படித்தது / பிடித்தது - 93

எல்லாம் வாய்க்கிறது..

எதிர்வீட்டுக் குழந்தையுடன் குலாவல்...
படி கூட்டும் பெண்ணிடம் விசாரணை..
பேரம் பேசிக் காய்கறி...
காக்காய்க்குச் சுடுசோறு..
தொலைபேசியில் தாய்வீட்டில் கொஞ்சல்...
தோழிகளிடம் அளவளாவல்..
அலுவலில் இருக்கும் கணவரிடம்
குறுந்தகவலில் குறும்பு..
மிச்சம் கிடக்கும் நொறுக்குத்தீனி...
பாதி படித்து மறந்த புத்தகம்..
ஆர அமரக் குளியலுடன் ஒரு பாட்டு..
தென்னங் காற்று..
தெருமுக்கு அம்மன் கோயில்..
பூத்துக் கிடக்கும் தோட்டம்..
எல்லாம் வாய்க்கிறது..
கணனியும் ., தொலைக்காட்சியும்
சீவனற்று சடமான
மின் தடையின் போது..

- தேனம்மை லெக்ஷ்மணன்

நன்றி: சும்மா

4 comments:

தேனம்மை லெக்ஷ்மணன் said...

நன்றி சரவண கார்த்திகேயன்..

udhaya parama said...

supera sollittinga,powercut sila samaiyam nallathu than

udhaya parama said...

supera sollirukkinga..kettathulayum nallathu

Thenammai Lakshmanan said...

ஐந்து புத்தகங்கள் வந்துள்ளனவா. வாழ்த்துகள் சரவணகார்த்திகேயன் :)