‌ சொல்ற‌ எல்லாத்துக்கும் உங்க‌ உளவிய‌ல் கார‌ண‌மா இருக்கு.//

வெண்பூ , Perfect.. மிகச்சரி.. இல்லையென்று சொல்லவில்லை.. ஆனால் அதை விவாதித்தறிய‌ வேண்டுமென்கிறேன்..

வடகரை வேலன் :
சி எஸ் கே, எனக்குத் தெரிந்தவரை பிடித்த எழுத்தாளர் எழுதியதெல்ல்லாம் சரி, பிடிக்காதவர் எழுதினால் குப்பை என்ற நிலைப்பாடு சுந்தருக்கு இல்லை.

உ-ம் தேகம் நாவல் பற்றிய அவரது விமர்சனம்.

எனில் ஜெமோ குறித்த முன்னர் சொல்லிய கருத்துக்கு என்ன அவசியம்?

மேலும் ஜொமோ இப்படித்தான் எழுதுவார் ஜெமோ எழுதியதாலேயே இது மோசம் எனச் சொல்லவில்லையே?

எனில் இதில் முதலிடம் கடைசி இடம் எல்லாம் எங்கே வந்தது?

Manikandan Viswanathan :
வெண்பூ, சி எஸ் கே சொல்வதை கொஞ்சம் யோசித்து பாருங்கள். ஜ்யோவ்ராம் சுஜாதாவையோ / ஜெயமோகன் எழுத்தையோ ஒரு முறையாவது இது அருமை / எனக்கு பிடித்து இருக்கிறது என்று எழுதி இருக்கிறாரா ?

யாராவது ஒருவர் ஜெயமோகன் நாவல் குறித்து அருமை என்று எழுதினால் மட்டும் வந்து அதை விட அருமையாக பலது இருக்கிறது என்று சொல்லுவார். அவரை நன்கு புரிந்தவரால் மட்டும் தான் அதை எளிமையாக எடுத்துக்கொள்ளமுடியும்

Saravanakarthikeyan C :
ஓக்கே

Comments

R. Gopi said…
CSK, இந்த விவாதம் குறித்து நான் எதுவும் சொல்லப் போவதில்லை. ஒன்றே ஒன்றைத் தவிர.

அறம் என்பதை நான் இவ்வாறு புரிந்துகொள்கிறேன். "செய்த வேலைக்குக் கூலி. அதுவும் எந்த விதத் தாமதமும் இல்லாமல்".

இந்தக் கதை ஜெமோவின் பெஸ்ட் ஆக இல்லாமல் இருக்கலாம். ஆனால் இது அச்சு அசல் அனுபவம். அந்த வகையில் இது என்னைப் பொறுத்தவரை முக்கியமான கதை.

மேலும் இந்தக் கதையை உலகின் எந்தத் தொழிலாளிக்கும், அலுவலருக்கும் பொருத்திப் பார்க்கலாம் (universal application). அந்த வகையிலும் எனக்கு இது பிடித்திருக்கிறது.

சுசீலா மேடம் இந்தக் கதை குறித்து ஒரு பதிவு எழுதியிருக்கிறார். சமயமிருப்பின் பாருங்கள். http://www.masusila.com/2011/02/blog-post.html

நன்றி.

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்