பரத்தை கூற்று : மேலும் சில பதிவுகள்

பரத்தை கூற்று தொகுப்பு மற்றும் நிகழ்வு குறித்து மேலும் இரண்டு இடுகைகள்:

*******

http://ilainunithuligal.blogspot.com/2010/10/blog-post_18.html

Monday, October 18, 2010 Posted by gopikrish.k at 7:05 PM

பரத்தை கூற்று

“புழுவோ மண்ணோ
கழுகோ நெருப்போ
தின்னப் புகும் முன்
நீயும் ருசித்துப் போ”

“எத்தனை பேர் நட்ட குழி
எத்தனை பேர் தொட்ட முலை
எத்தனை பேர் பற்றியிழுத்த உடல்
எத்தனை பேர் கற்றுணர்ந்த பாடல்”

- பரத்தை கூற்று, சி.சரவணகார்த்திகேயன்

The first one is a sheer example of attitude. It just throws away the society and makes it so mean.

The second one.. wow.. wow.. "எத்தனை பேர் கற்றுணர்ந்த பாடல்" - இந்த கவிதையின் உயிரனைத்தையும் தேக்கி நிற்க்கிறது இந்த வரி.. பலர் ரசித்து இன்புற்ற பாடலுக்கு இணையாக உடலை உருவகித்ததில் கவிதை உயிர்பெறுகிறது..

*******

http://yerumbu.blogspot.com/2010/11/buzz-collection.html

Monday, November 1, 2010 Posted by எறும்பு at 12:13 PM

சின்ன சின்ன (Buzz collection)

"பரத்தை கூற்று" புத்தக வெளியீடுக்கு சென்றிருந்தேன். நல்ல கூட்டம். காற்று புக இடம் இல்லாமல் வேர்த்து வழிந்து கொண்டிருந்தது. எனக்கு முன் நின்று கொண்டிருந்தவர் சாருவின் பேச்சை சுவாரசியமாய் கேட்டு கொண்டிருந்தார். சாரு, "இப்ப ஒரு புத்தகம் எழுதி கொண்டுருக்கிறேன், அது என் வாழ்கையில் இரண்டு வருடம் ஆண் விபச்சாரியாய் இருக்கும்பொழுது நடந்த சம்பவங்களை பற்றியது*" என்றவுடன், எனக்கு முன் நின்றிருந்தவர் கெக்கேபிக்கே என்று சிரித்து இறங்கி ஓடிவிட்டார்.

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்