பரத்தை கூற்று : TESTIMONIALS

"சுஜாதா இருந்திருந்தால் கொண்டாடியிருப்பார்."
- சாரு நிவேதிதா, எழுத்தாளர்

"It is beautiful and most of it, very bold. Good work!"
- Meena Kandasamy, Poet

பெண்ணுடல் பற்றிய பேச்சுக்களைப் பூச்சுகள் அற்றுக் கவிதையாக்க முயன்றுள்ள கவிஞரின் கவித்துவ வேட்கை, ஆழமான கேள்விகளை எழுப்புகிறது.
- ந.முருகேச பாண்டியன், எழுத்தாளர்

"அவசியம் படித்து நாம் உரையாட வேண்டிய தொகுப்பு பரத்தை கூற்று."
- மாதவராஜ், எழுத்தாளர்

"ஒரு வாசிப்பிலேயே மனதை பூக்க வைக்கிற பல கவிதைகள் தொகுப்பில் உள்ளன."
- கீதாஞ்சலி பிரியதர்ஷினி, கவிஞர்

"ஆழமான அழுத்தமான விஷயங்களை எளிய சொல்லாடல் மூலம் அற்புதமாக பதிவு செய்திருக்கிறது."
- கல்யாண்குமார், பத்திரிக்கையாளர்

"சிஎஸ்கேவினுடைய மொழி சித்தர் மரபின் நீட்சி."
- செல்வேந்திரன், எழுத்தாளர்

"இக்கவிதைகளின் உன்னதக் கேள்விகள் முக்கியமானவையாகப் படுகிறது."
- பொன்.வாசுதேவன், கவிஞர்

"வித்யாசமான முயற்சி. பலபேரின் கவனத்தை நிச்சயம் கவரும்."
- விஜய் மகேந்திரன், எழுத்தாளர்

"அவளை பற்றிய சித்திரம் மனதில் ஓடுகிறது. அதைவிட அந்த சித்திரம் ஏற்படுத்தும் வலி அதிக அதிர்வுகளை தருகின்றது. பல இடங்களில் அவ்வ‌லியை உணர முடிகின்றது."
- என்.விநாயகமுருகன், கவிஞர்

"வலியை எள்ளலுடன் சொல்லியிருக்கிறார். அதிர்ச்சி மதிப்பீடு!"
- நேசமித்ரன், கவிஞர்

"பரத்தையர் பற்றிய குரலை வரவேற்கிறேன். இத்தொகுப்பை ஒரு நல்ல முயற்சி என்று நான் குறுக்கிவிட விரும்பவில்லை. நிச்சயம் அதற்கும் மேலான இடம் இதற்கு உண்டு."
- ச.முத்துவேல், கவிஞர்

"மிகச்சிறந்த கவிதைத்தொகுப்பாக வெளிவந்திருக்கிறது பரத்தை கூற்று."
- யாத்ரா, கவிஞர்

"நான் எதிர்பார்க்கும் உன்மத்தத்தைப் பரத்தை கூற்று கொடுத்தது."
- மதன், கவிஞர்

"நூற்றைம்பது பாக்களில் ஒரு இருபது மனதைப் பிசைகிறது."
- லதாமகன், கவிஞர்

"சில சிந்தனைகள் பிரம்மிக்க வைக்கின்றன. நல்ல தொகுப்பு."
- லக்ஷ்மி சாஹம்பரி, கவிஞர்

"நிஜமாவே பிடிச்சிருக்கு. சாரு சொன்னா மாதிரி விசில் அடிச்சிக்கிட்டே புரட்டுறேன்."
- யுவகிருஷ்ணா, பத்திரிக்கையாளர்

"ஆக மோசமான குப்பை இது."
- ஜ்யோவ்ராம் சுந்தர், வலைப்பதிவர்

"Read few pages. Should give credit to him for this."
- Dr.ப்ரூனோ, வலைப்பதிவர்

"பொதுவெளியில் தைரியமாக பேச முடியாத விஷயமாகவே இருக்கும் பாலியல் தொழிலாளிகள் பற்றிய தன் கருத்துக்களை ஆணித்தரமாக பதிவு செய்திருக்கிறார்."
- கார்த்திகைப்பாண்டியன், வலைப்பதிவர்

"அதிர்ச்சி மதிப்பீடிற்கோ அல்லது அவசரமாக எழுதப்பட்ட தொகுப்போ இல்லை இது."
- R.கோபி, வலைப்பதிவர்

"பரத்தைகளின் உணர்வுகளில் காமத்தை தவிர மற்ற எல்லா உணர்வுகளும் கூட ரகசியம்தான். அதைப் போட்டு உடைக்கும் கவிதைகள் தான் பரத்தை கூற்று."
- கிருஷ்ணபிரபு, வலைப்பதிவர்

"இரு நாட்களாகியும் தாக்கத்திலிருந்து இன்னும் மீள முடியவில்லை - மிரட்டல்!"
- வேங்கடரமணன், வலைப்பதிவர்

"கவிதைகளை விமர்சிக்கும் தகுதி எனக்கு இல்லை. இரவு முழுவதும் இருமுறை எல்லாக் கவிதைகளையும் வாசித்துவிட்டு, நண்பர்களுக்குப் பரிந்துரை செய்கிறேன்."
- கார்த்திக், வலைப்பதிவர்

"பிற மொழிகளில் மொழிபெயர்க்க வேண்டிய எல்லா தகுதியும் பெற்ற தொகுப்பு."
- நாகராஜன், வலைப்பதிவர்

"இன்றல்ல. நண்பனாக என்றோ நான் பெருமை அடைந்துவிட்டேன்."
- நவீன் குமார், வலைப்பதிவர்

"எழுத முடிந்த பார்வைக்காக, பெண் மொழிக்காக வணங்குகிறேன்."
- சம்பங்கி மனோரஞ்சிதம்

Comments

ŃąVêέŃ said…
இன்றல்ல. நண்பனாக என்றோ நான் பெருமை அடைந்துவிட்டேன். ...இதனையே என் Testimonialஆகக் கொள்ளலாம்.

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்